நேரிடுமோ அல்லது நன்மை நேரிடுமா என்பதையும் கருதாதவளாய், - உதரம் உள் குழம்பும் ஆறு கல்லால் செற்றனள்- (தன்) வயிறு உள்ளேகுழம்பும்வகை (அவ்வயிற்றைக்) கல்லால் மோதினாள்; (எ-று.) நூறுமகவைக்கொண்ட கருப்பமாதலால் அப்பிண்டம் இரண்டு யாண்டு சென்றும் கெட்டியாயிருக்கவே, குந்தி மகவைப்பெற்றதிற் பொறாமை கொண்டு காந்தாரி கல்லால் வயிற்றை மோதிக்கொண்டனளென்க. (225) 71.- காந்தாரியின்கரு பையோடு குருதிபொங்கப்பூமியில் விழ, வியாசன் சென்று அதனைக் காணுதல். மையறுசுபலன்கன்னி வயினிடைக்கருப்பஞ்சேரப் பையொடுகுருதிபொங்கப் பார்மிசைவிழுந்ததாகச் செய்யவன்விழுந்ததிக்கிற் செக்கர்வானென்னச்சென்று மெய்யுடையரியகேள்வி வேள்விகூர்வியாதன்கண்டான். |
(இ-ள்.) மை அறு சுபலன் கன்னி - குற்றமற்ற (கங்ந்தார தேசத்ததிபனான) சுபல னென்பானுடைய பெண்ணின், வயினிடை - வயிற்றிலேயுள்ள, கருப்பம்-, செய்யவன் விழுந்த திக்கில் செக்கர்வான் என்ன-சூரியன் அஸ்தமித்த திக்கிலே செவ்வானந்தோன்றுவது போல, பையொடு - கருப்பப்பையுடனே, குருதி பொங்க - இரத்தம்மேல் வழிய, பார்மிசை - பூமியின்மீது, சேர விழுந்தது ஆக - ஒருசேரவிழுந்திட, சென்று - (கருப்பம் விழுந்த இடத்திலே) சென்று, மெய்உடை அரிய கேள்வி வேள்வி கூர் - உண்மையையுடையவனும் அருமையான கேள்வியையுடையவனுமாகி வேள்வியினான் மிக்கவனான, வியாதன் - வியாசமுனிவன், கண்டான்-; (எ-று.) குருதிபொங்கவிழுந்த பைக்குச் செக்கர்வானம் உவமை; இவ்வுவமை பாலபாரதத்திலும் வந்துள்ளது, இனி, செய்யவன் - சூரியனானவன், விழுந்த - (தான்) விரும்பிய, திக்கில் - திக்கிலே, செக்கர்வான் என்ன - செக்கர்வானைக் காண்பதுபோல, வியாதன் விழுந்த கருப்பையைக் கண்டான் என்றலும் ஒன்று. (226) 72.- வியாசன் கோசத்தசையை நூறுகூறுசெய்து நெய்ந் நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப் பகுதியை ஒருகலசப்பானையிலிட்டு வைத்தல். சஞ்சலமானகோசத் தசையினைத்தாழிதோறும் எஞ்சலவாகநூறு கூறுசெய்திழுதிலேற்றி நெஞ்சலர்கருணையாள னின்றவக்குறையுஞ்சேர்த்தி அஞ்சில்வார்குழலியாகென் றாங்கொருகடத்தில்வைத்தான்.் |
(இ-ள்.) நெஞ்சு அலர் கருணை ஆளன் - நெஞ்சிலே நிரம்பிய கருணையையுடைய வியாசன்,- சஞ்சலம் ஆன - குழம்பிப்போய்விட்ட, கோசம் தசையினை - கருப்பையிலேயிருந்த மாமிசத்தை, எஞ்சல ஆக - குறைதலில்லாதனவாக, நூறு கூறு செய்து - நூறு பாகமாகச் செய்து, தாழிதோறும் - தாழிகளிலெல்லாமுள்ள, இழுதில் - நெய்யிலே, ஏற்றி-,- நின்ற அ குறைஉம் - எஞ்சிநின்ற அந்தக் குறையும், அம் சில் வார் குழலி ஆக என்று - அழகிய சில்லென்னும் அணியை |