பக்கம் எண் :

172பாரதம்ஆதி பருவம்

கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. விசயன் தனக்கு உரிய விசயத்தில் மிக,
துரியோதனாதியர் தமக்குஉரிய பொறாமையில் மிக்கார்கள் என அவரவரியல்பு
தோன்ற வேறுபாடு எடுத்துக் காட்டியவாறு. ஏற்புழிக்கோடலென்ற உத்தியால்,
'எஞ்சியகுமாரர்கள்' என்றது, துரியோதனாதியரையே குறிக்கும். 'இரவியெதிர்
மின்மினிகள் போல் பொறாமையில் மிகுந்தனர்கள்' என்றது, தமக்கும்
அவனுக்கும் சிறிதும் ஒப்புமை யில்லாமல் மிக்கவேறுபாடு இருக்கையிலும்
பொறாமையுற்ற தன்மையை உணர்த்தியபடி. விஜயன் - விசேஷமான
வெற்றியையுடையவன் என்று காரணப்பொருள்படும். மின்மினி - காரணப்பெயர்.
விசயன் வினயத்தின்மிகவே என்று பிரதிபேதம்.                   (323)

50.- ஏகலவ்ய னென்ற வேடனது செய்தி.

ஏகலைவனென்றொருகிராதன்முனியைத்தனி யிறைஞ்சியிவனே
                                   வலின்வழான்,
ஆகலையடைந்துமிகுபத்தியொடுநாடொறு மருச்சுன
                               னையொத்துவருவான்,
மேகலைநெடுங்கடல்வளைந்ததரணிக்கணொரு
                        வில்லியெனவின்மையுடையான்,
மாகலைநிறைந்துகுருதக்கிணைவலக் கையினில்
                            வல்விரல்வழங்கியுளனால்.

     (இ-ள்.) ஏகலைவன் என்ற ஒரு கிராதன் - ஏகலவ்யனென்ற
பெயரையுடைய ஒருவேடன், முனியை தனி இறைஞ்சி - துரோணாசாரியனைத்
தனியே வணங்கி, மிகு பத்தியொடு - மிக்கபக்தியுடனே, இவன் ஏவலின் வழான்
ஆகலை அடைந்து - இத்துரோணனது கட்டளையினின்று
தவறாதவனாயிருத்தலை அடைந்து, (அவ்வழிபாட்டின் பயனால்), நாள்தொறுஉம்
அருச்சுனனை ஒத்துவருவான் - தினந்தோறும் (கல்வித்தேர்ச்சியில்)
அருச்சுனனை ஒத்துவருபவனாய், மேகலை நெடு கடல் வளைந்த தரணிக்கண்
ஒரு வில்லி என வின்மை உடையான் - மேகலையென்னும் இடையணியாகப்
பெரிய கடலாற் சூழப்பட்ட பூமியிலே ஒப்பற்ற தனி வில்வீரனென்று
(அனைவரும் தன்னைச்) சொல்லும்படியே விற்றொழிலில் வன்மையுடையவனாகி,
மா கலை நிறைந்து - பெரிய தநுர்வித்தை முழுவதும் நிரம்பப்பெற்று, (பின்பு),
குரு தக்கிணை - அந்தக்குருவுக்குத் தக்ஷிணையாக, வலக்கையினில் வல் விரல்-
(தனது) வலக்கைப் பெருவிரலை, வழங்கி உளன் - கொடுத்திட்டான்; (எ - று.)-
ஆல் ஈற்றசை.

     கீழ்க்கூறியபடி துரோணன் அருச்சுனனிடத்து மிக்க அன்பு கொண்டு
அவனைநோக்கி 'உன்னினும் மேம்பட்டமாணாக்கர் எனக்கு எவரும் இல்லை'
என்றுகூறி அனைவர்க்கும் கல்விகற்றுக்கொடுத்து வருகையில் இரணியதநுஸ்
என்ற வேடர் தலைவனது குமாரனான ஏகலவ்யனென்பவன் துரோணனையடுத்து
'எனக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கவேண்டும்' என்றுகேட்க, அக்குரு
இல்வேட்டுவக் குமரனைக் கற்பித்தால் இவன்மாணாக்கரெவரினும்
மேம்படுவனென்று அவனுக்குக் கற்பிக்க விரும்பாமல், 'பயிற்சியில் மேம்படும்
நீ என் மாணாக்கனே: உனக்கு அனுமதிகொடுத்தேன்: போகலாம்' என்று
சொல்ல, அவன்வணங்கி விடைபெற்றுத் தான்இருக்கும் வனத்திற் சென்று
தன்குடிசையில் துரோணனைப்போல் ஒரு பிரதிமை செய்து