பக்கம் எண் :

214பாரதம்ஆதி பருவம்

அச்சமற்றிவனம்மனைக் கம்மனைவழங்கும்
நிச்சமின்றுகொலென்றுகொலெனநினைந்திருந்தான்.

    (இ-ள்.) (வீமன்), தச்சரில் பெருந் தலைவனுக்கு - (இவ்வாறு உய்யும்வழி
கூறிய) சிறந்த அச்சிற்பிக்கு, உரிமையின் - தகுதியினால், தனங்கள் -
செல்வங்களை, பிச்சரின் கொடுத்து - பித்தர்போலத் தலைதெரியாது
(மிகுதியாகக்) கொடுத்து,- அவன் விடை கொண்டதன் பின்னர் - அச்சிற்பி
விடைபெற்றுக்கொண்டு சென்றபின்பு,- அச்சம் அற்று - பயம் ஒழிந்து,- 'இவன் -
இப்புரோசனன், நம் மனைக்கு அம்மனை வழங்கும் - நாம் வசிக்கும் இந்த
மாளிகையில் அக்கினியை வைப்பான்: நிச்சம் - (இது) நிச்சயம்: இன்று கொல்
என்று கொல் (இது செய்யும் நாள்) இன்றைக்கோ என்றைக்கோ? ' என
நினைந்துஇருந்தான் - என்று எண்ணிக்கொண்டு கவனிப்புடன் இருந்தான்;
(எ-று.)

     தச்சர் - இச்சிறப்புப்பெயர், சிற்பிகளென்றபொருளில் வந்தது.
அம் மனைக்கு - நெருப்பிற்கு, அ மனை - அந்த மாளிகையை, வழங்கும் -
ஒப்பிப்பான் என்று கூறுதலும் ஒன்று. அம்மனையென்பது- (அம் - நீர், மனை -
இடம்) நீர் பிறத்தற்குக் காரணமாயுள்ளதென்ற பொருளால்,
நெருப்பிற்குவந்ததோர் ஏதுப்பெயராம்; நெருப்பினின்று நீர் தோன்றியதென
வேதமுங் கூறும்.                                            (399)

126.-பாண்டவர் பகலில் வேட்டையாடி இரவில்
விழிப்புடன் இருத்தல்.

விடவிவன்சினைநெடுங்கொடி தழுவலின்மிடைந்த
அடவியெங்கணும்வேட்டையாற் றங்கள்பேராண்மை
நடவிநன்பகலிரவுகண் டுயிலலர்நடந்தார்
புடவிதங்கள்வெண்குடைநிழற் குளிருமாபுரப்போர்.

     (இ - ள்.) தங்கள் வெள் குடை நிழல் - தங்கள் வெண்கொற்றக் குடையின்
நிழலினால், புவி குளிரும் ஆ - பூமிமுழுவதுங்குளிர்ச்சியடையும்படி, புரப்போர்
- பாதுகாக்கவல்லவரான பாண்டவர்கள்,- நல் பகல் - நல்ல பகற் காலத்தில்,
விடவி வல் சினை நெடுகொடி தழுவலின் மிடைந்த அடவி எங்கண்உம் -
மரங்களின்வலிய கிளைகளிலே நீண்டகொடிகள் தழுவிப்படர்தலால்,
அடர்ந்துள்ள காடு முழுவதிலும், வேட்டையால் - வேட்டையாடுதலால்,
தங்கள்போர் ஆண்மை நடவி - தங்களுடைய சிறந்த ஆண்தன்மையை [பல
பராக்கிரமங்களை]ப் பரவச்செய்து, இரவு - இராத்திரியில், கண்துயிலலர் நடந்தார்
- கண்மூடி யுறங்காதவர்களாய் ஒழுகினார்கள்; (எ-று.)

     வேட்டையென்ற வியாஜத்தினாற் பகலையும், கண்விழிப்பினால் இரவையும்
போக்கினார் பாண்டவரென்க: இங்ஙன் இவர் செய்தது, எக்காலத்துப்
புரோசனனால் தீங்குவிளையுமோ என்ற அச்சத்தினாலாகும் விடவி= விடபீ:
விடபம் - கிளை: அதனையுடையது விடபீ. பெண்பாலாகிய கொடி
ஆண்பாலாகிய மரத்தின்கிளையைக் கொள் கொம்பாகக் கொண்டு தழுவும்
இயல்பை முதலடிவிளக்கும். 'துயிலற' என்றும் பாடம் உண்டு.             (400)

127.- சிலகாலம் புரோசனனுடன் பாண்டவர் வசித்தல்.

பரந்தளோடொருமனைவயற் பயில்பவர்போல
வேந்தரைவருமந்திர வலியானான்மிக்கோர்.