ரத்தினாலும்வலிமைமிக்கஓர் அஸ்திரத்தைக்கொடுத்தருளினான்: (இப்படி ஒருவர்க்கொருவர் சிறந்த பொருளைக்கொடுத்து), இருவர்உம் - (துரோணனும் அருச்சுனனுமாகிய) இவ்விருவரும், இன் உயிர்உம் மனம் உம் என - இனிய உயிரும் மனமும்போல, (ஒற்றுமைப்படக்கலந்து), நயந்து- (ஒருவரையொருவர்) விரும்பி, அருள்உம் வினயம்உம் மிகுந்தனர்கள் - கருணையிலும் வணக்கத்திலும் மிகுந்தார்கள்: மேல் மருவி வரும் - முற்பிறப்பிற் செய்யப்பட்டுத் தொடர்ந்துவருகிற, நல்வினை வயத்தின் - புண்ணியவசத்தால், வழி வந்த - பிற்பிறப்பில் நேர்ந்த, பயன் - பிரயோசனம், மற்று ஒருவருக்கு வரும்ஓ - (இவர்க்குப்போல) வேறெவர்க்கேனும் சித்திக்குமோ? (எ -று.) மாணாக்கர்க்கு நல்லாசிரியர் கிடைத்தல்போலவே ஆசிரியர்க்கு நன்மாணாக்கர் கிடைத்தலும் முன்னை நல்வினைப்பயனே யென்பது, இதனால் விளங்கும். அருச்சுனன்போலக் குருவின் உயிரைப்பாதுகாக்கும் சிஷ்யனும், துரோணன்போல அச்சிஷ்யனுக்குச் சிறந்த அஸ்திரத்தைப் பரிசளிக்குங் குருவும் வேறு எவரும் இலரென்று வியந்து 'மற்றொருவருக்கு வருமோ' என்றார். இங்கு அருச்சுனனுக்கு அளிக்கப்பட்ட அஸ்திரம் பிரமசிரஸ் என்ற முதனூலால் விளங்கும்; அது - தடுக்கவெண்ணாதது, ஒப்புயர்வற்றது. (327) 54.-துரோணன் மாணாக்கர்கல்வியை அனைவர்க்குங் காட்டலுறல். சிலைக்குருவிறற்குருகுலக்குமரருக்குவரு சிரமநிலைகாண்மி னெனவே, அலைத்தலைநிலாவெழுசரிற்புதல்வனுக்குநல் லறக்கடவுளுக்கு முரையா, நிலைப்படுவிசாலமணியணிதிகழரங்கின்மிசை நிகழ்பலி கொடுத்தரியுடன், கலைப்புரவியூர்திருவையுந்தொழுதுபுக்கனனகத்துணர்வுமிக் கலையோன். |
(இ-ள்.) அகத்து உணர்வு மிக்க - மனத்தில் அறிவுமிகுந்த, கலையோன் - எல்லாக்கல்வியையு முணர்ந்தவனாகிய, சிலை குரு - வில்லாசிரியனான துரோணன்,- 'விறல் குருகுலம் குமரருக்கு வரு - வலிமையையுடைய குருகுல குமாரர்களுக்குக் கைவந்த, சிரமம் நிலைஆயுதப் பயிற்சியின் நிலைமையை, காண்மின் - பாருங்கள்', என - என்று அலை தலை நிலா எழு சரித் புதல்வனுக்குஉம் - அலைகள் ஒரு நிலையில் நில்லாமல் (மேன்மேல் மிக்கு) எழப்பெற்ற கங்காநதியினது குமாரனான வீடுமனுக்கும், நல் அறம் கடவுளுக்குஉம் - சிறந்த யமதருமராசனது அமிசமான விதுரனுக்கும், உரையா - சொல்லி,- நிலைப்படு விசாலம் மணி அணி திகழ் அரங்கின்மிசை - நிலையாகப் பதிக்கப்பட்ட பெரிய இரத்தினங்கள் அழகுவிளங்கப்பெற்ற யுத்தரங்கத்திலே,- நிகழ் பலி கொடுத்து - கொடுத்தற்கு உரிய பலியைக் கொடுத்து,- அரியுடன் கலை புரவி ஊர் திருவைஉம் தொழுது - சிங்கத்துடனே கலைமானாகிய வாகனத்தை ஏறிநடத்துகிற துர்க்கையை வணங்குதலுஞ் செய்து, புக்கனன் - பிரவேசித்தான்; (எ-று.) அரங்கு - ரங்க மென்ற வடசொல்லின் திரிபு: இது - படைக்கலத் திறங் காட்டுதற்கு நிருமிக்கப்பட்ட இடம். துர்க்கை படைக்கலங்கட்கும் போருக்கும் உரிய தலைவி யாதலால்,யுத்தரங்க |