பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்225

ளென்பதுபற்றி ஒரு பெண்ணின் பின்னே செல்வது, ஆடவர்க்கு ஆண்மை
போதும்ஓ - புருஷர்க்கு உரியஆண்திறமைக்குத் தகுமோ?[தகாதென்றபடி];
வரைக்கண் வாழ்வு கூர் நும்முன் - மலையில் வாழ்தல்பொருந்திய உன்தமையன்,
எம்முன் மலைய எண்ணி மேல் வந்தபோது - எமது எதிரே போர்செய்யக்கருதி
எம் மேல் எதிர்த்து வரும்பொழுது, பார் - (நீ) காண்பாய்; அரக்கன் ஆகில்
என் அவுணன் ஆகில் என் - இராக்கதனானாலென்ன அசுரனானாலென்ன?
அவனை ஓர் கணத்து ஆவிகொள்வன்- அவனை ஒருகணப்பொழுதிலே
உயிர்கவர்வேன்; (எ -று.)

      'அரக்கனாகிலென் அவுணனாகிலென்' என்றது, அலக்ஷ்யத்தாற் கூறினது.
அரக்கர், அவுணர் - பதினெட்டுத் தேவகணங்களுட் கொடிய சிலவகை, ஈற்று
ஏகாரம் - தேற்றம்; மற்ற ஏகாரங்கள் - அசை                   (418)

9.- இதுவும், அடுத்தகவியும் - இடிம்பன்தன்மையும்
வரவுங்கூறும்.

இடிம்பைதன்மனங்கொண்டகாளையிங் கிவையியம்பலுந்
                              நவையிடிம்பனும்,
கொடும்பெருஞ்சினங்கதுவுகண்ணினன் குருதிநாறுபுண்
                              கூரெயிற்றினன்,
உடம்புபெற்றதோரிருண்முகத்திலே யோரிரண்டு
                              வெஞ்சுடருதிக்கவும்,
நெடும்பிறைக்கொழுந்தோரிரண்டுவா ணிலவெறிக்கவுந்
                             நின்றநீர்மையான்.

     (இ-ள்.) இடிம்பை தன் மனம் கொண்ட காளை - இடிம்பையினது
மனத்தை(த் தனது அழகினாற்) கவர்ந்த இளவீரனான வீமன், இங்கு இவை
இயம்பலும் - கீழ்க்கூறிய இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிரா
நின்றவளவிலே, கொடு பெருஞ்சினம்கதுவு கண்ணினன் - கொடியபெரிய
கோபக்கனல் வெளித்தோன்றும் கண்களையுடையவனும், குருதி நாறு புண் கூர்
எயிற்றினன் - இரத்தம்நாறப்பெற்ற தசைதோய்ந்த கோரதந்தங்களையுடையவனும்,
(அதனால்), ஓர் உடம்புபெற்றது இருள் - ஒருபுருஷவடிவத்தைப்பெற்ற
இருளானது, முகத்திலே - (தன்) முகத்திலே, ஓர் இரண்டு வெம்சுடர் உதிக்கஉம்
- வெவ்விய சூரியர் இருவர் தோன்றிவிளங்கவும், நெடு பிறைகொழுந்து ஓர்
இரண்டு வாள் நிலவு எறிக்கஉம் - நீண்ட இளம்பிறைகளிரண்டு ஒளியுள்ள
நிலாவை வீசவும், நின்ற - நின்றாற்போன்ற, நீர்மையான் -
தன்மையையுடையவனாகிய, நவை இடிம்பன்உம் - குற்றங்களையேயுடைய
இடிம்பனென்பவனும்,- (எ-று.) - 'கூவிக் குறுகினான்' என வருங்கவியோடு
முடியும்.

     பின்னிரண்டடி - இல்பொருளுவமை. அவ்வரக்கனது மிகக்கரிய வடிவத்தை
உடம்புபெற்ற இருளாகவும், அவன்முகத்திலுள்ள கோபாக்கினிச் சுவாலை வீசுகிற
கொடிய சிவந்த இரண்டுகண்களை இரண்டு சூரியராகவும், அவனது கடைவாயில்
வெளிப்பட்டு விளங்குகிற வளைந்தவெண்மையான இரண்டு கோரப்பற்களை
இரண்டு பிறைகளாகவுங் குறித்தார்; இதனை, தன்மைத்தற்குறிப்
பேற்றமென்னலாம். குருதியும்தசையும், தின்ற உடம்புகளினின்று பற்றியவை.
'புன்கூர்' 'வானிலவு' எனவும் பாடம்.                              (419)