பக்கம் எண் :

140பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) அனசநிருபன் புதல்வர் ஐவர்உம் - (திருதராட்டிரனுடைய)
தம்பியான பாண்டுமன்னவனுடைய புத்திரர் ஐந்து பேரும், மகீபன் தனயர் ஒரு
நூற்றுவர்உம் - திருதராட்டிர மன்னவனுடைய புத்திரர் நூறுபேரும்,-
அன்பினொடு தழுவி - அன்போடு தழுவிக்கொண்டு,- கன குலம் முகந்து பெய்
- மேகக்கூட்டம் (கடலில்) முகந்துகொண்டு பெய்வதனால் நிறைகின்ற, கருங்
கயம் - பெரிய நீர்நிலையிலே, நெருங்கும் - நெருங்கியுள்ள, வனச மலர்உம்
குமுதமலர் உம் என - தாமரைமலரும் ஆம்பல்மலரும்போல, வளர்வார்
வளர்பவராயினர்; (எ-று.)

     சிறந்துதோன்றும் தாமரைமலர் பாண்டவர்க்கும், குமுதமலர்
துரியோதனாதியர்க்கும் உவமை.                              (265)

வேறு.

111.- இதுவும் அடுத்தகவியும் - ஒருதொடர்: வசுதேவன்
முதலியோர் அத்தினாபுரிக்கு வருதலைத் தெரிவிக்கும்.

இன்னணம் வளருங் காலை யெறிகட லுடுத்த வல்குல்
மின்னெனு மருங்குல் கொங்கை வெற்புடை வேய்கொண் மென்[றோள்
பொன்னெனு நிறத்தி னோடும் பொற்பழி யாகு லத்தாள்
தன்னெண முடிப்பான் வந்த தலைவனைத் தந்த கோமான்.

     (இ-ள்.) இன்னணம் - இவ்வாறு, வளரும்காலை - (பாண்டவரும்
துரியோதனாதியரும்) வளராநிற்கையில்,- எறி கடல் உடுத்தஅல்குல் -
அலைவீசுகின்ற கடலை உடையாகச் சுற்றியுள்ள நிதம்பதேசத்தையும், மின் எனும்
மருங்குல் - மின்னலென்னும் இடையையும், வெற்பு கொங்கை - வெற்பாகிய
கொங்கையையும், வேய்கொள் மெல்தோள் - மூங்கிலினாற்கொண்ட
மெல்லியதோளையும், உடை - உடைய, பொன் எனும் நிறத்தினோடு பொற்புஉம்
அழி - பொன்னெனத்தக்க நிறுத்தினோடு தன் அழகும் அழிந்ததனால்,
ஆகுலத்தாள் தன் - துன்பமடைந்தவளான பூமிதேவியினுடைய, எ(ண்)ணம் -
(பாரந்தீர்க்கவேண்டுமென்று கருதிய) எண்ணத்தை, முடிப்பான் -
முடிப்பதன்பொருட்டே, வந்த - (பூமியிலே) அவதரித்தவனாகிய, தலைவனை -
தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, தந்த - பெற்ற, கோமான் - தலைவனாகிய
வசுதேவனும்,- (எ-று.)- இச்செய்யுளில் 'வளருங்காலை' என்பது,
அடுத்தசெய்யுளில் 'அத்தினாபுரிவந்துற்றார்' என்பதனோடு இயையும்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்- இச்சருக்கத்து 67 - ஆங் கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                  (266)

112.குந்திபோசன்றன்றெய்வக் குலத்துளோர்களுமநேக
விந்திரரவனிதன்னி லெய்தினராகுமென்னக்
கந்தவான்கொன்றைதோயுங் கங்கையாள்குமரன்வைகும்
அந்தமில்சுவர்க்கமன்ன வத்தினாபுரிவந்துற்றார்.

     (இ-ள்.) குந்திபோசன் தன் தெய்வம் குலத்துஉளோர்கள் உம் -
குந்திபோசனும் அவனுடையசிறப்புற்ற குலத்துத்தோன்றியவர்களும், அனேக
இந்திரர் - அனேக இந்திரர்கள், அவனிதன்னில் - பூமியிலே, எய்தினர் -
வந்துள்ளார், என்ன - என்று சொல்லு