பக்கம் எண் :

236பாரதம்ஆதி பருவம்

யுடைய, வீமனும்,- வள்ளிஉம் கந்தன்உம் என - வள்ளியம்மையும்
முருகக்கடவுளும்போல, விழைந்து - (ஒருவரை யொருவர்) விரும்பி, பெரு காதல்
கூர - மிக்க அன்பு வளர,- (எ-று.)- 'மணம் புணர்ந்தனர்' என் வருங் கவியோடு
முடியும்.

     முருகக்கடவுள் வள்ளிமலையில் வந்து அங்குவளர்ந்துவந்த
வள்ளியம்மையைக்காந்தருவமணம் புணர்ந்து மலைச்சாரலில் சுனைக்கரையிலும்
தினைப்புனத்திலும் மலர்ப்பொழிலிலும் அவளுடன் கூடிக்குலாவியமை,
புராணங்களிற் பிரசித்தம். வள்ளி - முருகக் கடவுளின் மனைவியரிருவருள்
ஒருத்தி; (மற்றொருத்தி - தேவயானை.) வள்ளிக்கிழங்கு தோன்றிய குழியிலே
பிறந்தமை பற்றி, இவளுக்கு வள்ளியென்று பெயர்.                (438)

29.மான்மதங்கமழ்கொடி மந்திரந்தொறும்
கான்மணங்கமழ்தடங் காவகந்தொறும்
தேன்மிகுஞ்சுனைநெடுஞ் சிலம்பகந்தொறும்
மேன்மணம்புணர்ந்தனர் வேட்கைவிஞ்சவே.

     (இ-ள்.) மான்மதம் கமழ்-கஸ்தூரிமணம் வீசப்பெற்ற, கொடி மந்திரம்
தொறுஉம் - கொடிவீடுகளிலும், கான் மணம் கமழ் - மிக்க நறுமணம் வீசுகிற,
தட கா அகம் தொறுஉம் - பெரியசோலைகளினிடங்களிலும், தேன் மிகும் சுனை
- தேன்மிக்க சுனைகளையுடைய, நெடு சிலம்பு அகம் தொறுஉம் - பெரிய
மலைகளினிடங்களிலும், வேட்கை விஞ்ச - ஆசைமிக, மேல் மணம் புணர்ந்தனர்
- மேன்மையான கலவியின்பத்தை அனுபவித்தார்கள்; (எ-று.)

     மான்மதம் - கஸ்தூரியென்னும் ஒருசாதிமானினது கொழுப்பு: இது, குறிஞ்சி
நிலப்பொருள்களுள் ஒன்றாதலின், இங்குக் கூறப்பட்டது. கொடிமந்திரம் -
பூங்கொடிகளின் படர்ச்சியால் வீடுபோல் அடர்ந்த இடம், லதாக்ருஹ
மெனப்படும், சுனையில்தேன், நீர்ப் பூக்களினின்றும் கரைமரங்களினின்றும்
பெருகியவை. 'மணம் புரிந்தனர்' என்றும் பாடம் உண்டு.                (439)

30.- இடிம்பை கடோற்கசனென்ற மகனைப் பெறுதல்.

நிறந்திகழிருட்பிழம் பென்னநீண்டறப்
புறந்தருமுரோமமும் பொருப்புத்தோள்களும்
மறந்தருகனைகுரல் வாயுமாகவே
பிறந்தனன்கடோற்கச னென்னும்பேரினான்.

     (இ-ள்.) அற புறம் தரும் உரோமம்உம் - மிகுதியாக முதுகிலே பொருந்திய
மயிர்களும், பொருப்பு தோள்கள்உம் - மலைகள் போன்ற தோள்களும், மறம்
தரு கனை குரல் வாய்உம் ஆக - பெரு வலிமையைக் காட்டுகிற கர்ச்சிக்கும்
ஒலியையுடைய வாயும் பொருந்த,- நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்ட -
கருநிளம் விளங்குகிற இருளின் தொகுதிபோல(க் கரியதாய்) வளர்ந்த
வடிவமுடையனாய்,- கடோற்கசன் என்னும் பேரினான் - கடோத்கசனென்னும்
பெயரையுடைய மகன், பிறந்தனன் - (இடிம்பையினிடம்) தோன்றினான்;

     கடம் - குடம்: உத்கசம் மயிரில்லாதது: இவனுடைய, குடம் போன்றதலை
மயிரின்றி யிருந்ததனால், கடோத்கசனென்று