பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்155

தலும், மாலையில் விளக்கு எடுத்தலும் இயல்பு. இராசகுமாரனான துரியோதனன்
நகர்க்கு மீளுகையில் அங்குள்ளார் அவனுக்கு மரியாதையாக மங்களசங்கத்தை
முழக்குதலும், அஷ்டமங்கலத்துள் ஒன்றான விளக்கை ஏந்துதலும் இயல்பே.
                                                            (292)

19.- வீமனைக் காணாது குந்தி மிகவருந்துதல்.

கண்டிலளுதிட்டிரன் கனிட்டற்கண்ணுற
உண்டிலடரித்தில ளோரிராவினும்
கொண்டிலடுயிலிளங் குமரர்தம்மொடும்
விண்டிலளுரையுளம் விம்முகுந்தியே.

     (இ-ள்.) உதிட்டிரன் கனிட்டன் - தருமபுத்திரனது தம்பியான வீமனை, கண்
உற கண்டிலள்- (தன்) எதிரில்வரக் காணாதவளாய் உளம் விம்மு - மனம்
ஏங்குகிற, குந்தி - குந்திதேவியானவள், - உண்டிலள் - உணவு நுதர்ந்திலள்:
தரித்திலள்- (மகப்பிரிவினாலான துன்பத்தைச்) சிறிதும் பொறுக்கமாட்டிற்றிலள்;
ஓர் இராவின்உம்-(அவனைக்காணாத தினங்களுள்) ஓரிரவிலாயினும், துயில்
கொண்டிலள்-நித்திரைகொண்டிலள்; இள குமரர்தம்மொடுஉம் உரை விண்டிலள் -
இளமைப்பருமுடைய (தனதுமற்றைக்) குமாரர்களுடனும் யாதொரு பேச்சும்
பேசிற்றிலள்; (எ-று)                                         (293)

20.-தருமன் முதலிய நால்வரும் வீமனைத் தேடிக்காணாது
வருந்துதல்.

வீடினனாமெனத் துணைவர்வேறுவேறு
ஓடினர்கானதி யோடையெங்கணும்
தேடினர்காண்கிலஞ் செய்வதென்னென
நாடினர்நடுங்கினர் நடுக்கில்சிந்தையார்.

     (இ - ள்.) நடுக்கு இல் சிந்தையார் - கலக்கமற்ற மனத்தை யுடையவர்களான,
துணைவர் - (யுதிட்டிரன் முதலிய) உடன்பிறந்த நால்வரும், வேறுவேறு ஓடினர்
- வெவ்வேறாய் ஓடிச்சென்று, கான் நதி ஓடை எங்கண்உம் தேடினர் - காடு நதி
ஓடை ஆகிய எவ்விடங்களிலுந் தேடி, காண்கிலம் செய்வது என் என நாடினர் -
'(எங்குங்) காண்கின்றிலோம்: இனிச்செய்யக்கடவதுஎன்ன!' என்று சிந்தித்து,
வீடினன் ஆம் என (வீமன்) இறந்தான் போலுமென்று சங்கித்து, நடுங்கினர் -
மிகவும் அஞ்சினார்கள்;(எ-று.)

     "காநநேஷு  ஸரஸீஷு  ஸிந்துஷு " என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப,
கான் - காட்டில் எனப்பட்டது.                                  (294)

21.- தருமன் முதலியோர் சிந்தைப்படும் விதம்.

கூற்றனசுயோதன குமரனேயிவன்
ஆற்றலின்வெரீஇயழுக் கற்றசிந்தையான்
ஏற்றதையுணர்கில மென்றுதந்தையாம்
காற்றினுமலமருங் கருத்தராயினார்.

     (இ-ள்.) 'கூற்று அன - யமனையொத்த, சுயோதன குமரன்ஏ -
துரியோதனனாகிய இராசகுமாரனே, இவன் ஆற்றலின் வெரீஇ -