பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்127

சூரியனாலும், சதம் இதழாலும் - (தான் பெற்றுள்ள) நூறுஇதழ்களாலும், செம்
பொன் கன்னிகையால்உம் - செம்பொன்னிறமான பொகுட்டாலும், சோதி கலந்த
- ஒளிபொருந்திய, செம் கமலம் - செந்தாமரையை, போன்றாள் - ஒத்தாள்;(எ-று.)

     சதவிதழ் புதல்வர்க்கும், கன்னிகை புதல்விக்கும், பரிதி மகிழ்நனுக்கும்,
கமலக்கொடி காந்தாரிக்கும் உவமை யெனக் காண்க. கன்னிகை - கர்ணிகா:
தாமரைப்பூவினிடையிலுள்ள பொகுட்டு எனப்படும்உறுப்பு. பாலபாரதத்தில் "ஸு ப
லஸ்ய கந்யகா ஆமுக்த பார்ச்வஸ்திதி ராத்மஜைர்பபௌ - சதேநபத்ரை
ரிவபத்மகர்ணிகா" என்று காந்தாரிக்குக் கர்ணிகையும், புதல்வர்கட்கு
இதழ்களுமே உவமையாகக் கூறப்பட்டுள்ளன.                       (236)

82.-மீண்டும் பாண்டுவின் ஏவற்படி மந்திரத்தாற் குந்தி
இந்திரனையெண்ண, அவன் அவளைக் கூடுதல்.

பான்மொழிக்குந்திமீண்டும் பாண்டுவினேவல்பெற்று
வான்மொழிமறையாலுன்னி வானவர்க்கரசைநோக்க
மேன்மொழிவதுமற்றென்கொல் விடுவனோவிரைவின்வந்து
தேன்மொழித்தெரிவைமெய்யுஞ் சிந்தையுங்களிக்கச்சேர்ந்தான்.

     (இ - ள்.) பால் மொழி குந்தி - பால்போலினிய பேச்சையுடைய
குந்தியென்பாள், மீண்டும்உம் - மறுபடியும், பாண்டுவின் ஏவல்பெற்று -
பாண்டுமன்னவனுடைய ஏவலையடைந்து, வான் மறை மொழியால் - சிறந்த
வேதமந்திரச் சொல்லால், வானவர்க்கு அரசை உன்னி நோக்க - தேவேந்திரனை
(மனத்தினாற்) சிந்தித்துப்பார்க்க,- மற்று- இனி, மேல் மொழிவது என்கொல் -
(நாம்) மேலே நிகழ்ந்ததைச் சொல்லவேண்டுமோ? விடுவன்ஓ -
(மறைமொழியாற்சிந்தித்து நோக்கியபின் அந்தத்தேவேந்திரன் வாராது) விடுவனோ?
விரைவின் வந்து-, தேன் மொழி தெரிவை - தேன்போன்ற பேச்சையுடைய
அந்தப்பெண்ணின், மெய்உம்சிந்தைஉம்களிக்க-, சேர்ந்தான்-; (எ-று.)- '
'வந்தத்தேன்மொழி' எனவும் பாடம்.                                 (237)

83.- பங்குனியுத்தரத்தில் அருச்சுனன் பிறத்தல்.

எங்குநன்னிமித்தஞ்செல்ல விருநிலமகிழ்ச்சிகூரப்
பங்குனிநிறைந்ததிங்க ளாதபன்பயிலுநாளில்
வெங்குனிவரிவில்வாகை விசயனும்பிறந்தான்வென்றிப்
பங்குனனென்னுநாமம் பகுதியாற்படைத்திட்டானே.

     (இ - ள்.) எங்குஉம் - எல்லாவிடத்திலும், நல் நிமித்தம் செல்ல- நல்ல
நிமித்தங்கள்தோன்றவும்,இரு நிலம் மகிழ்ச்சிகூர - பெரிய நிலவுலகத்திலிருப்பவர்
மகிழ்ச்சி மிகவும், பங்குனி - பங்குனிமாதத்தில், நிறைந்த திங்கள் -
பதினாறுகலைகளோடும் நிரம்பிய சந்திரனைக் கொண்ட, ஆதபன் பயிலும்
நாளில் - சூரியன் தோன்றிய நாளில் [பங்குனியுத்தரநாளில்], வெம் குனி வரி
வில் வாகை விசயன்உம் - கொடிய வளையுந்தன்மையுடைய கட்டமைந்த
வில்லை யேந்திய வாகைப்பூமாலையைச் சூடிய அருச்சுனனும், பிறந்தான்-:
வென்றி பங்குனன் என்னும் நாமம் - வெற்றியையுடைய பல்குனன் என்னும்