பக்கம் எண் :

212பாரதம்ஆதி பருவம்

வெல்லாம், மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்கவென்றாங்,
கேந்துபூண்மார்ப னேவ வின்னண மியற்றி னானே" என்ற சீவகசிந்தாமணிச்
செய்யுள், இங்கு ஞாபகத்துக்கு வருகின்றது.                     (394)

121.-சிற்பியொருவன் வீமனிடம் வந்து ஒரு செய்தி
சொல்லத்தொடங்கல்.

ஐயமுற்றிவரிருப்புழி மயனினுமதிகன்
சையமொத்ததோள்வலனுடைத் தபதியனொருவன்
வையமுற்றுடைவீமனை யொருதனிவணங்கி
ஐயபட்டதையறிந்தருளாமுறையென்றான்.

     (இ-ள்.) இவர் - இந்தப் பாண்டவர்கள், ஐயம் உற்று இருப்பு உழி -
(இவ்வாறு புரோசனனிடத்திற்) சந்தேகங் கொண்டிருக்கும் பொழுது,- மயனின்உம்
அதிகன் - (சிற்பத்தில் அசுரத்தச்சனான) மயனைக்காட்டிலும் மேம்பட்டவனான,
சையம் ஒத்த தோள் வலன் உடை தபதியன் ஒருவன் - மலைபோன்ற
தோள்களின் வலிமையையுடைய சிற்பியொருத்தன், வையம் முற்று உடை
வீமனை ஒரு தனி வணங்கி - பூமிமுழுவதையும் ஆளுதற்கு உரியவனான
வீமனை ஏகாந்தமான இடத்தில் (தான்) தனியனாய்வந்து கண்டு வணங்கி, - 'ஐய
தலைவனே! பட்டத்தை - நடந்ததொருசெய்தியை, ஆம்முறை - நடந்தபடியே,
அறிந்தருள் - (நான் சொல்லக்கேட்டு) அறிந்தருள்வாயாக, 'என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)- அச்செய்தி, அடுத்த மூன்றுகவிகளில் விவரமாகக்
கூறப்படும்.

     ஸ்தபதி யென்ற வடசொல், தபதியென விகாரப்பட்டது; அதன்மேல் அன் -
ஆண்பால்விகுதி. பாண்டவர்க்கு அனுகூலமாக விதுரனிட்ட கட்டளையைப் பிறர்
அறியாமல் நிறைவேற்றிய வல்லமையையுடைய சிற்பியாதலின், இவனை,
'மயனினுமதிகன்' என்று விசேடித்துக்கூறினார். 'வையமுற்றுபடை' என்று
வீமனுக்குக்கொடுத்த அடைமொழியால், ஆற்றலிற் சிறந்த அவனே
பாண்டவரைவரையுங் காக்கும் உபாயத்தைக் கூறக்கேட்டற்கு உரியவ னென்பது
தோன்றும்.                                               (395)

122.-இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்: அச்சிற்பி
கூறும்விவரம்

நுந்தையேவலிற்கம்மியர் நூதனமாக
இந்தமாநகர்த்திருமனை யியற்றிடுநாளின்
வந்தமந்திரிவஞ்சனை யறிந்தறன்வடிவாந்
தந்தையென்னையுமேவினன் றன்மையினுணர்ந்தே.

     (இ-ள்.) நுந்தை - உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிரனது, ஏவலின் -
கட்டளையினால், கம்மியர் - சிற்பிகள், நூதனம் ஆக - புதுமையாக, இந்த மா
நகர் திரு மனை இயற்றிடு நாளின் - பெரிய இந்த வாரணாவதநகரத்திலே
அழகிய இந்த மாளிகையைச்செய்தபொழுது, அறன் வடிவு ஆம் தந்தை -
தருமசொரூபியாகிய (உமது) சிறிய தந்தையான விதுரன், வந்த மந்திரி வஞ்சனை
அறிந்து - (மாளிகை கட்டுவித்தற்கு) வந்த புரோசனனென்னும் மந்திரியினது
வஞ்சனையை அறிந்து, என்னைஉம் தன்மையின் உணர்ந்து ஏவினன் -
என்னையும் என்குணத்தால் நம்பத்தக்கவனென்று அறிந்து(இம்