பக்கம் எண் :

126பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) வாரியின் - கடல்போல, அதிர்ந்து விம்மும் - அதிர்ந்துஒலிக்கின்ற,
மங்கலம்முழவம் - மங்கலமுரசு, மேன்மேல்-, ஓரியின் குரலால் - நரியின்
ஊளையிடுங்குரலினால், ஓதைஒடுங்கின - ஓசையடங்கின; இடங்கள்தோறும்-
(அஸ்தினாபுரியின்) பல இடங்களிலும், பாரிய குலத்தோர் கண்ணின் -
பெருமைபெற்ற குலத்தவரின் கண்களிலே, உவகை நீர் பனிக்கும் முன்னே -
ஆனந்தக் கண்ணீர் துளிக்கும் முன்னே, சோனை மேகம் - (உற்பாதமாகத்
தோன்றி) இடைவிடாமற் பொழியும் மேகமானது, அந்தரத்தில் நின்றும் சோரி
சொரிந்தது - ஆகாசத்திலிருந்து இரத்தத்தைப் பொழிந்தது;(எ-று.)

     பாரிய, 'பருமை ' என்றபண்பின்மேல் வந்த குறிப்புப்பெயரெச்சம்.
'ஓதையடங்கின ' எனவும் பாடம்.                                (234)

80.- மற்றும் துரியோதனன்தம்பியரும் துச்சளையும்
தோன்றுதல்.

கோள்களினிலையாற்றீமை கொண்டனமுகூர்த்தந்தன்னில்
தேள்களிற்கொடியமற்றைச் சிறுவருஞ்சேரவோரோர்
நாள்களிற்பிறந்தபின்னர் நங்கையுமொருத்திவந்தாள்
தோள்களிற்கழையைவென்ற துச்சளையென்னும்பேராள்.

     (இ-ள்.) கோள்களின் நிலையால் - கிரகங்கள் நிற்கின்ற நிலைமையினால்,
தீமைகொண்டன - தீங்கைக்கொண்டனவான, முகூர்த்தந் தன்னில் -
முகூர்த்தங்களிலே,- தேள்களின் கொடிய மற்றை சிறுவர்உம் -
தேளைக்காட்டிலும் கொடுமையையுடைய மற்றைத்தம்பிமாரும், சேர - அடுத்து,
ஓர் ஓர்நாள்களில் பிறந்த பின்னர் - ஒவ்வொருநாளிற் பிறந்தபின்பு, தோள்களின்
கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் நங்கை ஒருத்திஉம் -
தோள்களினால் மூங்கிலை வென்ற துச்சளையென்னும் பேரையுடைய
ஒருபெண்ணும், வந்தாள் - தோன்றினாள்; (எ-று.)

    இதனால், துரியோதனன் தம்பிமாரெல்லாம் வீமசேனனுக்குப் பின்
பிறந்தவராவரென்பதை யறியலாம். துரியோதனன் பிறந்த நாளுக்கு அடுத்தநாள்
துச்சாதனன் அடுத்தநாள் மற்றொருவன் இவ்வாறாகத் துரியோதனன் தம்பிமார்
தொண்ணூற்றொன்பதின்மரும் தோன்றினரென்க,                    (235)

81.- காந்தாரி பெருமகிழ்ச்சிகொண்டு விளங்குதல்.

பின்னியபுதல்வராலும் பிறந்தமென்புதல்வியாலும்
துன்னியமகிழ்நனாலுந் துலங்கியசுபலன்பாவை
தன்னிகர்பரிதியாலுஞ் சதவிதழாலுஞ்செம்பொற்
கன்னிகையாலுஞ்சோதி கலந்தசெங்கமலம்போன்றாள்.

     (இ - ள்.) பின்னிய புதல்வரால்உம் - நெருங்கிய பலபுத்திரராலும், பிறந்த
மெல் புதல்வியால்உம் - பிறந்த மென்மையான புத்திரியாலும், துன்னிய
மகிழ்நனால்உம் - நெருங்கியகணவனாலும், துலங்கிய - விளங்கிய, சுபலன்
பாவை - சுபலனுடைய பெண்ணாகிய காந்தாரி, தன் நிகர் பரிதியால்உம் -
தனக்குத்தானே ஒப்பான