பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்177

பூமியிற்புகும்போது வேண்டியபலி கொடுத்துத் துர்க்கையை வணங்கிச் செல்லுதல்,
மரபு. பலிகொடுத்துத் துர்க்கையை வணங்கியதாக இங்குக் கூறியது,
பாரதங்களில்லை. துர்க்கைக்குச் சிங்கமும் கலை மானும் வாகனமாம்.
'மகளிர்யாவரும் இலக்குமியின் சொரூபம்' என்ற சித்தாந்தத்தைத் தழுவி,
துர்க்கையை 'திரு' என்றார்: திரு என்ற பெயர் மகளென்றமாத்திரமாய்
நின்றதென்றுங் கொள்ளலாம்: அன்றியும், துர்க்கைக்கு வீரலக்ஷ்மி யென்று
ஒருபெயரும் உண்டு. 'அலைக்கலை நிலாவெழு கதிர்ப்புதல்வருக்கும்' என்ற
பாடத்துக்கு - (தனக்கு உரிய பதினாறு) கலைகளோடும் (தனது) ஒளியாகிய
நிலாவினுடனும் கடலினின்றுஉதிக்கிற சந்திரனென்னுஞ்சுடரினது குலத்திற் பிறந்த
குமாரர்களான வீடுமனுக்கும் திருதராட்டிரனுக்கும் எனப் பொருளாம்.  (328)

55.- அந்த யுத்தரங்கபூமியில் அனைவரும் வந்துசேர்தல்.

புரியிலறிவோர்சனபதத்திலறிவோர்புவிபு ரக்குமவர்தம்மிலறி
                                             வோர்,
வரிபடவயங்குகொடிமஞ்சவிதமெங்கணும் வனப்புறவிருந்த
                                             பொழுதில்,
தெரிவுறுவிமானமனைதோறுமுறைதேவர்பலர் சித்தர்முதலோர்
                                          பலரொடும்,
கரியநெடுமால்பிரமனிந்திரன்முதற்பலர்கலந்தவகல்வானிகருமே.

     (இ-ள்.) புரியில் அறிவோர் - நகரத்திலுள்ள அறிஞர்களும், சனபதத்தில்
அறிவோர் - நாட்டிலுள்ள அறிஞர்களும், புவி புரக்குமவர் தம்மில் அறிவோர் -
பூமியை ஆளும் அரசர்களில் அறிஞர்களாயுள்ளவர்களும், (ஆகிய
அனைவரும்), வரி பட வயங்கு கொடி மஞ்சம் விதம் எங்கண்உம் -
(அந்தரங்கபூமியில் அமைக்கப்பட்டு) வரிசைப்பட விளங்குகிற ஒழுங்கான
ஆசனங்களின் வகைகளிலெல்லாம், வனப்பு உற இருந்த பொழுதில் -
அழகுபொருந்த வீற்றிருந்த சமயத்தில்,- (அச்சபையானது),- தெரிவுறுவிமானம்
மனைதோறுஉம் - விளங்குகிற விமானங்களாகிய மாளிகைகளில், உறை -
வசிக்கிற, தேவர் பலர் - தேவர்கள்பலரோடும், சித்தல் முதலோர் பலரோடுஉம் -
சித்தர்கள் முதலிய தேவகணத்தவர் பலரோடும், கரிய நெடுமால் பிரமன்
இந்திரன் முதல் பலர் - கருமைநிறமும் பெருமைக்குணமுமுடைய திருமாலும்
பிரமனும் இந்திரனும் முதலிய பல சிறந்த தேவர்கள், கலந்த - வந்து
செறியப்பெற்ற, அகல் வான் - பரந்த ஆகாயத்தை, நிகரும் - ஒக்கும்; (எ -று.)

     ஜநபதம் - வடசொல்; சனங்கள் வசிக்குமிடம் மென்று பொருள்படும்.
'அறிவோர்' என்றது, இங்கு, யானை குதிரை தேர் படைக்கலம் என்றவற்றின்
நூல்களை யறிந்தவரைக் குறிக்கும். சித்தர் - அணிமா முதலிய யோக
சித்திகளைப் பெற்றவர். 'புரிவிலறிவோர்' என்றும், 'இயங்குகொடி' என்றும்
பாடம். 'பலரொடும்' என்ற விடத்து, 'பரரொடும்' என்று பிரதிபேதம்.   (329)

56.- யுதிட்டிரன் முதலியோர் தம்தமது வில்திறங் காட்டுதல்.

ஆற்றின்வழுவாமனுமுறைத்தருமன்மைந்தன்முத லாகியகுமார ரடைவே,
போற்றியடலாசிரியரிருவரையுமன்பினுயர் பூசைபலசெய்து புரிநாண்,
ஏற்றியராசனம்வணக்கிவடிவாளியினிலக்கமவைநாலும்