யினனென்று வியாசபாரதத்தாற் பெறப்படும். வனைவற்றகாதல், முனைவற்ற வாய்மை என்பன பாடாந்தரங்கள். (207) 53. | காண்டற்கரியமணிப்பைம்பொற் கலனொடாடை வேண்டற்கரியவிடயங்களின் வேடமாற்றித் தீண்டற்கரியதிருமேனியன் றேவராலும் பூண்டற்கரியபெருமாதவம் பூண்டுகொண்டான். |
(இ-ள்.) தீண்டற்கு அரிய திரு மேனியன் - (பிறராற்) பெறுதற்கரிய ஒளியை(த் தன்) உடம்பிற்கொண்டவனாயிருந்த அந்தப் பாண்டு,- காண்டற்கு அரிய - காண்பதற்கு அருமையான [அருமைப்பட்டுத் தேடியடைதற்குரிய], மணி - இரத்தினங்களினாலும், பைம் பொன் - பசும்பொன்னினாலுமியன்ற, கலனொடு - அணிகலன்களுடனே, ஆடை- பொற்பட்டாடையும், வேண்டற்கு அரிய - வேண்டிப்பெறுதற்கு அருமையான, விடயங்களின் - ஐம்புலன்களினோடு, வேடம் - (தன் அரசக்) கோலத்தையும், மாற்றி - ஒழித்திட்டு,- தேவராலும்,- பூண்டற்கு அரிய - மேற்கொள்ளுதற்கு அருமையான, பெரு மா தவம் - பெருமைபெற்ற சிறந்த தவத்தை, பூண்டு கொண்டான்-; (எ-று.) அணிகலன்களை அணிதலை யொழித்துச் சடைமுடி மரவுரி முதலிய தவக்கோலத்தைப்பூண்டு, பாண்டு தவஞ்செய்யலாயின னென்பதாம். பாண்டு சதச்ருங்கபர்வத்தில் தவம்புரிந்தானென்று நூல்கள் கூறும். (208) 54.-பாண்டு ஞானமுனியாதல். உற்றுப்புறத்துப்பகையாடி யுடன்றவெல்லாம் செற்றுப்புவியிற்றனியாழி செலுத்துநீரான் பற்றற்றயோகப்படையாலுட் பகைகளாறும் முற்றத்துறந்துபெருஞான முதல்வனானான். |
(இ-ள்.) புறத்து - வெளியிலே, பகை உற்று - பகையாகப்பொருந்தி, ஆடி - (எதிரிலே) சஞ்சரித்து, உடன்ற எல்லாம் - மாறுபட்ட எல்லாரையும், செற்று - அழித்து, புவியில் - பூமியிலே, தனி ஆழி - ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தை, செலுத்தும் - நடத்திய, நீரான் - தன்மையனாயிருந்த பாண்டு மகாராசன்,- பற்று அற்ற - நசையென்பதை நீக்குவதனாற் பெறுகின்ற, யோகம் படையால் - யோகமென்று சொல்லப்படுகின்ற ஆயுதத்ததால், உட்பகைகள் ஆறுஉம் - காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஆறுபகைகளையும், முற்ற - முழுவதும், துறந்து - ஒழித்து, பெருஞானம் முதல்வன் - பெருத்தஞானத்தைப்பெற்ற முதல்வனாக, ஆனான்-; (எ-று.) புறப்பகையைவென்று ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்திய தலைவனான பாண்டு, இப்போது அகப்பகையையொழித்து ஞானத்தைச்செலுத்தும் முதல்வனானானென்க: ஒருவனிடத்து மாறன இருநிலைதோன்றியனவெனக் கூறியது - முறையிற்படர்ச்சியணி எனப்படும் பரியாயவணியாம் . காமம்முதலியவற்றைப் பகையென்றதற்கு ஏற்ப, யோகத்தைப் படையென்றார்: இயைபுருவகம். (209) |