பக்கம் எண் :

158பாரதம்ஆதி பருவம்

     இக்கவி, கீழ்ப்பதினேழாங்கவியோடு தொடர்புடையது. வீமன் பதினாயிரம்
அரசயானைகளின் வலிமையுடையவனாதலால், அருந்திறற்போகிகள் வருந்தியுற்று
எடுத்தனவென்க. போகீ என்ற வடசொல் - போகத்தையுடையதென்று
பொருள்படும்; போகமென்று பாம்பினுடலுக்குப்பெயர்.                 (298)

25.-கவிக்கூற்று: வீமனைச் சுமக்கும் ஆற்றல் நாகங்கட்கு
உண்டுஎன்றல்.   

பாழியம்புயகிரிப் பாண்டவன்றனைச்
சூழிகற்பணிக்குலஞ் சுமக்கவல்லவோ
வாழியக்குலங்களின் மன்னனல்லனோ
ஏழிருபுவனமு மினிதினேந்துவான்.

     (இ-ள்.) பாழி - வலிமையையுடைய, அம் - அழகிய, புய கிரி - மலைகள்
போன்ற தோள்களையுடைய, பாண்டவன்தனை - வீமனை, சூழ் இகல் பணிகுலம்
- மண்டலமிடுந்தன்மையுள்ள வலிமையையுடைய பாம்புகளின் கூட்டங்கள்,
சுமக்க வல்லஓ - சுமத்தற்கு வல்லமையுடையனவோ? (எனின்),- ஏழ் இரு
புவனம்உம் இனிதின் ஏந்துவான்- பதினான்கு உலகங்களையும் எளிதாகச்
சுமப்பவனான ஆதிசேடன், அ குலங்களின் மன்னன் அல்லன்ஓ -
அப்பாம்புக்கூட்டங்களின் அரசனல்லனோ? (எ-று.)- ஆதலால், அவைகளும்
இவனைத் தாங்கவல்லன என்பதாம். வாழி - அசை.

     வீமனைச்சுமக்கவல்ல வலிமை நாகங்கட்கு உள்ளது என்ற கருத்தைக் கவி
தாமே தடைவிடைகளால் விளக்கினார். பாண்டவன் - பாண்டுவின் மகன்;
வடமொழித்தத்திதாந்தநாமம். இப்பொதுப்பெயர் - சிறப்பாய், இங்கே வீமனை
யுணர்த்திற்று. ஏழிரு புவனம் - பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம்
மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற
மேலேழுலகங்களும், அதலம் விதலம் சுதலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம்
பாதாளம் என்ற கீழேழுலகங்களும். சர்ப்பராசனான ஆதிசேஷன் உலகங்களின்
கீழிலிருந்து அவற்றைத் தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை.
கீழ்ச்செய்யுளில், 'இவனைப் போகிகள் எடுத்து' என வந்ததன்கண் உண்டான
ஐயத்தை அகற்றுதலால், இச்செய்யுள் - இடைப்பிறவரலாய்,
குளகச்செய்யுள்களின் நடுவில் நின்ற தென்று உணர்க. 'பாண்டுமைந்தனை'
எனவும்பாடம்.                                               (299)

26.- வீமன் முன்னினும் மிகவிளங்குதல்.

விதியினாலொளித்தலி னுயங்கிமீளவும்
நதியினால்வருதலி னலங்கொண்மேனியான்
பதியினால்விளங்குமென் பங்கயங்களும்
மதியினாற்குளிர்நெடு வானுமாயினான்.

     (இ-ள்.) விதியினால் - (முற்பிறப்பிற்செய்த) வினையின் பயனால்,
ஒளித்தலின் - (யாற்றில் தள்ளப்பட்டு) அழுந்தியதனால், உயங்கி -
வாட்டமுற்று, மீளஉம் நதியினால் வருதலின் நலம் கொள் - பின்பு
அந்நதியின்வழியால் மீண்டுவந்ததனால் நல்லவிளக்கத்தைக் கொண்ட,
மேனியான் - உடம்பையுடையவனான வீமன்,- பதியினால்