போல்வார்தம்மை - குபேரனைப்போலப் பெருஞ்செல்வரான அந்த வசுதேவன்முதலியோரை, தம் பதி அடைவித்தார் - தமது ஊருக்குச் செல்லுமாறு விடைகொடுத்து அனுப்பினார்கள்; (எ -று.) பலவும், உம் - அசையென்னலாம். மனனுறத்தக்கசெல்வம் - தேர்பரிகரி முதலியவை யென்று கொள்ளலும் இரத்தினம் முதலியவை யென்று கொள்ளலும் ஆம். தினகரற்றொழுதல் - சூரியோபஸ் தாநம் என்னலாம். (273) வேறு. 119.-துரியோதனாதியரும் பாண்டவரும் சிறுவராய் விளையாடுகையில், வீமசேனன் துரியோதனாதியரோடு மனவொற்றுமையின்றி யிருத்தல். எயின லம்புனை கோபுர மாபுரத் தெழுதுமா ளிகைதோறும் வெயினி லாவுமிழ் கனகநீள் வீதியில் விலாசமுற் றிடுநாளிற் பயினன் மேல்வருகல்லெனச்செறிந்தமெய்ப் பவனன்மைந் தனுமொத்[தான் வயின தேயனைக் காத்திர வேயரை மன்னன்மைந் தருமொத்தார். |
(இ-ள்.) நலம் எயில் புனை - அழகிய மதிளால் அலங்கரிக்கப் பெற்ற, கோபுரம் - கோபுரங்களையுடைய, மா புரத்து - பெரிய அந்த அத்தினாபுரியிலே, எழுது - கட்டப்பட்டுள்ள, மாளிகைதோறுஉம்-, வெயில் நிலா உமிழ்- (பதித்துள்ள மணிகளினொளியால்) வெயில் போன்ற ஒளியையும் நிலாப்போன்ற ஒளியையும் வெளிப்படுத்துகின்ற, கனகம் நீள் வீதியில் - பொன்மயமான அல்லது பொன்னணிகளைக்கொண்ட நீண்டவீதியிலே, விலாசம் உற்றிடும் நாளில் - (பாண்டவரும் துரியோதனாதியரும்) விளையாடல்களைச் செய்துவரும் நாளிலே,- பை இனன் மேல் வரு கல்என செறிந்த மெய் பவனன் மைந்தன்உம் - படங்களின் திரள் (தன்மீது) வரப்பெற்ற (மேருஎன்ற) மலைபோல அழுத்தமுள்ள உடலைப்படைத்த வாயுகுமாரனான வீமனும், வயினதேயனை - கருடனை, ஒத்தான்-: மன்னன் மைந்தர்உம் - திருதராட்டிரனுடைய குமாரரான துரியோதனாதியரும், காத்திரவேயரை - கத்துருவின்புத்திரரான நாகங்களை, ஒத்தார்-; (எ-று.) உவமையால், வீமனுக்கும் துரியோதனாதியர்க்கும் பகைமை தோன்றியமையும், துரியோதனாதியர் வீமனைவெல்லும் ஆற்றலில ரென்பதும் பெறப்படும். வயினதேயன் = வைநதேயன்: விநதையின் புதல்வனான கருடன்: காத்திரவேயர்= த்ரவேயர்: கத்துருவின்புத்திரரானநாகர்கள்: இவையிரண்டும் தத்திதாந்தம்: பை - படம் கல் - மலைக்கு, இலக்கணை.ப[பை] யினன் மேல்வருகல் - பசுமையான [இளைய] சூரியன் தன்மேல் உதயமாகிவரப்பெற்ற உதயமலை யென்றலும் ஒன்று. காசிபமுனிவருடைய மனைவிமாருள் விநதையென்பாளுக்கும் கத்துரு வெண்பாளுக்கும் வானத்துச்சென்ற உச்சைக்சிரவமென்னும் குதிரையின்நிறத்தைப்பற்றி விவாதமுண்டாக, கத்துரு தன் புத்திரனான கருநாகங்களை அந்த உச்சைச்சிரவமென்னும் குதிரையின் உடலைச் சுற்றிக்கொள்ளுமாறு ஏவி அதனால் அந்த விநதையையும் விநதைகுமாரனையும் அடிமையாக்கிகொள்ள, |