பக்கம் எண் :

202பாரதம்ஆதி பருவம்

     சந்தனுவமிசம் அநீதியுடைய துரியோதனனால் விளங்காது, நீதிநெறியுடைய
தருமனாலேயே விளங்குவது பற்றி, ' 'சந்தனுவின் திருமரபு தயங்கச்
செந்திருமேவருசிறுவன்' என்றார். தழீஇ-காரணப்பொருட்டு.             (371)

98.-அதுகண்டு துரியோதனன் மிகப் பொறாமை
கொள்ளுதல்.

துன்மதியான சுயோதனன்மாழ்கித்
தன்மதியாலரு டந்தையையெய்திப்
புன்மதியாமுரை சிற்சில்புகன்றான்
மன்மதியாது மதித்தலிலாதான்.

     (இ-ள்.) துன்மதி ஆன - துர்ப்புத்தியைக்கொண்ட, சுயோதனன்-, மாழ்கி -
(தருமனது யுவராச பட்டாபிஷேகத்தைக்கண்டு) வருந்தி, மன் மதி யாதுஉம்
மதித்தல் இலாதான் - இராசநீதியைச் சிறிதும் ஆலோசியாதவனாய், அருள்
தந்தையைஎய்தி - (தன்னைப்) பெற்ற தந்தையான திருதராட்டிரனை அடைந்து,
தன் மதியால் - தனது எண்ணத்திற்கு ஏற்ப, புல்மதி ஆம் உரை சிற்சில்
புகன்பவனானான்;(எ-று)- அவற்றை, அடுத்த கவியிற்காண்க. துர்மதி -
வடசொல். மதி - நீதிக்கு, ஆகுபெயர்.                          (372)

99.- துரியோதனனது பொறாமைவார்த்தை.

உன்பதம்யாவு முதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினையெந்தாய்
அன்பதிலாவவ னனுசர்மதத்தால்
என்பதமம்ம விறந்ததையின்றே.

     (இ-ள்.) எந்தாய் - எமது தந்தையே! உன் பதம் யாஉம் - உனது
அரசாட்சி யுரிமையெல்லாவற்றையும், உதிட்டிரனுக்குஏ - தருமபுத்திரனுக்கே,
மன்பதையோடு - மக்கட்பரப்புடனே, வழங்கினை - கொடுத்திட்டாய்: அவன்
அன்புஅது இலா அனுசர் மதத்தால் - அவனுடைய அன்பு இல்லாத தம்பியரின்
செருக்கினால், என்பதம் இன்றுஏ அம்ம இறந்தது - எனது நிலைமை
இன்றைக்கே அந்தோ அழித்திட்டது! (எ -று.)-" என்றலும்" என அடுத்த
கவியோடு தொடரும்.

     இன்றே யிறந்தது - விரைந்துணிவும்பற்றிய காலவழுவமைதி. ஏ -
பிரிநிலை. அம்ம - இரக்கக்குறிப்பு.ஐ - அசை.                     (373)

100.-இரண்டுகவிகள் - அதற்குத் திருதராட்டிரன் கூறும் சமாதானம்.

என்றலுமைந்தனை யிந்துகுலத்தோய்
நின்றிலையான்மனு நீதியிலையா
பொன்றியவெம்பி பதம்புதல்வர்க்கே
அன்றிநுமக்கர சாளுதலாமோ.

     (இ-ள்.) என்றலும் - என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே,-
மைந்தனை- (தன்) மகனான அவனை நோக்கி,- (திருத