| எம்மனோர்களுஞ்சொல்வர்யானுனக்கெங்ஙனேகொலாமிறுதி கூறுகேன். |
(இ-ள்.) எம்முன் ஏவலால் - எனது தமையனான அவனது கட்டளையினால், யான் மலைந்திடற்கு எய்தினேன் - நான் (உங்களைப்) பொருதுகொல்லுதற்காகவே (முதலில்) வந்தேன்; நினைகொன்று உம் என் பயன் - உன்னைக் கொல்லுதலால்தான் (நான்) அடையும் பிரயோசனம் என்ன? வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆரம் மார்ப - இரண்டுமலைகள் போன்ற அழகிய தோள்களையுடை அழகுமிக்க நீண்ட இரத்தினமாலையை யணிந்த மார்பைமுடையவனே! கேள் - (யான் சொல்வதைக்) கேட்பாயாக: கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு - திரட்சியுள்ள விரும்பப்படுந் தனங்களையுடைய மகளிர்க்கு, ஆசைநோய் கூறுகிற்பது - (தம்முடைய) காமநோயை(ப் பிறர்க்கு) எடுத்துச்சொல்லுதற்கு, உளம் கூசும் - மனம்நாணும், என்று-, எம் அனோர்கள்உம் சொல்வர்- (நாணமில்லாத) எம்மவர்களும் [அரக்கியர்களும்] சொல்லுவார்கள்; (அங்ஙனமாக), யான்-, உனக்கு-, எங்ஙனே - எப்படி, இறுதிகூறுகேன்- (என்கருத்தின்) முடிவைச் சொல்வேன்! (எ-று.) இராமயணத்தில் "தாமுறு காமத்தன்மை தாங்களே யுரைப்பதென்பது, ஆமென லாவதன்றா லருங்குல மகளிர்க்கம்மா" என்றது, இங்கு ஒப்பு நோக்கத்தக்தது. அம்ம வென்பது - உரையசை. உன்னைக் கொல்லுதலன்று யான்கருதிய பயனென்பாள் 'நினைக்கொன்று மென்பயன்' என்றாள். (415) 6. | பெருஞ்சுழிப்படக் கரைபுரண்டெழப் பெருகும்யாறுபின் பிறழ் கலங்கல்போய், அருஞ்சுவைப்படுந் தெளிவினோடுசென் றாழிவேலைவா யணையுமாறெனப், பொருஞ்சினத்துடன் கொன்றுதின்றிடப் போதருந்தொழிற் பேதைநான்மெலிந்து, இருஞ்சிறைச்சுரும் பிசைகொண்மாலையா யின்பமாலுழந் துன்னையெய்தினேன். |
(இ-ள்.) இருஞ் சிறை சுரும்பு இசை கொள் மாலையாய் - பெரிய இறகுகளையுடைய வண்டுகள் கீதம்பாடப்பெற்ற பூமாலையையுடையவனே! பெரு சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு - பெரிய சுழிகளுண்டாகவும் கரைபுரண்டு வெள்ளமெழவும் நீர்பெருகுகிற நதியானது, பின் - பின்பு, பிறழ் கலங்கல் போய் - மாறுபட்ட கலக்கம் நீங்கி, அரு சுவைபடும் தெளிவினோடுசென்று - அருமையான இன்சுவை பொருந்திய தெளிதலோடுபோய், ஆழி வேலைவாய் அணையும் ஆறு என - ஆழ்ந்தகடலிற் சேரும்விதம் போல,- பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதைநான் - மோதுகிற கோபத்துடனே கொன்று தின்னவந்த கொடுந்தொழிலையுடைய அறிவில்லாமகளாகிய யான்,(பின்பு), மெலிந்து - அக்கடுமை நீங்கி, இன்பம் மால்உழந்து - காமமோக மடைந்து, உன்னை எய்தினேன் - உன்னை யடைந்தேன்;(எ-று.) மழைக்காலத்திற் கலக்கத்தோடுபொருந்திய யாறு வெயிற் காலத்தில் கலக்கம் தணிந்து கடலிற் புகுவதுபோல, கோபத்தோடு வந்தயான் பின்பு கோபந்தணிந்து உன்னைச் சேர்ந்தே னென்றாள். |