பக்கம் எண் :

14பாரதம்ஆதி பருவம்

அண்டர்யாவர்உம் - தேவர்க ளெல்லாரும், (அந்த ஊர்வசியை மீட்கும்
பொருட்டு),அவருடன் - அந்த அசுரர்களுடனே, அடு போர் - (உயிரைக்)
கொல்லவல்லபோரைச்செய்வதற்கு, அஞ்சினர் - பயந்தார்கள்: வண்டு சூழ் குழல்
அணங்கை -வண்டுகள் மொய்க்கப்பெற்ற கூந்தலையுடைய தெய்வமகளாகிய
அந்த ஊர்வசியை, இமதி மகன் மகன்உம் - இந்தச்சந்திரனுடைய
புத்திரனாகியபுதனுக்கு மகனானபுரூரவசும், கண்டு- (அசுரர் கவர்ந்து செல்வதைப்)
பார்த்து, அசுரர் மெய் கலங்க -(தான் வருகின்ற நிலையைக் கண்டே) அந்த
அசுரர்கள் உடல் நடுங்கும்படி, தேர் -(தன்னுடைய) இரதத்தை, நனி கடவினன் -
மிகவும் வேகமாகத் தூண்டி(அசுரர்செல்லுமிடத்து)ச் செலுத்தினான்; (எ -று.)

     அபயம் என்ற வடசொல் - அச்சமில்லாமற் காக்கவேண்டிய பொருளாவேன்
யான் என்பதைக் குறிப்பிக்கும். போதலும் - உம் மீற்று வினையெச்சம்.
தனிகடவினனென்றும் பாடமுண்டு.                                   (19)

12.நிறந்தருங்குழலரிவையை நிறுத்திவாளவுணர்
புறந்தரும்படிபுரிந்தபின் புரந்தரன்றூதால்
மறந்தருங்கழன்மன்னவன் மண்மிசையணைந்து
சிறந்தவன்பொடத்தெரிவையை நலம்பெறச்சேர்ந்தான்.

     (இ-ள்.) நிறம் தரும் - ஒளிபொருந்திய, குழல் அரிவையை -
கூந்தலழகியளாகிய அந்த உருப்பசியை, நிறுத்தி - (அசுரர் கொண்டு
போகமுடியாதபடி)தடுத்து,- வாள் அவுணர் - வாள்போற் கொடியவரான அந்த
அசுரர்கள், புறம்தரும்படி - முதுகுகொடுத்து ஓடும்படி, புரிந்தபின் - செய்தபின்,
புரந்தரன் தூதால் -இந்திரனுடைய தூதுவனால், மறம் தரும் கழல் மன்னவன் -
(தன்)வீரத்தைக்காட்டியவனான வீரக்கழலையணிந்த அந்தப்புரூரவமன்னவன்,
மண்மிசைஅணைந்து - பூமியின்மீது சேர்ந்து, சிறந்த அன்பொடு -
மிக்ககாதலோடு, அதெரிவையை - அந்த உருப்பசி நங்கையை, நலம் பெற -
இன்பமுண்டாக, சேர்ந்தான்-(அன்னாளோடு) கூடி யிருந்தான்.

     ஊர்வசியைப் புரூரவாமீட்டதனையறிந்த இந்திரன், ஒரு தூதுவனை அந்தப்
புரூரவசினிடம் அனுப்பி அவளைமணந்து சிலகாலம் பூமியில் வாழ்ந்திருக்குமாறு
பணிக்க, அந்தப்பணியின்படியே அந்த ஊர்வசியை அம்மன்னவன் மணந்து
சுகித்திருந்தன னென்க. நலம் - ஆகுபெயரால், நல்ல இன்பத்தைக் காட்டிற்று. (20)

13.- புரூவரசுக்கு அந்த ஊர்வசியினிடம் ஆயுவென்பவன்
பிறத்தல்

மாயனூருவின்வந்தருளந்தமான்வயிற்றில்
ஆயுவென்றொருசெம்மலை யம்கனளித்தான்
தேயவும்பலதேவரு மகிழமற்றிவனே
மேயவண்புகழ்வேந்தரில் வேள்வியான்மிக்கோன்.

     (இ -ள்.) அ மகன் - அந்த புரூரவசு,- மாயன் ஊருவின் வந்தருள் அந்த
மான்வயிற்றில் - மாயைக்குணமுடையவனாகிய திருமாலின் தொடையினின்று
தோன்றியஅந்த மான்போன்ற (பார்