(இ - ள்.) புரந்தரன் பதம் - இந்திரபதவியை, பெற்ற பின் - (அந்த நகுடன்) பெற்றபின்பு. புலோமசை முயக்கிற்கு - இந்திராணியைத் தழுவுதலை, இரந்து - வேண்டி, மற்று - பிறகு, அவள் ஏவலின் - அந்த இந்திராணியின் கட்டளைப்படியே,யானம் - பல்லக்கை, உற்று - பொருந்தி, ஏறி-, வரம் தரும் - வரங்கொடுக்கவல்ல,குறு முனி - அகத்தியமுனிவன், முனி - சினந்துகூறிய, வாய்மையால் - (வெகுளிச்) சொல்லால், மருண்டு - மனமயக்கங்கொண்டு, நிரந்தரம் - நிலையாக, பெரும் புயங்கம்ஆனவன்உம் - பெரிய சர்ப்பமானவனும், அ நிருபன் - அந்த நகுடமன்னவன்; (எ -று.) புரந்தரன் - பகைவரின் புரத்தை[உடலை அல்லது பட்டணத்தை]ப் பிளப்பவனென்று அவயவப்பொருள்படும். புலோமஜா என்ற வடசொல் - புலோமனென்றஅசுரனிடத்தின்று பிறந்தவளென்று பொருள்படும்: இது, இந்திராணியின் பெயராகும்.புஜங்கமென்ற வடசொல் - மார்பினாற் செல்வதென்றேனும், வக்கிரமாகச்செல்வதென்றேனும் உறுப்புப்பொருள்படும். சந்திரகுலத்தவனான நகுடனென்றஇவன் நூறு அசுவமேதயாகஞ்செய்து இந்திரபதவிபெற்றுச் சிவிகையேறிச் செல்கின்றகாலத்து இந்திராணிமேல் வைத்த காதல்மிகுதியால் தன் சிவிகையைத் தாங்கிச்செல்கின்றஏழுமுனிவர்களுள் குறுமுனிவராதலால் மெதுவாய்நடந்த அகத்தியரைநோக்கி,விரைவிற்செல்க என்பான் 'ஸர்ப்ப ஸர்ப்ப' [ஓடு ஓடு] என்று கூறினானாக, அகஸ்தியர் வெகுண்டு 'நீ சர்ப்பமாகுதி' என்று சபிக்க, அவன் அவ்விந்திரபதவியிழந்து உடனேபாம்பாகி நிலத்திற்கிடந்தா னென்பது வரலாறு. (23) 16.-நகுடன்புதல்வன் யயாதி. மற்றவன்றிருமைந்தன்வின் மைந்தினாலுயர்ந்த கொற்றவன்றிறற்கொற்றவைக் கிருபுயங்கொடுத்தோன் முற்றவன்பகைமுகங்கெட முகந்தொறுந்திசையிற் செற்றவன்பெருஞ்செற்றமில் குணங்களிற்சிறந்தோன். |
(இ - ள்.) அவன் திரு மைந்தன் - அந்த நகுடனது சிறந்த புத்திரன்,- வில் மைந்தினால்உயர்ந்த கொற்றவன் - வில் வலிமையினால் மிக்க வெற்றியையுடையவன்:திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் - வலிமைக்கு உரிய தேவதையாகியவீரலட்சுமிக்கு (த்தன்னுடைய) இரண்டு தோள்களையும் வாழுமிடமாகக் கொடுத்தவன்:வல் பகை முற்ற - (தன்னுடைய) வலிய பகைவர்யாரையும், திசையில் முகந்தொறுஉம்முகம் கெட - எல்லாத் திக்குக்களினிடங்களிலும் சிதைந்தோடும்படி, செற்றவன் -அழித்தவன்: பெருஞ்செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் - (கொடுமை) மிக்க சின மென்ற துர்க்குணத்தைப் பெறாமல் நற்குணங்களினால் மிக்கவன்: (எ-று.)- இவன் பெயர் யயாதிஎன்பது, மேற்செய்யுளிற் பெறப்படும். கொற்றவை - வெற்றிக்குரியதேவதை ஆதலால், அவளை வீரர்களின் புயத்தில்வாழ்பவளெனக் கவிஞர் கூறுவர். பகை - ஆகுபெயர். வேன்மைந்தினிலுயர்ந்துஎன்றும் பாடம். (24) |