பக்கம் எண் :

230பாரதம்ஆதி பருவம்

அப்பொழுது,- யாய் - தாயாகிய குந்தி, அரியின் பேடு - பெட்டைச் சிங்கம், தன்
கன்று திண் கரி பொர கண்டது என்ன - தனது கன்றாகிய சிங்கக்குட்டி வலிய
பெரிய யானையைப் பொருது அழிக்கக் கண்டதுபோல, கண்டனள் -
(மகிழ்ச்சியோடு) கண்டாள்; (எ -று.)

     கன்று - இளமைப்பெயர்; இது சிங்கத்துக்கு உரியதாதலை, "யானையும்"
என்ற தொல்காப்பியச் சூத்திரத்து 'உரிய' என்றதனாற் கொள்க.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் - கீழ்ச்சருக்கத்தின் முதற் கவி போன்ற
கலிவிருத்தங்கள்.                                               (426)

17.-அப்போது தருமன் முதலியோர் மகிழ்ச்சியும்,
இடிம்பியின்நிலையும்.

இளைஞருந்தம்முனு மிவனரும்பகை
களைகுவனினியெனக் கண்களித்தனர்
விளைவுறுகாதலான்மெலிந்தபாவையும்
உளைவுடனுவகையு மொருங்கினெய்தினாள்.

     (இ-ள்.) இளைஞர்உம் - தம்பியரான (அருச்சுனன் முதலிய) மூவரும்,
தம்முன்உம் - தமையனான தருமனும், இவன் இனி அருபகை களைகுவன் என
- இவ்வீமன் இனிமேல் அரிய (நமது) பகைவர்களை அழித்திடுவா னென்று
தெளிந்து, கண் களித்தனர் - கண் களிப்படைந்தார்கள்; விளைவுறு காதலால்
மெலிந்த பாவைஉம் - மிக்க ஆசைநோயால் மெலிவடைந்து அழகிய
பெண்ணான இடிம்பையும், உளைவுடன் உவகைஉம் ஒருங்கின எய்தினாள் -
வருத்தத்தோடு மகிழ்ச்சியையும் ஒருசேர அடைந்தாள்; (எ-று.)

     தருமன்முதலியோர் மிகவலிய அரக்கனைக்கொன்ற செயலைக்
கண்ணெதிரிற் கண்டதனால், வீமன் இனி அரியபெரிய பகைவரனை வரையுந்
தவறாது கொல்வா னென்று நிச்சயித்துக் களித்தன ரென்க. தமையனிறந்ததனால்
வருத்தமும், தன்னாற் கணவனாக வரிக்கப்பட்ட வீமனை இடையூறின்றிச் சேரலா
மென்னும் ஓர் கருத்தினால் மகிழ்ச்சியும் இடிம்பிக்கு ஒருங்கு நிகழ்ந்தனவென்க.
உளைவை முன்னும் உவகையைப் பின்னுமாக நிறுத்தியதனால், இவளுக்குச்
சோகம் தோன்றிக் கழிய முந்திய காதலே நிலைத்து நின்ற தென்க.

18.- சூரியோதய வருணனை.

பெருந்திறனிசாசரப் பிணத்தையவ்வனத்து
இருந்துளபறவைகட் கிருள்செய்கங்குலின்
விருந்திடக்கொளுத்திய விளக்கெனும்படி
அருந்திசைபொலிவுற வருக்கன்றோன்றினான்.

     (இ - ள்.) பேருந் திறல் நிசாசரன் பிணத்தை-வலிமையையுடைய அவ்வரக்கனது
உயிர்நீங்கியபேருடலை, அ வனத்துஇருந்துளபறவைகட்டு-அக்காட்டில்
தங்கியுள்ள (பருந்துகழுகுமுதலிய)  பறவைகளுக்கெல்லாம்.இருள்செய் கங்கலின்
விருந்து இட- இருளைச்செய்கிற அவ்விராப்பொழுதிலேவிருந்துணவாக இடு