பக்கம் எண் :

208பாரதம்ஆதி பருவம்

     உனக்குத் தம்பியர்வலிமையும் தோள்வலிமையையும் மிக்கிருத்தலால்
அவையேபோதும்; வேறுசேனைமுதலியனவும் மிகுதியாக வேண்டா என்பது,
உட்கோள். தருமத்தினின்று தவறினவர்களுக்குத் தக்க தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால், யமனுக்கு 'தருமன்' என்று பெயர்: அப்பெயரே இங்கு
அறமெனக் குறிக்கப்பட்டது; 'தேவர்களை இருதிணையாலுங் கூறலாம்' ஆதலால்,
இங்கு அஃறிணையாற் கூறினார்.                              (386)

113.-திருதராட்டிரன் புரோசனனைத் தருமனுக்கு
மந்திரியாக்குதல்.

புகன்றகேள்விப் புரோசனன்றன்னையிம்
மகன்றனக்குநீ மந்திரியாகியே
இகன்றவர்ச்செற் றினியோர்க்கினிமைசெய்து
அகன்றஞாலமிவன் வழியாக்குவாய்.

இதுவும்அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) (இங்ஙனம் சொன்னபின்பு திருதராட்டிரன்), புகன்ற கேள்வி
புரோசனன் தன்னை - சிறப்பித்துச்சொல்லப்பட்ட நூற்கேள்வியையுடைய
புரோசனனை நோக்கி,- 'நீ-, இ மகன் தனக்கு மந்திரி ஆகி -
(இனி)இத்தருமபுத்திரனுக்கு மந்திரியாய், இகன்றவர் செற்று - (இவனது)
பகைவர்களை அழித்து, இனியோர்க்கு இனிமைசெய்து- (இவனது) நண்பர்களுக்கு
நன்மையைச் செய்து, அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் - பரந்த
நிலவுலகத்தை இவன்வழிப்படுத்துவாய் ',- (எ-று.)- 'என்ன' என வருங் கவியோடு
இயையும்.

     இனி, பின்னிரண்டடிகளுக்கு வேறொருபொருள் வருமாறு:- இகன்றவர்ச்
செற்று - பகைவர்களான அப்பாண்டவர்களை அழித்து, இனியோர்க்கு
இனிமைசெய்து - வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மைசெய்து,
அகன்ற ஞாலம் - பரந்த இராச்சியம் முழுவதையும், இவன்வழி ஆக்குவாய்-
இத்துரியோதனனுக்கு உரியதாம்படி செய்திடுவாய் என்பதாம். இங்ஙன் இரு
பொருள்படக்கூறினன் திருதராட்டிர னென்க.                   (387)

114.- புரோசனன் பாண்டவருடன் வாரணாவதஞ் செல்லுதல்.

என்னவாங்க ணிறைஞ்சியனந்தரம்
சொன்னசொற்படி சூழ்படைவேண்டுவ
என்னவுங்கொண் டிளவரசோடுமப்
பொன்னகர்க்கொடு போயினனென்பவே.

     (இ-ள்.) என்ன - என்றுசொல்ல,- (புரோசனன்), ஆங்கண் - அப்பொழுது,
இறைஞ்சி - (அத்திருதராட்டிரனை) வணங்கி, அனந்தரம் சொன்ன சொல்படி
சூழ்படை வேண்டுவ என்னஉம் கொண்டு - பின்பு (அத்திருதராட்டிரன்) சொன்ன
சொல்லின்படி சூழ்ச்சிசெய்தற்குரிய ஆயுதங்களிலும் சேனை முதலிய
பரிவாரங்களிலும் வேண்டியவை யெல்லாவற்றையும் உடன்கொண்டு,-
இளவரசோடுஉம் - இளவரசனான தருமனுடனே, (மற்றை நால்வரையுங்
குந்தியையும்), அ பொன் நகர் கொடு போயினன் - அழகிய அந்த
வாரணாவதநகரத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றான்;