(இ - ள்.) சாரும் - பொருந்தியுள்ள, அன்பினின் - அன்பினாலும், கற்பினின் -கற்பினாலும், சிறந்த - மேம்பட்டிருந்த, சன்மிட்டை - சர்மிஷ்டா என்பவள்,- சேரும்மைந்தின்உம் உயர்வின்உம் தேசின்உம் சிறந்து - (தன்னிடத்துப்) பொருந்தியவலிமையினாலும் மேன்மையினாலும் ஒளியினாலும் மேம்பட்டவனாய், மேரு என்றிடமேதினி யாவைஉம் தரிப்பான் - மேருமலை யென்று சொல்லுமாறு பூமிமுழுவதையும்தாங்குபவனான, பூரு என்ற ஒரு புண்ணியப் புதல்வனை - பூருவென்று பேர்கொண்டஒப்பற்ற புண்ணியசாலியானபுத்திரனை, பயந்தாள் - பெற்றாள்; (எ -று.) மலைகள் பூமியின்மீதிருந்து பூமியைத் தாங்குவதனால், 'பூதரம்' எனப் பெயர்பெறும்: அங்ஙன் அதனைத்தாங்கும் மலைகளுள் மிக மேம்பட்டதாகிப் பூமியின்நடுவிலிருப்பதான மேருவெனப்படும் மலை, பூமியைத்தாங்குபவற்றில் தலைமைபெற்றதென்பது சொல்லாமலே விளங்கும். யயாதியின் புதல்வனான இந்தப்பூரு, தன் தோள்வலிமையாற் பூமிமுழுவதுந் தாங்குவதால், அவனை 'மேரு வென்றிடமேதினியாவையுந்தரிப்பான்' என்றது. மேரு வென்றிட என்றே பிரிப்பினுமாம்.தகப்பனாரின் சொல்லை மீறாது நடப்பவனாதல் பற்றி 'புண்ணியப்புதல்வன்' என்றது.இவன் மூத்தவனல்லாதவனாயினும், தந்தைக்குக்கீழ்ப்படிந்து அவனருள்பெற்றுஇராச்சியத்துக்கு உரியனாயினானென்ற பொருள் இங்குப்புலப்படும். 21.-சன்மிட்டையின் புதல்வரால் அன்னாளைத்தன்கணவன் காதலியாகக்கொண்டதை யூகித்துச் சீறித் தந்தையில்லத்தைத் தேவயானை சார்தல். மருவிளங்கொடியனையமென் மருங்குலாள்பின்னும் இருவர்மைந்தரைப்பயந்தன ளிறைமனைகாணா உருவிளங்கியவுலகுடை நிருபனுக்கிவண்மேல் திருவுளங்கொலென்றழன்றுதன் றாதையிற்சென்றாள். |
(இ - ள்.) மருவு இளங் கொடிஅனைய மெல் மருங்குலாள்- பொருந்திய இளங்கொடியையொத்த மெல்லிய இடையையுடையவளாகிய சன்மிட்டை, பின்னும் -பூருவைத்தவிர, இருவர் மைந்தரை பயந்தனள் - இரண்டு புதல்வரைப் பெற்றாள்: இறைமனை அரசன் தேவியாகிய தேவயானை, காணா - (அந்தப்புதல்வரைப்) பார்த்து,(அவர்கள் தன்கணவனது சாயையுடையவரா யிருந்ததனால்), உரு விளங்கிய உலகுஉடை நிருபனுக்கு - வடிவத்தினால் விளங்குபவனாகி உலகங்களையெல்லாம்தன்னதாகக்கொண்ட அரசனுக்கு [யயாதிக்கு], இவள்மேல் திருவுளம் கொல் - இந்தச்சன்மிட்டையின்மீது கருத்துப்போலும், என்று - என்றுகருதி, அழன்று - (யயாதிமன்னவனைச்) சினந்து, தன் தாதை இல் சென்றாள் - தன்னுடைய தந்தையாகிய சுக்கிராசாரியரின் வீட்டினையடைந்தாள்; (எ - று.) பூருவைத்தவிர இன்னும் இரண்டுபுத்திரரைச் சன்மிட்டை பெற, அந்தப் புதல்வரிடத்துத் தன் கணவனது சாயையைக் கண்டு, இந்தச்சன்மிட்டைமீது நம்கணவன்காதல்கொண்டு இப்புத்திரரைப் பெற்றான்போலு மென்று ஊகித்துணர்ந்துதேறி, |