பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்233

வீமன், பேசிய-, கட்டுஉரை - உறுதிமொழிகளை, கேட்ட,- பெற்ற தாய் -
(வீமனைப்) பெற்ற தாயான குந்தி, ஓசைகொள் மைந்தரோடு உசாவி - புகழ்பெற்ற
தனதுமற்றைக்குமாரர் நால்வருடனும் கலந்து ஆலோசித்து, நண்பினால் -
அன்பினால், ஏசுஅற - குற்றம் நீங்க, - இனிமை கூர - இனிமைமிக,
உரைத்தனள் - (வீமனைநோக்கிச் சில) கூறினாள்; (எ - று.)- அவற்றை, அடுத்த
கவியிற் காண்க.

     நண்பினால் என்பதற்கு - அவர்களுடைய மனவொற்றுமையால் என்க.
பாலபாரதத்தில் "பாண்டுஸூநுருபலப்யமாத்ருத:*** பீமமா ப்ரஸவம் ஆதிசத்ஸு
தீ:" என்று வருவதற்கு ஏற்பவும்," உறத்தகும் இவளை நீ யும்முன்வாய்மையால், '
"அன்னையுந்தம்முனுமறைந்த வாசகம்" என்று மேற்செய்யுள்களில்
வருவதற்கேற்பவும் 'மைந்தனோடுசாவி'  என்று பாடம்இருக்கலாம்.      (432)

23.மறுத்துரைப்பதுகட னன்றுமாந்தருக்கு
அறத்தியலார்கணு மமைதல்வேண்டுமால்
உறத்தகுமிவளைநீ யும்முன்வாய்மையால்
கறுத்தவருயிர்கவர் காளையென்னவே.

     (இ-ள்.) 'கறுத்தவர் உயிர் கவர் காளை - கோபித்த பகைவர்களுடைய
உயிரை (உடம்பினின்று) கவர்கிற மகனே! மறுத்து உரைப்பது கடன் அன்று -
(தம்மிடத்துக் குறைவேண்டியவரை) மறுத்துப் பேசுவது முறைமையன்று;
மாந்தருக்கு ஆர்கண்உம் அறத்து இயல் அமைதல் வேண்டும் -
மனிதர்க்குஎவரிடத்தும் தருமத்தினியல்பு பொருந்தவேண்டும்; உம்முன்
வாய்மையால் இவளை நீ உற தகும் - உனது தமையன் சொற்படி இவளை நீ
மணஞ் செய்தல் தகும்,' என்ன - என்று,- (எ-று.)- 'உரைத்தனள்' (22) என
கீழ்க் கவியோடு இயையும். ஆல் - ஈற்றசை.

     தமையன் விவாகமின்றியிருக்கையிலும் அவன் அனுமதி செய்தால் தம்பி
மணஞ்செய்துகொள்ளலா மென்பது நூற்கொள்கையாதலால், 'இவளை நீ
உம்முன்வாய்மையால் உறத்தகும்' என்றாள். பகைத்தவரை அழித்தல் போலவே
அன்பு கொண்டு சரணமடைந்தவரை ஆதரித்து அருள்வதும் தகுதி என்பாள்
'கறுத்தவருயிர்கவர் காளை மறுத்துரைப்பது கடனன்று' என்றும்,
இம்முறைமையை அரக்கர்விஷயத்திலும் ஒழியலாகா தென்பாள் 'மாந்தருக்கு
அறத்தியல் ஆர்கணும் அமைதல் வேண்டும்' என்றுங் கூறினாள்.       (433)

24.-வீமன் அதற்கு உடன்படுதலும், அனைவரும்
நீராடுதலும்.

அன்னையுந்தம்முனு மறைந்தவாசகம்
முன்னையின்மறையென முடியிற்சூடினான்
மின்னையுமுடன்கொடு போந்துமேவுநீர்
தன்னையுங்கண்டதிற் றுளைந்துதங்கினார்.

     (இ-ள்.) அன்னைஉம் தம்முன்உம் அறைந்த வாசகம் - தாயும் தமையனும்
சொன்ன வார்த்தையை, (வீமன்), முன்னையின் மறை என முடியில் சூடினான் -
பழமையான வேதவாக்கியத்தைப் போலத்