பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்195

வர்களான, உபயாசன் யாசன் எனும்பேர் இருவோர்உம் - உபயாசனென்றும்
யாசனென்றும் பெயரையுடைய இரண்டுமுனிவர்களும், கூறும் முறையின் சடங்கு
இயற்றி- (வேதசாஸ்திரங்களிற்) கூறப்பட்ட விதி முறைப்படிஉரிய சடங்குகளைச்
செய்து, கோவின் வழக்கம் பெரு வேள்ளி - அரசர்க்குஉரிய வழக்கமாகிய
பெரியபுத்திரகாமயாகத்தை, நூறு மகத்தோன் நிகர் அரசை - நூறு
அசுவமேதயாகங்களைச் செய்தவனான தேவேந்திரனைப் போன்ற
யாகசேனராசனை, நோன்மைக்கு இசைய புரிவித்தார் - அவன் பெருமைக்குத்
தக்கபடி [மிகச் சிறப்பாகச்] செய்வித்தார்கள்; (எ -று.)

     கங்காதீரத்திலுள்ள அந்தணர் பலர் வசிக்கும் இடத்தில் யாஜன் உபயாஜன்
என்ற இரண்டு பிரமவிருடிகள் தவவொழுக்கத்திற் சிறந்து இருந்தனரென்றும்,
அவர்களுள் மூத்தவனான யாஜன் தலைவனாய் நின்று, இளையவனான
உபயாஜனைப் புரோகிதனாகக் கொண்டு, யாகஞ்செய்வித்தன னென்றும்
முதனூலால் விளங்கும். சடங்கு என்பது - ஷடங்க மென்னும் வடசொல்லின்
விகார மென்றும், (வேதத்தின்) ஆறு அங்கங்களிற்கூறிய முறைக்கு ஏற்பச்
செய்யப்படுந் தொழிலென்று ஏதுப்பொருள் படுமென்றுங்கூறுவர்.            (359)

86.- உபயாசன் புத்திரகாமயாகத்தை முடித்தல்.

புரிந்தமகப்பேற்றழல்வேள்விப் பொன்றாவோமப்பொருண்மிச்சில்
பரிந்துவிபுதரமுதேய்ப்பப் பைம்பொற்கலத்தினிறைத்தாங்குத்
தெரிந்தமணிப்பூணவன்றேவிக் களிக்கத்தீண்டாளாகியபின்
சொரிந்துகனலினுபயாச னிமைப்பிற்சுதனைத்தோற்றுவித்தான்.

    (இ-ள்.) புரிந்த - இவ்வாறுசெய்த, மகப்பேறு வேள்வி - புத்திரகாம
யாகத்தில், அழல்ஓமம் - அக்கினியில் ஓமஞ்செய்த, பொன்றா பொருள் -
குறைபாடில்லாத பொருளினது [ஹவிஸ்என்னும் தேவருணவினது], மிச்சில் -
சேஷத்தை, விபுதர் அமுது ஏய்ப்ப - தேவாமிருதத்தைப்போல, பைம்பொன்
கலத்தின் நிறைத்து - பசிய பொன்னினாலாகிய பாத்திரத்திலேவைத்து, ஆங்கு -
அப்பொழுது, தெரிந்த மணி பூணவன் தேவிக்கு பரிந்து அளிக்க -
தேர்ந்தெடுத்த இரத்தினாபரணங்களை யணிந்த அவ்யாகசேனராசனது
மனையாளுக்கு அன்போடு கொடுக்கப்புக, தீண்டாள் ஆகிய பின் - (அவள்
அதனைச் செருக்கினால்) வாங்கிக்கொள்ளாதவளாக அதன் பின்பு, உபயாசன்-,
கனலின் சொரிந்து - (சேடித்த அந்த ஹவிஸையும்)அக்கினியிலே ஆகுதிசெய்து,
(அதனால்), இமைப்பில் - ஒரு நொடிப்பொழுதிலே, சுதனை தோற்றுவித்தான் -
புத்திரனைப் பிறப்பித்தான்; (எ-று.)

     ஓமசேடத்தைக் கொடுக்குஞ்சமயத்தில் அரசன்மனைவி செருக்குக்கொண்டு
அவனை வாங்கியுண்ணுதற்கு மறுக்க, முனிவன் மந்திரசுத்தமான அந்த ஹவிசை
அனலிற்பெய்து அங்குநின்று மகனை யுண்டாக்கலானா னென்க.
முதனூலிற்குஏற்ப, இவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது. பாலபாரதத்தும் இவ்வாறே
உள்ளது. இச்செயலை யாஜன்செய்ததாகமுதனூல்கூறுகின்றது. தீண்டாள்