பக்கம் எண் :

196பாரதம்ஆதி பருவம்

ஆகியபின் என்பதற்கு - பூப்படைந்தாளாக அதன்பின் என்று கூறுவாருமுளர்,
விபுதர் - விசேஷ புத்திமான்க ளென்று காரணப் பெயர்.          (360)

87.- திருஷ்டத்யும்நன் தோன்றுதல்.

வலையம்பிறழமுடிதயங்க மணிக்குண்டலம்பேரழகெறிப்பச்
சிலையுங்கையுமெய்யும்வயந் திகழ்போர்வயிரக்கவசமுமாய்க்
கொலைவெஞ்சிங்கக்குருளைபொலங் குன்றின்புறத்துக்குதிப்பது[போல்
தலைவன்களிக்கத்தடந்தேர்மேற் றனயனொருவன்றலைப்பட்டான்.

     (இ-ள்.) வலையம் பிறழ - தோள்வளைகள்  விளங்கவும், முடிதயங்க -
கீரீடம் பிரகாசிக்கவும், மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப - இரத்தின
குண்டலங்கள் மிக்க அழகைச் செய்யவும், சிலைஉம் கை உம் - வில்லும்
கையுமாய், மெய்உம் வயம் திகழ் போர் வயிரம் கவசம்உம் ஆய் - உடம்பும்
வீரம் விளங்கும் போருக்குஉரிய வச்சிரகவசமும் பொருந்தி, பொலம் குன்றின்
புறத்து குதிப்பது கொலை வெம் சிங்கம் குருளை போல் - பொன்மயமான
மேருமலையின்மீது குதிப்பதொரு கொலைத்தொழிலில்வல்ல கொடிய
சிங்கக்குட்டிபோல, தட தேர்மேல் தனயன் ஒருவன் - பெரிய தேரின்மீது ஒரு
குமாரன், தலைவன் களிக்க தலைப்பட்டான் - யாகசேனராசன் களிப்பை
யடையுமாறு (ஓமாக்கினியினின்று) வெளிப்பட்டான்; (எ -று.)

     கையில் வில்லேந்திக் கவசந்தரித்த உடம்புடன் என்பது, இரண்டாமடியின்
பொருள். பொற்றேராதலால், பொன்மலை உவமை.

88.-அதுகண்டு அனைவருங் களித்தல்.

தேரோடருக்கனருணமணிச் சிமயத்துதிப்பச்செவ்வியுடன்
நீரோடையிற்செந்தாமரைக ணிறம்பெற்றலர்ந்துநின்றனபோல்
வீரோதயன்வந்துதிப்பளவின் மேன்மேன்மகிழ்ந்துமெய்களித்துப்
பாரோர்கண்கள்களித்தனவாற் பார்க்குந்தோறும்பரிவுற்றே.

    (இ-ள்.) அருக்கன் - சூரியன், தேரோடு - தேருடனே, அருணம் மணி
சிமயத்து - சிவந்த அழகிய உதயகிரியில், உதிப்ப - உதிக்க, (அதனால்),
நீர்ஓடையில் - நீர்நிலைகளிலே, செம் தாமரைகள் - செந்தாமரைமலர்கள்,
செவ்வியுடன் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் - அழகுடனே நிறத்தையும்
பெற்று மலர்ந்துநிற்பனபோல,- வீர உதயன் வந்து உதிப்பு அளவில் -
வீரத்தன்மை உதித்தற்கு இடமாயுள்ள அக்குமாரன் (தேரோடு சிவந்த
ஓமாக்கினியினின்று மேலெழுந்து) வந்து தோன்றியவளவிலே,- பாரோர் -
பூமியிலுள்ளவர்கள், பார்க்கும் தோறுஉம் பரிவு உற்று- (அக்குமரனைப்)
பார்க்குந்தோறும் அன்புமிக்கு, மேல் மேல் மகிழ்ந்து - மிகவும் அதிகமாக
மகிழ்ச்சிகொண்டு, மெய் களித்து - மனம்களிக்க, கண்கள் களித்தன- (அவர்கள்)
கண்கள் களிப்புத்தோன்ற மலர்ந்தன; (எ - று.)

     மெய்களித்து - உடல்பூரித்து என்றுமாம்; அப்பொழுது, களித்தல்-
காரியத்தைக் காரணத்தாற் கூறிய உபசாரவழக்கு; மெய் சிலிர்த்து
என்றுங்கூறலாம். ஆல் - ஈற்றசை: தேற்றமுமாம்.                 (362)