பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்215

காந்துநெஞ்சுடையமைச்சனைக் கைவிடாரணுகித்
தாந்தமெய்யெனவுயிரெனத் தனித்தனிசார்ந்தார்.

     (இ-ள்.) மந்திரம் வலியினால் மிக்கோர் - ஆலோசனை வலிமையினால்
மேம்பட்டவர்களாகிய, வேந்தர் ஐவர்உம் - பாண்டவராசர் ஐந்துபேரும்,-
பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல - பாம்புடன் ஒருவீட்டில்
வசிப்பர்போல, காந்தும் நெஞ்சு உடை அமைச்சனை கைவிடார் அணுகி -
கொதிக்கிற மனத்தையுடைய அந்தமந்திரியை விலக்கிவிடாமல் அருகிற்கொண்டு,
தாம் தம் மெய்என உயிர் என தனி தனி சார்ந்தார் - தங்களில் தாங்கள்
உடம்பும் உயிரும் போல ஒருவரோடொருவர் கலந்திருந்தார்கள்; (எ-று.)

     ஒருவருர்க்கொருவர் இன்றியமையாத அன்பின ரென்பது நான்காமடியின்
கருத்து. மந்திரவலிமிக்கவர், பாம்போடு ஒருமனையிற் பயிலக் கூடு மென்க,
"உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள், பாம்போடுடனுறைந் தற்று" என்ற
குறள் கருத்து, முதலடியிற் காணத்தக்கது.                           (401)

128.-பாண்டவர் ஒருநாளிரவிற் புரோசனை அருகிற்
படுக்கவைத்தல்.

ஆங்கொர்கங்குலினழைத்துநீ டரசியலுசாவி
ஈங்குநீதுயில்வைகுதி யெம்முடனென்னப்
பாங்கர்மெல்லணைப்பள்ளியும் பரிவுறவழங்கித்
தாங்களும்பொலஞ்சேக்கையிற் றங்கினரன்றே.

     (இ-ள்.) ஆங்கு-அங்ஙனம்நிகழும் நாள்களுள், (பாண்டவர்கள்), - ஓர்
கங்குலின் - ஓர் இரவில், அழைத்து - (புரோசனனை) அழைத்து, நீடு
அரசுஇயல் உசாவி - பெரிய அரசாட்சிமுறைமையைக் குறித்து (வெகுநேரம்
அவனுடன்) ஆராய்ந்து,(பின்பு), நீ ஈங்கு எம்முடன் துயில் வைகுதி என்ன - 'நீ
இவ்விடத்தில் எங்களோடு நித்திரை செய்வாய்' என்றுசொல்லி,- பாங்கர் -
(தங்கள்) பக்கத்தில், மெல் அணை பள்ளிஉம் பரிவு உற வழங்கி - மெல்லிய
மெத்தைப்படுக்கையையும் அன்புமிகக்கொடுத்து, தாங்களும்-, பொலம்
சேக்கையில் தங்கினர் - அழகிய படுக்கையிற் படுத்தார்கள்;(எ-று.)

     காரணமின்றி யழைத்து 'எம் அருகிற் பள்ளிகொள்க' என்று கூறின்
ஐயமுறுவா னென்றுகருதி, அரசியலுசாவுவார் போன்று அழைத்து நெடும்பொழுது
உசாவிப் பின்பு அங்ஙன் கூறினரென்க.

129.- வீமன் அரக்குமாளிகையில் தீப்பற்றவைத்தல்.

உணர்வறத்துயிலுற்றபோ தற்றமங்குணராத்
துணைவரைத்திருத்தாய்பதந் தொழுகெனச்சொல்லி
அணிகொள்கோயிலைத்தாதைநண் பனுக்கிரையளித்தான்
இணையிலாவமுதுரகர்கோ னிடைநுகர்ந்திருந்தான்.

     (இ-ள்.) உணர்வு அற துயில் உற்ற போது - (புரோசனன்) உணர்ச்சி நீங்க
நித்திரை செய்தபொழுது,- இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து
இருந்தான் - ஒப்பற்ற அமிருதத்தைச் சர்ப்பராசனான வாசுகியினிடத்தில் (பெற்று)
உண்டு (அவன்நகரத்திற் சிலநாள்) இருந்தவனான வீமசேனன்,- அங்கு அற்றம்
உணரா - அப்பொழுது சமயமென்று அறிந்து,- துணைவரை திரு