64.-பின்னும் வற்புறுத்திப் பிறர்செயலையும் பாண்டு காட்ட,மறுக்கமாட்டாமல் குந்தி, துருவாசரிடம் பெற்ற மந்திரமேன்மை தெரிவித்தல். பின்னும்பலகால்வருட்டிப் பிறர்பெற்றிகாட்டி மன்னன்புகல மடமாதுமறுக்கமாட்டாள் கன்னன்பிறந்ததொழியச் செழுங்கன்னியாகி முன்னம்பெருமாமறைமேன்மை மொழிந்திட்டாளே. |
(இ-ள்.) பின்னும்-, பலகால் - பலமுறை வருட்டி-வசப்படுமாறு சொல்லி, பிறர் பெற்றி காட்டி - அயலாருடைய தன்மையையும் எடுத்துக்காட்டி, மன்னன் - பாண்டுராசன், புகல - சொல்ல,- மடம் மாது - மடப்பமுள்ள அந்தக்குந்தி, மறுக்கமாட்டாள் - மறுத்துச்சொல்ல முடியாதவளாய்,- கன்னன் பிறந்து ஒழிய - கர்ணனென்பவன் (தனக்குப்புத்திரனாக விவாகம் நிகழ்வதற்கு முன்னமே) பிறந்ததைத் தவிர்த்து, செழு கன்னி ஆகி முன்னம் பெறு மாமறை மேன்மை - சிறந்தகன்னிகையாயிருந்து முன்புபெற்ற சிறந்த மந்திரத்தின் மேன்மையை, மொழிந்திட்டாள் - சொன்னாள்; ஸௌதாஸன் மதயந்தியென்ற தன்மனைவியிடம் வசிஷ்ட முனிவர் மூலமாய் அச்மகனென்ற புத்திரனைப்பெற்றதையும், திருதராஷ்டிரன் முதலிய தாங்களும் வியாசர்மூலுமாகப் பிறந்ததையும் பாண்டுமன்னன் குந்திதேவிக்கு நிதரிசனமாக எடுத்துக்காட்டினனென விவரங் காண்க. 'பலகால்வருந்தி' என்றும் பாடம். 'மொழிந்திட்டாளே' என்பது இன்னோசையாயிராமையால் இங்கு 'மொழிந்து நின்றாள்' என்றாற்போன்றுபாடமிருக்கலாம். (219) 65.-அதுகேட்டு மந்திரத்தால் மகப்பெறுமாறு பாண்டு அநுமதிதரவே, தருமராசனை மந்திரத்தால் குந்திதேவியழைக்க அன்னான் வருதல். மருமாலைவல்லியுரைகேட்டு மகிழ்ச்சிகூரும் பெருமாதவத்தோன்பணித்தேவிய பின்னர்முன்னர்த் தருமாதிபனைக்கருத்தான் மடத்தையலுன்னி அருமாமறையாலழைத்தாண்மற் றவனும்வந்தான். |
(இ-ள்.) மருமாலை வல்லி - மணம்பொருந்திய மாலையையணிந்த கொடிபோன்ற குந்திதேவியின், உரை - வார்த்தையை, கேட்டு-, மகிழ்ச்சிகூரும் - மகிழ்ச்சிமிக்க, பெரு மா தவத்தோன் - மிக்கசிறந்த தவமுடையவனாகிய பாண்டுராசன், பணித்து- (தன் உடன்பாட்டைச்) சொல்லி, ஏவிய பின்னர் - (மகப்பெற்றுக்கொள்ளக்) கட்டளையிட்டபின்பு,- முன்னர் - முதலில், மடம் தையல் - மடமைக்குணத்தைக் கொண்ட பெண்ணாகிய குந்திதேவி, தருமாதிபனை கருத்தால் உன்னி - யமதருமராசனை மனத்தினாலெண்ணி, அரு மா மறையால் அழைத்தாள் - (துருவாசமுனிவனுபதேசித்த) அரிய சிறந்த வேத மந்திரத்தாள் கூப்பிட்டாள்: அவனும் வந்தான்-; (எ-று.) (220) 66.- வந்தயமதருமராசனோடு சேர்ந்து குந்திதேவி அழகுமிக்காளாதல். வந்தித்த தெய்வ மெதிர்வந்துழி மன்னு கேள்வற் சிந்தித்த சிந்தை யினளாய்மலர்ச் சேக்கை சேர்ந்து |
|