பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்183

    (இ-ள்.) அருக்கன் மைந்தன் - சூரியபுத்திரனான கர்ணன், மருவநின்று -
சமீபமாக வந்துநின்று, வானநாடன் மகனை - தேவலோகத்துக்குத் தலைவனான
இந்திரனது குமாரனாகிய அருச்சுனனைநோக்கி, நாம் இருவர்உம் தனுகொள்
போர் இயற்ற வம்மின் என்றலும்- 'நாம் இரண்டுபேரும் விற்போர்செய்யுமாறு
(நீர்) வருக' என்று கூப்பிட்டவளவிலே,- குருகுலம் தழைக்க வந்த குமரன் -
குருவென்னும் அரசனது குலம் செழிக்கும்படி பிறந்த மகனான துரியோதனன்,
அன்பு கூர - அன்புமிக, உருகி - (அந்தக்கர்ணன் விஷயத்தில்)
மனவுருக்கங்கொண்டு, நன்று என - இதுநல்லதென்று (அவன்செயலைக்)
கொண்டாடி, தழீஇ - (அவனைத்) தழுவியணைத்து, உளம் உகந்து -
மனமகிழ்ந்து, தருக்கினான் - பெருமை பாராட்டினான்; (எ -று.)

     துரியோதனனை 'குருகுலந்தழைக்கவந்த குமரன்' என்றது,
நூற்றுவரெனத்தொகையால் மிக்கதனாலேயே யென்க.           (338)

65.- அருச்சுனனுக்கும்கர்ணனுக்கும் நிகழும் வீரவார்த்தை.

அனந்தரம்பொரற்குநீகொலந்தரம்மெனக்கெனாத்
தனஞ்சயன்செயிர்த்தல்கண்டுதபனன்மைந்தன்மீளவும்
முனைந்தபோரின்முடிதுணித்துன்முகசரோருகத்தினால்
சினந்தணிந்தரங்கபூசைசெய்வனென்றுசீறினான்.

     (இ-ள்.) அனந்தரம் - பின்பு, தனஞ்சயன் - அருச்சுனன்,
(கர்ணனைநோக்கி), 'பொரற்கு - போர்செய்தற்கு, நீ கொல் எனக்கு அந்தரம் -
நீயாஎனக்கு எதிர்? ' எனா - என்றுசொல்லி, செயிர்த்தல் - கோபித்தலை, கண்டு
- பார்த்து,- தபனன் மைந்தன் - சூரியபுத்திரனான கர்ணன்,- மீளஉம் - பின்பும்,
'முனைந்த போரில் - பகைத்துச் செய்யும் போரிலே, முடி துணித்து - (உன்)
தலையை வெட்டி, சினம் தணிந்து- (அதனால் எனது) கோபமாறி, உன் முக
சரோருகத்தினால் -உனது முகமாகிய தாமரைமலரைக்கொண்டு, அரங்கபூசை
செய்வன்- யுத்தரங்கத்துக்குப் பூசைசெய்வேன், ' என்று - என்று சொல்லி,
சீறினான் - மிகவுங் கோபித்தான்; (எ-று.)

     தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்யவேண்டியபொழுதில், அருச்சுனன்
வடக்கிற்சென்று பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத்
திறைகொணர்தலால், அவனுக்குத் தநஞ்சய னென்று ஒருபெயர்; இனி,
இப்பெயர்க்கு - வெற்றியைச் செல்வமாகவுடையவனென்றும் ஒருபொருள்
கொள்ளலாம். ஸரஸ் + ருஹம்= ஸரோருஹம்; குளத்தில் முளைப்பது:
தாமரைக்குக் காரணவிடுகுறி.

66.-அதுகண்டு அனைவருந் திகைக்கக் கிருபன் நீதிகூறத்
தொடங்குதல்.

அதிருகின்றவெழிலிபோலருச்சுனன்றனைக்குறித்து
எதிருகின்றவின்மைகண்டியாவருந்திகைக்கவே
முதிருகின்றமெய்யனாகிமுன்னிருந்தகௌதமன்
உதிருகின்றவமுதவிந்துவொக்குமென்னவுரைசெய்வான்.

     (இ-ள்.) அதிருகின்ற எழிலி போல் - இடிமுழங்குகின்ற மேகம் போல,
அருச்சுனன்தனை குறித்து எதிருகின்ற - அருச்சுனனைக்