ளாக்கிவிட்டு, ஆழ்ந்திலன் - (அந்தநீர்ப்பெருக்கில்) ஆழாமலே ஏறி - கரையேறி, மீண்டு - திரும்பி, அவசத்தோடு - (துயில்மிகுதியாலாகிய) பரவசத்துடனே, அவண் தாழ்ந்தனன் - அங்குதானே படுத்தான்;(எ-று.) இராமராவண யுத்தத்தில் இந்திரசித்தினது நாகபாசபந்த்தினின்று விடுபட்டு எழுந்த இலக்குமணண்போல, இப்பாசபந்தத்தினின்று விடுபட்டு வீமன் பிழைத்தெழுந்தன னென்னுங் கருத்துப்பட, இவ்வுவமை கூறினரென்னலாம். ராகவன் என்ற வடசொல்லுக்கு ரகுவென்னும் அரசனது குலத்திற் பிறந்தவ னென்று பொருள்; தத்திதாந்தநாமம்- 'அனந்தர நிமிர்ந்து' என்றும், 'தாழ்ந்திலன்' என்றம், 'இராவணன் றம்பி' என்றும்பாட முண்டு. (281) 8.-பின்பு துரியோதனன் வீமன்மேற் பாம்புகளைக் கடிக்கவிடுதல். வாளிரவியையொளி மறைக்கும்வெஞ்சினக் கோளரவினையன கொடியநெஞ்சினன் நீளரவினங்களா னித்திராலுவை மீளவுங்கொல்லுவான் வீரனேவினான். |
(இ-ள்.) வாள் இரவியை ஒளி மறைக்கும் - ஒளியை [கிரணங்களை] யுடைய சூரியனது ஒளியை மறைக்கின்ற, வெம்சினம் கோள் அரவினை - கொடியகோபத்தையுடைய கிரகமாகிய (இராகு கேது என்னும்) பாம்பை, அன - ஒத்த, கொடிய நெஞ்சினன் - கொடு மனத்தையுடையவனாகிய, வீரன் துரியோதனன்,- நித்திராலுவை - தூங்கிக்கொண்டிருக்கிற வீமனை, நீள் அரவு இனங்களால் - நீண்ட பாம்புகளின் கூட்டத்தைக்கொண்டு, மீளஉம் கொல்லுவான் - மீண்டுங் கொல்லத்துணிபவனாய், ஏவினான்- (அவன்மேல் அவற்றை) ஏவினான்; (எ-று.) வீமன்மீது பாம்புகளைக் கடிக்கவிட்டு அவனைக் கொல்லுமாறு பிடாரர்களை ஏவினானென்பது கருத்து. பாம்புவடிவமான இராகுகேது வென்னுங் கிரகத்தின் வாய்ப்பட்ட சூரியன் விரைவில் அத்துயரொழிந்து எளிதில்வெளியப்படுதல்போல, பாம்பின்வாய்ப்பட்ட வீமன் உடனே அத்துய ரொழிந்து அழிவின்றி இனிதுஎழுந்தன னென்னுங் கருத்துப்படவந்தது இவ்வுவமை. வீரத்தாலன்றி வஞ்சனையால் வீமனைக் கொல்லத்துணிந்தவனை, 'வீரன்' என்றது, இகழ்ச்சிக்குறிப்பு. ரவி, நித்ராலு, வீரன் - வடசொற்கள். 'கோளரவனையன கொடியநஞ்சின' என்றும் பாடம். (282) 9.-பாம்புகளை அழித்திட்டு வீமன் உயிர்பிழைத்தல். கடித்தனபன்னக நகங்கொள்கைகளால் துடித்திடமற்குணத் தொகுதிபோற்பிசைந்து இடித்திடுமுகிலென வெழுந்துமாநகர் வடித்தவேற்றுணைவரோ டெய்திமன்னினான். |
(இ-ள்.) கடித்தன பன்னகம் - (அவ்வேவலின்படி தன்னைக்) கடித்திட்ட பாம்புகளை, (வீமன்), நகம் கொள் கைகளால் - (கூரிய) நகங்களைக்கொண்ட (தன்) கைகளால், துடித்திட - துடிக்கும்படி, |