படியும்யாவையும்வழங்கியெம் பனிமதிமரபிற் கடியுநீயினியெனமகிழ்ந் தளியுடனளித்தான். |
(இ-ள்) இடிஉம் ஆறு கொள் நெடுமொழி - இடியும் தணியும் கம்பீரத்தொனிகொண்ட சொற்களையுடைய, யயாதி-, அன்று - (இளமையைத் திருப்பிப்கொடுத்த) அப்போது, (அந்தப் பூருவை நோக்கி), 'எம் பனி மதி மரபிற்கு -எம்முடையதான குளிர்ந்த சந்திரனிடத்துவந்த (இந்த) வமிசத்துக்கு, அடிஉம் -காரணமா யிருப்பவனும், இனி, - நீ-; என - என்று சொல்லி, மகிழ்ந்து - உவகைகொண்டு,- 'இவற்கு ஏ- இந்தப் பூருவுக்கே, முடிஉம் - (பரம்பரையாக வந்த)அரசகிரீடமும், மாலைஉம் - (தன் மரபினர்க்குரிய) அடையாளப் பூமாலையும், வெள்முத்தம் கவிகைஉம் - வெள்ளிய முத்துக்குடையும். முரசும்-, படிஉம்- பூமியும்,யாவைஉம் -(ஆகிய) எல்லாமும், (உரியன என்று),' வழங்கி - சொல்லி, அளியுடன் -அன்போடு, அளித்தான் - கொடுத்தான்; (எ -று.) அரசர்க்குஉரிய தசாங்கத்தில் ஈண்டுக்கூறியன ஒழிந்த மற்றவை 'யாவையும்' என்பதனாற் குறிக்கப்பட்டன. தன் முதுமையைக்கொண்டு இளமையைத் தன் விருப்பின்படி தந்து மன விருப்பத்தை நிறைவேற்றியதனால் மனமுவந்த தந்தை 'சன்மிட்டையின் குமாரனான பூருவுக்கும் அவன் சந்ததியார்க்குமே இராச்சியம் உரியதாகுக' என்று சொல்லி, தன்னுடைய அரசாட்சியை அந்தப் பூருவுக்கே கொடுத்தனனென்க. (33) 26.- பூருவின் குலத்திலே பரதன் என்று ஒரு மன்னவன் தோன்றுதல். விரதமிஞ்சியவேள்வியாற் கேள்வியான்மிக்கான் சுரதமங்கையர்முலைக்குவ டணைவரைத்தோளான் பரதனென்றொருபார்த்திவன் பரதமுமிசையுஞ் சரதமின்புறவக்குலந் தனிலவதரித்தான். |
(இ - ள்.) விரதம் மிஞ்சிய - விரதத்தை மிகுதியாகக்கொண்ட, வேள்வியால் -யாகத்தினாலும், கேள்வியால் - கேள்வியினாலும், மிக்கான் - மேம்பட்டவனும், சுரதம்மங்கையர் - சுரதத்திற்கு உரிய மகளிரின், முலை குவடு அணை - முலையினுச்சிஅணையப்பெற்ற, வரை தோளான் - மலைபோன்ற தோளையுடையவனுமான, பரதன்என்ற ஒரு பார்த்திவன் - பரதனென்று பேர்பூண்ட ஓரரசன், பரதம்உம் - நாட்டியசாஸ்திரமும், இசைஉம் - சங்கீத சாஸ்திரமும், சரதம் இன்புற - இனிதி னின்பமடைய,அ குலம் தனில் - அந்தப் பூருவின் குலத்திலே, அவதரித்தான் - பிறந்தான்;(எ-று.) பூருவின் வமிசத்தில் தோன்றிய பரதன் வேள்வி கேள்விகளில் மிக்கவனாக இருந்ததுபோலவே, சங்கீதம் நாட்டியம் என்னும் இவற்றிலும் மிக்கவனாகியிருந்தா னென்க. இந்தப் பரதன் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடம் தோன்றியவன்.கேள்வி - ச்ருதி யென்ற வடசொல்லின் பொருளது எனினுமாம். பார்த்திவன் -பிருதிவிக்குத்தலைவனென்று பொருள்படும். (34) |