பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்121

     (இ-ள்.) உதிட்டிரன் பிறந்த காலை - யுதிஷ்டிரன் பிறந்தபோது உலகினில்-,
உயர்ந்தோர் யார்உம் - உயர்ந்தவர்யாவரும், வதிட்டனை முதல் ஆ எண்ணும்
முனிவர்உம் - வசிட்டனை முதல்வனாகக்கொண்டு எண்ணப்படுகிற இருடியரும்,
வான்உளோர்உம் - தேவர்களும், நிதிபயன் பெற்றார்போல-நிதியாகிய பயனை
யடைந்தவர்போல,நேயமோடு - சினேகத்தோடு, உவகை கூர்ந்தார் - மகிழ்ச்சி
மிக்கவரானார்கள்: மதித்த - சிறந்தனவாக எண்ணப்பட்ட, நல் நிமித்தம் யாஉம்
- நல்ல நிமித்தங்களெல்லாம், மங்கலம் நிகழ்ந்த - மங்கலமாக நேர்பட்டன;
(எ-று.) - அன்றே - ஈற்றசை: தேற்றமுமாம்.

     உதிட்டிரன் = யுதிஷ்டிரன்: போரில் நிலையாக நிற்பவன் என்று
காரணப்பொருள்படும். உயர்ந்தோரென்றது - சாமானியமாய் உலகத்து
மேன்மையுற்றோரை.                                          (223)

69.- பாண்டு, மைந்தன்முகம்நோக்கி மகிழ்தல்.

தண்பிறையெழுச்சிகண்ட சலநிதியெனவேமைந்தன்
பண்புடைவதனநோக்கிப் பார்த்திவன்பாண்டுவென்பான்
கண்பனிதுளிப்பநெஞ்சங் கனிந்தினிதுருகமேனி
வண்புளகரும்பமேன்மேல் வரம்பிலாமகிழ்ச்சிகூர்ந்தான்.

     (இ-ள்.) தண் பிறை எழுச்சி கண்ட - குளிர்ந்த பிறைச்சந்திரனது
தோற்றத்தைக் கண்ட, சலநிதி என - சமுத்திரம்போல, மைந்தன் பண்பு உடை
வதனம் நோக்கி - குழந்தையின் நல்லிலக்கணமமைந்த முகத்தைநோக்கி,
பார்த்திவன் பாண்டுஎன்பான் - அரசனாகிய பாண்டு என்பவன், கண் பனி
துளிப்ப - (தன்) கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், நெஞ்சம் இனிது
கனிந்து உருக - மனம் நன்கு கசிந்துருகவும், மேனி வள் புளகு அரும்ப - தன்
உடலில் மிக்கமயிர்க் கூச்சுதோன்றவும், வரம்பு இலா மகிழ்ச்சி - எல்லையில்லாத
மகிழ்ச்சியை, மேன்மேல் கூர்ந்தான் - மேன்மேல் மிகப்பெற்றான்; (எ-று.)

     சலநிதி =  ஜலநிதி: வடசொல். மதிகண்ட கடல் பொங்குதல் இயல்பு.
பிறையை யுவமை கூறியதால், வளருந்தன்மையனாதல் பெறப்படும்.      (224)

70.-குந்திமகப்பெற்றதைக் கேள்வியுற்ற காந்தாரி
பொறாமைகொண்டு வயிறு உள்ளேகுழம்புமாறு கல்லால்
 மோதிக்கொள்ளுதல்.

அற்றனடுயரமெல்லா மருந்தவப்பயனான்மைந்தற்
பெற்றனள்குந்தியென்னும் பேருரைகேட்டவன்றே
உற்றனள்பொறாமைகல்லா லுதரமுட்குழம்புமாறு
செற்றனடனதுகேடு மாக்கமுஞ்சிந்தியாதாள்.

     (இ-ள்.) 'குந்தி-,- அரு தவம் பயனால் - அருமையான தவத்தின் பயனால்,
மைந்தன் பெற்றனள் - மைந்தனைப் பெற்றாள்: (அதனால்), துயரம் எல்லாம்
அற்றனள் - துன்பமெல்லாம் நீங்கினள், ' என்னும் - என்கிற, பேர் உரை -
எங்கும் பயின்ற வார்த்தையை, கேட்டஅன்றே - கேட்ட அப்போதே,-
(காந்தாரி),  பொறாமை உற்றனள் - பொறாமை யடைந்தவளாய், தனது கேடுஉம்
ஆக்கம்உம் சிந்தியாதாள்- (தான் செய்யப்போகிற செயலால்) தனக்குக்  கெடுதி