பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்235

வேற்றுவேடங்கொள்ளச் சொல்லின னென்க. புருபுண்ணிய னென்னும் முனிவன்
இல்லறம் நடத்துகையில் பிள்ளை யில்லாக் குறையால் சாஸ்திர விதிப்படி
சாலியஜ்ஞத்தைப் புரிகையில் பிரதியட்சமான திருமாலின் அநுக்கிரகத்தாற் பிறந்த
குமாரனுக்குச் சாலிகோத்திரனென்ற பெயர் அத்திருமால் கட்டளையின் படி
வைக்கப்பட்டது என வரலாறு அறிக; சாலிஹோத்ரன் - சாலி யென்ற நெல்லின்
ஹோமத்தினால் தோன்றியவன்.                                (436)

27.- பாண்டவர்கள் சாலிகோத்திரவனம் சேர்தல்.

எனத்தமபடரொழித் திமையவன்செல
வனத்தைவிட்டவ்வன மருவிவைகினார்
வினைப்படுத்தியாழினோர் முறையின்வேள்விசெய்
கனக்குழற்கன்னிதன் காதலானொடே.

     (இ-ள்.) என - என்றுசொல்லி, தம படர் ஒழித்து - தங்களுடைய
மனத்துயரத்தை நீக்கி, இமையவன் - வியாசமாமுனிவன், செல - செல்ல,-
(தருமன் முதலியோர்),- வினை படுத்து - மேற் செய்யவேண்டிய தொழிலில்
மனம்பொருந்தி,- யாழினோர் முறையின் - காந்தருவமுறைப்படி, வேள்விசெய் -
மணஞ்செய்த, கனம் குழல் கன்னி தன் - மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய
இளம் பெண்ணான இடிம்பியினது, காதலானொடே - கணவனானவீமனுடனே, -
வனத்தை விட்டு - அவ்விடிம்பவனத்தைவிட்டு, அ வனம் மருவி வைகினார் -
அந்தச் சாலிகோத்திரமுனிவனத்தைச் சேர்ந்து அங்கு வசித்தார்கள்;(எ-று.)

     நல்வினைப்பயனால் தனியே ஒருவரையொருவர் சந்தித்துக் கூடுகிற
கந்தர்வர்களின் வழக்கத்தைத் தழுவிய மணமாதலால், இது, காந்தர்வ மென்று
பெயர்பெறும்: இதற்கு 'யாழோர்கூட்டம்' என்று தமிழிற் பெயர். கந்தர்வர்
வீணைகைக்கொண்டு இசை பாடுந் தன்மைய ராதலால், 'யாழினோர்' எனப்
பட்டனர். திருமாலினது திருவவதாரமூர்த்தி யாதலால், வியாசன், 'இமையவன்'
என்று சிறப்பித்துக் கூறப்பட்டான். அன்றியும், சிறந்த முனிவர் சிறுபான்மை
'கடவுளர்' என வழங்கப்படுவர். இடிம்பை அழகிய வடிவங்கொண்டு
வந்ததனால், 'கனக்குழற்கன்னி' எனப்பட்டாள்.                     (437)

28.-இதுவும், அடுத்த கவியும் - குளகம்: வீமனும் இடிம்பியும்
உல்லாசமாகக் கூடிக்குலாவல்.

குந்தியையிரவுநன் பகலுங்கோதிலா
வந்தனைபுரிதலின் மகிழிடிம்பையும்
வெந்திறல்வீமனும் விழைந்துவள்ளியும்
கந்தனுமெனப்பெருங் காதல்கூரவே.

     (இ-ள்.) இரவுஉம் - இராத்திரியிலும், நல்பகல்உம் - நல்ல பகற்
காலத்திலும் [எப்பொழுதும் என்றபடி], குந்தியை - (தனது மாமியாகிய)
குந்திதேவிக்கு, கோது இலா வந்தனை புரிதலின் - குற்றமில்லாத வந்தனை
வழிபாடுகளைச் செய்தலிலே, மகிழ் - மகிழ்ச்சி கொண்ட, இடிம்பையும்-, வெம்
திறல் - (பகைவர்க்குக்) கொடிய வலிமையை