பக்கம் எண் :

184பாரதம்ஆதி பருவம்

குறித்து (க் கர்ணன்) எதிர்த்து நிற்கிற, வின்மை - வில்வலிமையை, கண்டு -
பார்த்து, யாவர்உம் - எல்லோரும், திகைக்க - பிரமித்து நிற்க, - முதிருகின்ற
மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் - மூப்படைந்த உடம்பையுடையவனாய்
(அச்சபையில்) முன்னே வீற்றிருந்த கிருபாசாரியன், உதிருகின்ற அமுத விந்து
ஒக்கும் என்ன உரைசெய்வான் - சிந்துகிற அமிருதத்துளிகள்போலு
மென்னும்படி சொல்பவனானான்; (எ-று.)- அவற்றை. அடுத்த கவியிற் காண்க.

     இப்பொழுது கிருபன் பேசும் பேச்சு, துரியோதனன் முதலிய சில
தீயோர்க்கு வருத்தம் விளைப்பினும், நீதிமுறைமையுணர்ந்த நல்லோர்பலர்க்கும்
இன்பத்தை விளைத்தல்பற்றி, அச்சொற்களுக்கு அமிருதத்துளிஉவமை.
வன்மைகண்டு என்றும் பாடம்.                               (340)

67.-கிருபன் நீதிகூறத் துரியோதனன் அதனை மறுக்கத் தொடங்குதல்.

சூதன்மைந்தன்வேலையேழு சூழுமேதினிக்கெலாம்
நாதன்மைந்தனுடன்வெகுண்டு நவிலுதற்குநண்ணுமோ
ஏதமுண்டுசாலவென்ன ராசராசனிகலியக்
கோதமன்றனக்குளங் கொதிக்குமாறுகூறுவான்.

     (இ-ள்.) 'சூதன் மைந்தன் - தேர்ப்பாகனது மகன், வேலை ஏழு சூழும்
மேதினிக்கு எலாம் நாதன் மைந்தனுடன் - ஏழுகடல்கள் சூழ்ந்த பூமி
முழுதுக்கும் அரசனது குமாரனோடு, வெகுண்டு நவிலுதற்கு நண்ணும் ஓ -
கோபித்து வீரவாதம் பேசுதற்குத் தகுமோ? [தகாது என்றபடி]; சால ஏதம் உண்டு
- (இங்ஙனம் பேசுதல்) மிகவுங்குற்றமுடைத்து, 'என்ன - என்று (கிருபன்)
சொல்ல,- ராச ராசன் - அரசர்க்கரசனாகிய துரியோதனன், - இகலி - மாறுபட்டு,-
அ கோதமன் தனக்கு உளம் கொதிக்கும் ஆறு கூறுவான் -
அந்தக்கிருபாசாரியனுக்கு மனம் கொதிக்கும்படி (மறுமொழி) கூறுபவனானான்;
(எ-று.)- அவற்றை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     நவிலுதற்கு என்ற குகரவீற்று வினையெச்சம், தொழிற்பெயர்த்
தன்மைப்பட்டு 'நண்ணும்' என்ற முற்றுக்கு எழுவாயாய்நிற்கும். கோதமன் என்றது,
கௌதம னென்ற வடசொல்லின் விகாரம்.

68.-துரியோதனன் மறுமொழி: இன்னாரின்னார்க்குச்
சாதிபேதம்கருதத்தக்கதன் றென்றல்.

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.

மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) கற்றவர்க்குஉம் - படித்தவர்களுக்கும், நலன் நிறைந்த
கன்னியர்க்குஉம்- அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், வண்மைகை
உற்றவர்க்குஉம் -ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர் என்று
உயர்ந்தவர்க்குஉம் -வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும்,
வாழ்வு உடைகொற்றவர்க்கும்உம் - செல்வவாழ்க்கையை