பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்239

     ஆதிதேயரே என்ற பாடத்துக்கு அதிதிபூசையைச் செய்பவரென்க.
இச்செய்யுள் வியாசபாரதத்தையொட்டி யெழுதியது.              (444)

35.-அவர்களை ஓரந்தணன் தன்மனைக்கு அழைத்துச் செல்லுதல்.

நன்மனைவாழ்க்கையி னயந்தசிந்தையான்
மன்மனையனையதன் மனையிலோர்முனி
தன்மனையம்மனை தம்பிமாரொடும்
என்மனைவருகென வெதிர்கொண்டேகினான்.

     (இ-ள்) நல் மனை வாழ்க்கையில் நயந்த சிந்தையான் - சிறந்த
இல்லறவாழ்விலே விரும்பிய மனத்தையுடையனாகிய, ஓர் முனி - ஓர்
அந்தணன்,- தன்மனை - தருமபுத்திரனை, அம்மனை - தாயோடும்,
தம்பிமாரொடும்- என் மனை வருக என - என்வீட்டுக்கு வருவீராக
என்றுசொல்லி, எதிர்கொண்டு-எதிர்சென்று உபசரித்து, மன் மனை அனைய
தன்மனையில் - இராசமாளிகையைப்போன்ற தன்வீட்டில், ஏகினான் -
அழைத்துச்சென்றான்;(எ-று.)

     இல்லறம் அனைவர்க்கும் உதவக்கூடியதாய்ச் சிறத்தலால், 'நன்
மனைவாழ்க்கை' எனப்பட்டது. பொருள்வளத்திலும் பெருமையிலும் மிக்க வீடு
என்றதற்கு, இராசகிருகத்தை உவமை கூறினார்.                     (445)

36.-பாண்டவர்கள் அவ்வூரில் விருந்துண்டு காலங்
கழித்தல்

ஒருதினத்தமிழ்தென வுள்ளநாளெலாம்
வருமுறைப்படிவிருந் தாகிவைகினார்
அருநெறிக்கடவுளர்க் கமுதமூட்டுதல்
இருபிறப்பாளருக் கென்றுந்தன்மையே.

    (இ-ள்.) ஒரு தினத்து அமிழ்து என - ஒருநாளையுணவுபெற்றாற்
போலவே, உள்ள நாள் எலாம் - மற்றுமுள்ள எல்லாநாள்களிலும், வரு முறை
படி - (பிராமணசாதிக்குத் தொன்றுதொட்டு) வருகின்ற முறைமைப்படி, விருந்து
ஆகி வைகினார் - (பாண்டவரும் குந்தியும்) விருந்தினராய் (அவ்வூரில்)
தங்கியிருந்தார்கள்; அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் -
அருமையானவழியில் (நடந்து தேசாந்தரிகளாய்) வந்த அந்தணர்களுக்கு இனிய
உணவை உண்பித்தல், இருபிறப்பாளருக்கு என்றுஉம் தன்மைஏ -
அந்தணர்களுக்கு என்றுமுள்ள இயல்பேயாம்; (எ-று.)

     ஒருநாள்போலவே அவ்வூரில் இருந்த நாள்களிலெல்லாம் அவர்கள்
ஒவ்வொருவீட்டில் ஒவ்வொருநாளைக்கு விருந்தினராய்ச் சென்று
அவ்வவ்வீட்டுக்கு உரிய அந்தணரால் உபசாரத்தோடு இன்னுண வளிக்கப்பெற்று
வாழ்ந்தன ரென்ற சிறப்புப்பொருளை, வழிப்போக்கராய்நேர்ந்த அந்தணர்க்கு
விருந்திட்டு உதவுதல் பிராமண சாதியார்க்கு இயற்கையே யென்ற
பொதுப்பொருள்கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி.
'வருமுறைப்படி' என்பதற்கு - நாள்தோறும் முறையே ஒவ்வொரு
வீட்டுக்குச்சென்று என்றுமாம். பூமியில் தேவர்போலக் கொண்டாடப்படுதலால்,
அந்தணர், 'கடவுளர் எனப்பட்டனர். தாய்வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச்
சன்மத்தோடு உபநயநச்சடங்கினால்வருகிற ஞானசன்மமும்