(இ-ள்.) தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று-கதையின் நுனி ஒன்றோடொன்று, உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற - இடியிடித்தாற் போன்ற தன்மையோடு தாக்க, விலகு மணடல விதங்கள்உம் - (அக்கதைகள் தம்மேல் தாக்காதபடி) விலகுகிற மண்டலகதிவகைகளும், வியப்புற நடந்தபின்- (காண்பவர்) அதிசயிக்கும்படி நிகழ்ந்தபின்பு, இருவர்உம் - (துரியோதனன் வீமனென்னும்) இரண்டுபேரும், மறத்தொடு செயிர்த்து வயிரம் கொண்டு - வீரத்தோடு கோபித்து உட்பகைமைகொண்டு, பொருதல் உன்னு பொழுதத்து - போர்செய்யக்கருதியபொழுது,- அவர் குறிப்பினை - அவர்களுடைய உட்கருத்தை, இமைப்பு அளவையில் கண்டு - ஒரு மாத்திரைப்பொழுதிலே அறிந்து,- மெய் கல்வி கரை கண்ட பெரியோன் குருவின் சிறுவன் - உண்மையான கல்விகளை முழுவதும் அறிந்த பெருமையுடையவனாகிய குருபுத்திரனான அசுவத்தாமன், வன்பொடு விலக்கினன் - வலிமையோடு விலக்கினான்; (எ-று,) மண்டலவிதம் - வலசாரி, இடசாரி, மண்டலம், பவுரி என்பன. செய்யுளோசையின்பம் நோக்கி, மெய்கல்வி, என வலியியல்பாய் நின்றது: இனி, மெய்யுங் கல்வியுமாகியவற்றைக் கரைகண்ட என்றும் உரைக்கலாம். 'அன்பொடுவிலக்கினன்' என்றும் பாடம். (333) 60.- அருச்சுனன் தனது வில்லின் திறமையைக் காட்டுதல். மீளிமகவான் மதலை யாயுதபு ரோகிதன்வி லோசனமு ணர்ந்த வன்மலர்த், தாளின்முடி வைத்தெதிர்த ரித்தனனிட டங்கைவரி சாபகவ சத்தி னனிபம், யாளியர வங்கருடன் வன்னிசலிலந்திமிர மிரவியிவை யேகடவுளாம், வாளியின்வி னோதமுற வெய்தனனி ருந்தமுடி மன்னவர்ம திக்கும் வகையே. |
(இ-ள்.) மீளி - வீரத்திற் சிறந்தவனான, மகவான் மதலை - இந்திர குமாரனாகிய அருச்சுனன்,- ஆயுத புரோகிதன் விலோசனம் உணர்ந்து - ஆயுதவித்தைக்குக் குருவான துரோணாசாரியனது கண்ணின்குறிப்பை யறிந்து, அவன் மலர் தாளில் முடிவைத்து - அவனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளிலே தனது தலையை வைத்து [சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு], எதிர் - அவனெதிரிலே, இடம் கை வரி சாபம் தரித்தனன் - இடக்கையில் கட்டமைந்த வில்லை ஏந்தியவனாய், கவசத்தினன் - (உடம்பில் தரித்த) கவசத்தையுமுடையவனாய், இபம் யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவைஏ கடவுள் ஆம் வாளியின் - யானையும் (அதற்குப்பகையான) சிங்கமும் பாம்பும் (அதற்குப் பகையான) கருடனும் அக்கினியும் (அதற்குமாறான) ஜலமும் இருளும் (அதற்குமாறான) சூரியனும் ஆகிய இவற்றின் விதமான தெய்வத்தன்மையுள்ள அம்புகளினால் [ஒன்றற்கொன்று பகையாகிய பல திவ்விய அஸ்திரங்களால்], வினோதம்உற -(காண்பவர்க்கு) வியப்புஉண்டாக, இருந்த முடிமன்னவர் மதிக்கும் வகை - (அவ்வரங்கத்தில்) இருந்த கிரீடத்தாரிகளான அரசர்கள் (தன்னை) நன்குமதிக்க, எய்தனன்-; (எ -று.) முன்பு தானே ஓர் அஸ்திரத்தை எய்து அதன்திறத்தை வெளிக்காட்டி வியப்பு உண்டாக்கி உடனே அதற்குப் பகையான அஸ்திரத்தைக் கொண்டு தணித்து இங்ஙனமே மிக்கவிநோதக் |