பக்கம் எண் :

222பாரதம்ஆதி பருவம்

யெழுகிற தெளிவான சந்திரகாந்தி போன்ற வெள்ளொளியால் இருளொழிய,- 'இ
வனத்தில் இ நள் யாமம் நீ வந்த ஆறு என்கொல் - இக்காட்டில்
இந்தநடுராத்திரியில் நீ வந்தவிதம் என்ன காரணத்தாலோ? இவர்கள் யார்-?'
என - என்று, வீமசேனனோடு உரைவிளம்பினாள் - வீமசேனனை நோக்கி
வினாவினாள்; (எ-று.)

      'வெவ்வனற்சுடர்க்கொத்த வோதியாள்' என்றது - அவளது இயல்பாகவுள்ள
வடிவை விளக்கும். 'அவ்வனத்தில் வாழர மடந்தை யென் றைய மெய்த வந்து'
என்றது மாயையினால் அழகிய வடிவ மெடுத்து வந்தமை விளக்கும்.
பாலபாரதத்திற்குஏற்ப, வனத்தில் வாழரமடந்தை என்பதற்கு - வனதேவதை
யென்று பொருள் கொள்ளலாம். அரமடந்தை - அமரமடந்தையென்பதன்
விகாரம். திமிரம் - வடசொல். பீமஸேநன் - பயங்கரமான
சேனைகளையுடையவன். மூன்றாமடியில், வனம் - வர்ணம்; வடசொல்.      (413)

4.-இதுமுதல் நான்குகவிகள் - வீமனுக்கு இடிம்பி கூறும்
விடை.

யானும்வந்தவாறுரைசெய்கேனினக் குரைசெய்நீயெனக்கியார்
                                        கொலென்னலும்,
தானுமங்கவன்றன்னொடோதுவா டழுவுமாதரந்தங்குசிந்தையாள்,
ஊனுகந்துதின் றிடுமிடிம்பனென் றொருவனிங்கிரா
                                   வணியையொத்துளான்,
மானுடங்கொண்மெய்க்கந்தமூர்தலால் வரவறிந்தனன்
                                       வாளரக்கனே.

இதுமுதல் ஏழுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) (அதுகேட்டு வீமன் அவளை நோக்கி), 'யான்உம் வந்த ஆறு
நினக்கு உரை செய்கேன் - நானும் இங்கே வந்தவகையை உனக்குச்
சொல்லுவேன்; நீ யார்கொல் எனக்கு உரைசெய் - நீ யார்? (அதனை) எனக்கு
முந்திச்சொல்வாய், 'என்னலும் - என்று கூறியவளவிலே, தழுவும் ஆதரம் தங்கு
சிந்தையாள்தான்உம் - (அவனைப்) புணரும் ஆசை பொருந்திய மனத்தையுடைய
அவ்விடிம்பியும், அங்கு அவன் தன்னொடு ஓதுவாள் - அப்பொழுது
அவ்வீமனுடன் சொல்லுவாள்;- ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று -
தசையை விரும்பியுண்கிற இடிம்பனென்று பேர்பிரசித்தனாய், ஒருவன் வாள்
அரக்கன் - கொடிய ஓரிராக்கதன், இராவணியை ஒத்து - இராவணன் மகனான
இந்திரசித்தைப் போன்று, இங்கு - இவ்வனத்தில்,உளான் - இருக்கின்றான்;
(அவன்), மானுடம் மெய் கொள் கந்தம் ஊர்தலால்- மனித சரீரத்தின்
சம்பந்தமான வாசனை வீசுதலால், வரவு அறிந்தனன் - (உங்கள்) வருகையை
அறிந்தான்;

     வீமனுக்கு விடைகூறலுற்றதன் காரணம், அவள் கொண்ட காதலே
யென்பது தோன்ற, 'தழுவுமாதரந் தங்கு சிந்தையாள்' என்றார். ராவணி -
வடமொழித் தத்திதாந்தம்; இவனது பலபாராக்கிரமங்களும், மாயைவல்லமையும்,
கொடுமையும், இராமயணத்தில் பிரசித்தம். வாள் - கொடுமைக்கு, இலக்கணை.
'ஒருவனுண்டிராவணியை' என்றும் பாடம்.                       (414)

5.எம்முனேவலால்யான்மலைந்திடற்கெய்தினேனினைக்கொன்று
                                      மென்பயன்,
அம்மவெற்பிரண்டனையபொற்புயத் தழகெறிக்குநீடாரமார்ப
                                          கேள்,
கொம்மைவெம்முலைத்தெரிவையர்க்குளங்கூசுமாசை
                               நோய்கூறுகிற்பதென்,