பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்211

     (இ-ள்.) மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததுஉம் விரகுஏ -
நமக்கு(இவன்) மெழுகினால் சிறந்தமாளிகையை அமைத்து வைத்ததும்
வஞ்சனையேயாம்; ஒழுகுகின்ற தன் ஒழுக்கம்உம் வஞ்சனை ஒழுக்குஏ -
(இனியவன்போல) ஒழுகுகிற இவனுடைய ஒழுக்கமும் வஞ்சகமான
நடத்தையேயாம்: எழுகடல் படை யாவைஉம் இவன் வழியனஏ -
ஏழுசமுத்திரம்போன்ற [மிகவும் அதிகமான] சேனைகளெல்லாம் இவன்
வசத்திலுள்ளனவே: தொழுத கையுள் உம் படை உள - (பகைவர்களுடைய)
குவித்து அஞ்சலிசெய்கிற கைகளினுள்ளம் ஆயுதங்கள் இருக்குமன்றோ!
சூழ்ச்சிஉம் பெரிது - (அவர்களுடைய) சதியாலோசனையும் மிக்கதேயாம்;

     "தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா, ரழுதகண்ணீரு
மனைத்து" என்ற திருக்குறளும், 'பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்
அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்' என்ற
பரிமேலழகருரையும், "தொழுததங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர,
அழுதகண்ணீரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து, பழுதுகண் ணரிந்து
கொல்லும்படையுடனொடுங்கும் பற்றா, தொழிக யார்கண்ணுந் தேற்றந்
தெளிகுற்றார் விளிகுற்றாரே" என்ற சீவகசிந்தாமணியும் உணரத்தக்கன.
ஆல் -அசை.

120.

சங்கையுண்டினியுண்டியுஞ் சாந்தமும்பூணும்
பொங்குநுண்ணிழைத்துகிலுமந் தாமமும்பூவும்
இங்கிவன்பரிந்தியற்றிய கோடலமென்றார்
கங்கைநீர்தவழ்கழனிசூழ் பழனநாடுடையார்.

    (இ-ள்.) 'சங்கை உண்டு - (இவனிடத்து நமக்குச்) சந்தேகமுள்ளது: இனி -
இனிமேல், இங்கு இவன் பரிந்து இயற்றிய - இவ்விடத்தில் இவன் (நம்பக்கல்)
அன்புடையான்போன்று அமைக்கின்றவான, உண்டிஉம் - உணவுகளையும்,
சாந்தம்உம் - சந்தனத்தையும், பூண்உம் - ஆபரணங்களையும், பொங்கு நுண்
இழை துகில்உம் - சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினாலாகிய
ஆடைகளையும், அம் தாமம்உம் - அழகிய மாலைகளையும், பூஉம் -
மலர்களையும், கோடலம் - (ஆராயாது) கொள்ளோம்,' என்றார் - என்று
(தமக்குள்) நிச்சயித்தார்கள்: (யாவரெனில்),- கங்கை நீர் தவழ் கழனி சூழ்
பழனம் நாடு உடையார் - கங்காநதியின்நீர் பாய்கிற கழனிகள் சூழ்ந்த
மருதநிலத்தையுடைய குருநாட்டுக்கு உரியவர்களான பாண்டவர்கள்; (எ-று.)

     அடிசில் நீர்முதலிய உண்ணப்படும் பொருள்களில், தீங்கு வராமற்
காத்தற்குஅவற்றைக் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய வேண்டுமென்றும்,
சந்தனம் முதலியவற்றை அரசவன்னப் பறவையின் கண்ணிலும்
சக்கரவாகப்பறவையின் முகத்திலும் உறுத்தித் தூய்மைகண்டல்லது
கைக்கொள்ளலாகாதென்றும், நஞ்சுகலந்திருப்பின் குரங்கு உண்ணாது, அன்னம்
கண்களினின்று இரத்தஞ்சொரியும், சக்கரவாகம் முகங்கடுக்கும் என்றும், இன்னும்
இதுபோலவும் சிந்தாமணி முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ள விஷயம் இங்கு
அறியத்தக்கது. ("பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம், ஆய்ந்தளந்
தியற்றப்பட்டவடிசில்நீ ரின்ன