பக்கம் எண் :

156பாரதம்ஆதி பருவம்

இவ்வீமனுடைய வலிமையினின்று அஞ்சி, அழுக்கற்ற - (இவனிடம்)
பொறாமைப்பட, சிந்தையான் - மனத்தையுடையவன்: (இவ்வளவேயன்றி),
ஏற்றதை உணர்கிலம் - (வீமனுக்கு) நேர்ந்த நிலையை அறியோம்', என்று -
என்று எண்ணி, தந்தை ஆம் காற்றின்உம் அலமரும் கருத்தர் ஆயினார்-
(தருமன் முதலிய நால்வரும் அவ்வீமனது) தந்தையாகிய காற்றைக்காட்டிலும்
விரைந்து சுழலுகின்ற மனத்தையுடைவரானார்கள்;(எ-று.)- இக்கவிக்கு எழுவாய்,
கீழ்க்கவியில் வந்த 'துணைவர்' என்பதே.

     துரியோதனனே இவன்மேற் பொறாமையுடையவனாதலால், அவன் இவனை
யாதுசெய்தனனோ என்று சங்கித்தன ரென்பதாம். சிறிதேனும் ஒருநிலை
நில்லாமல் எப்பொழுதுஞ் சஞ்சரிக்குந் தன்மையையுடைய காற்றினும் மிகுதியாக
மனஞ்சலித்தன ரென்பது, ஈற்றடியின்  கருத்து. பிராணிகளின் உடம்பையும்
உயிரையும் வெவ்வேறு கூறாகப் பிரித்தலால், யமனுக்குக் கூற்று என்று பெயர்;
இதற்கு - பொதுப்படச்செல்லுங்காலத்தைப் பிராணிகளுக்கு ஏற்பக் கூறுபடுத்துபவ
னென்று காரணப்பொருளுரைத்தலும் உண்டு. அழுக்கறுத்தல் - பிறராக்கம்
பொறாமை. அழுக்கறு என்பது - ஒருசொல்; இனி, அழுக்கு அறுஎனப்பிரிந்து,
குற்றம் நீங்குதலென்று பொருள்படும். இது, குற்றமுடைமையாகிய பொறாமைக்கு
எதிர்மறையிலக்கணையாய் வழங்கியதென்றலும் ஒன்று. இது முதனிலைதிரிந்த
தொழிற்பெயராய் அழுக்காறு எனநிற்கும்.                         (295)

22.-மக்களுடன் வருந்திய குந்திக்கு வீடுமன் தேறுதல்
கூறல்.

ஊதையில்பூதமொத் துள்ளம்வெம்பிய
தாதையில்சிறுவரைத் தாதைதாதைபால்
கோதையில்குழலினாள் கொண்டுசேறலும்
வாதையின்றவற்கென வருத்தமாற்றினான்.

     (இ-ள்.) ஊதை இல் பூதம் ஒத்து - வாயுவையொழிந்த மற்றை நான்கு
பூதங்கள் போன்று, உள்ளம்வெம்பிய - (வீமனைக்காணாது) மனந்தவித்த, தாதை
இல் சிறுவரை - தந்தையை யிழந்த மைந்தரான (தருமன் முதலிய) நால்வரையும்,
கோதை இல் குழலினாள் - (அமங்கலியாதலால்) மாலையில்லாத கூந்தலையுடைய
குந்திதேவியானவள், தாதை தாதைபால் - (அக்குமாரர்களின்) தந்தையான
பாண்டுவினது (பெரிய) தந்தையாகிய வீடுமனிடத்தில், கொண்டு சேறலும் -
அழைத்துக்கொண்டு போனவளவிலே,- (அவ்வீடுமன்), அவற்கு வாதை இன்று
என - அவ்வீமனுக்கு வருத்தமொன்று மில்லையென்று (தன் ஞானக்கண்ணால்
உணர்ந்து)கூறி, வருத்தம் மாற்றினான் - (அவர்களடைய) துன்பத்தை நீக்கினான்;
(எ-று.)

     ஒன்றற்கொன்று தொடர்புடைய ஐம்பெரும்பூதங்கள் தம்மில் ஒன்றாகிய
வாயு ஒழிந்தால் தமது நிறைவு குறைந்து நான்காய் நிற்றல்போல, உள்ளும்
புறமும் ஒத்த உடன்பிறந்தவரான பஞ்சபாண்டவர்கள் தம்மில் ஒருவனான
வீமனை யிழத்தலால் குறைகொண்டு நின்றன ரென்பது, 'ஊதையில் பூதமொத்த
சிறுவர்' என்பதன் கருத்து. இங்கே, பூதம் - நிலம், நீர், தீ, வானம்.
வாயுகுமாரனுக்கு