பக்கம் எண் :

210பாரதம்ஆதி பருவம்

கோவி னாணைந டத்திக் குவலயத்
தேவி மெய்களிக் கச்சிறந் தாரரோ.

     (இ-ள்.) ஆவி அன்ன அமைச்சன் மொழி படி - உயிரை யொத்த
(புரோசன னென்னும்) அந்த மந்திரியின் சொற்படி, மேவி - (அம்மாளிகையிற்)
சேர்ந்து,- அத்திசை வேந்தர் குழாம் தொழ- அந்தத்திக்கிலுள்ள அரசர்களுடைய
கூட்டம் (தம்மை) வணங்க, கோவின் ஆணை நடத்தி - அரசாட்சிக்கு உரிய
கட்டளையைச் செலுத்திக் கொண்டு, குவலயம் தேவி மெய் களிக்க சிறந்தார் -
பூமிதேவி உடம்புகளிப்படையும்படி (பாண்டவர்கள்) சிறப்புற்றிருந்தார்கள்; (எ-று.)

     பாண்டவர் தன்னை மிக இனியனென்று கருதும்படி தந்திரமாக
நடந்தமைபற்றி, 'ஆவியன்னவமைச்சன்' என்றார். அரோ - ஈற்றசை.     (391)

வேறு.

118.-மூன்றுகவிகள் - குளகம்: பாண்டவர் அரக்கு மாளிகையைக்
கவனித்துப் புரோசனன்மீது சங்கை கொள்ளுதலைக் கூறும்.

மன்ன ரைவரும் வாரணா வதந்தனின் மருவித்
துன்ன லார்தொழத் தொன்னிலம் புரந்திடு நாளில்
பின்ன நெஞ்சுடைப் புரோசனன் பேதுறு மதியான்
முன்ன மேயினி தமைத்திடு மனைச்செயன் முன்னா.

     (இ-ள்.) மன்னர் ஐவர்உம் - பாண்டவராசர் ஐந்துபேரும்,
வாரணாவதந்தனில் மருவி - அவ்வாரணாவதநகரத்தில் வசித்து, துன்னலார்
தொழ - பகைவர்கள் வணங்க, தொல் நிலம் புரந்திடும் நாளில்,-
தொன்றுதொட்டு வந்த இராச்சியத்தை அரசாளும் நாளில்,- பின்னம் நெஞ்சு
உடை புரோசனன் - மாறுபட்டமனத்தையுடைய புரோசனன், பேது உறு மதியால்
- மாறுபாடுகொண்ட (தன்)அறிவினால்,முன்னம்ஏ இனிது அமைத்திடு-(தாங்கள்
அந்நகரத்துக்கு வரும்) முன்னமே (தங்களுக்கென்று) அழகிதாகக்கட்டி
யமைத்துவைத்த, மனை - அரக்குமாளிகையின், செயல் அமைப்பை, முன்னா -
கருதி,- (எ-று.)-"என்றார்" என் 120- ஆங் கவியோடு முடியும்.

     பாண்டவர்கள் அரக்குமாளிகை யமைப்பை நுட்பமாக ஊகித்து உணர்ந்து
அதனால் புரோசனன்வஞ்சனையை அறியலானாரென்க. பிந்நம் - வடசொல்.
பின்னநெஞ்சு - புறமாகிய சொற்செயல்களோடு ஒற்றுமைப்படாத அகம்.அமைத்த
மன் என்று பிரதிபேதம்.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் - பெரும்பாலும் முதற்சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.
                                                       (392)

119.மெழுகினானமக் காலயம்வகுத்ததும்விரகே
ஒழுகுகின்றதன் னொழுக்கமும்வஞ்சனையொழுக்கே
எழுகடற்படை யாவையுமிவன்வழியனவே
தொழுதகையுளும் படையுளசூழ்ச்சியும்பெரிதால்.