பக்கம் எண் :

24பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) 'கொண்டல் வாகன்உம் - மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனும்,
குபேரனும்-, நிகர்- (இவனுக்கு) ஒப்பாவார்,' என - என்று, குறித்து- எண்ணி,-
புண்டரீகன் - தாமரையில் வாழ்பவனாகிய பிரமதேவன், முன்-, படைத்த -
சிருஷ்டித்த, அ புரவலன் - அந்த அத்தியென்ற அரசன், அமைத்தது- (தனக்கு)
இராசதானியாகப்படைத்த நகரம்,- எண்திசா முகத்து - எட்டுத்திக்கிலும், எழுது -
எழுதிய,சீர் - கீர்த்தியையுடைய, இயக்கர் - இயக்கரின், மா நகர்உம் - சிறந்த
நகரமும்[அளகையும்], அண்டர் தானம்உம் - தேவர்கள் வாழிடமான
அமராவதிநகரமும்,உவமை கூர் - உவமையாக மிகப்பெற்ற, அத்தினாபுரி -
அத்தினாபுரியென்றபட்டணமாகும்;

     செல்வத்தினால் யட்சராஜனான குபேரனது ராஜதானியாகிய அளகாபுரியும்,
அழகினால் தேவேந்திரராஜதானியான அமராவதியும் போலும் அத்தினாபுரியென்க.
அத்தியென்பவனாலேற்படுத்தப்பட்டதுபற்றி, இந்நகரம் அத்தினாபுரியெனப்
பெயர்பெற்றது: இனி, யானைச்சேனையை மிகுதியாக வுடையதாக
இவ்விராசதானியையமைத்தனாதல் வந்த பெயருமாம்.                  (37)

30.-கஜேந்திரனும் முதலையுமானவரும் இக்குலத்து உதித்தவரே.

மீனமாகியவிண்ணவன் விநதைமுன்பயந்த
யானமீதெழுந்தருளிவந் திருபதம்வழங்கக்
கானநாண்மலர்க்கயத்திடைக் கயமும்வெங்கராமும்
ஆனமானவரிருவரு மக்குலத்தவரே.

     (இ - ள்.) மீனம் ஆகிய - மச்சாவதாரஞ்செய்த, விண்ணவன் -
திருமாலாகிய தேவன், விநதை முன் பயந்த யானம்மீது - விநதை யென்பவள்
முன்புபெற்ற(கருடனாகிய) வாகனத்தின்மேல், எழுந்தருளிவந்து-, இருபதம்
வழங்க - (தன்னுடைய)தாளிணைகளைக் காட்சிகொடுக்குமாறு, கானம் நாள் மலர்
கயத்திடை - நறுமணம்பொருந்தி யன்றுமலர்ந்த தாமரைமலரைக்கொண்ட
பொய்கையிலேயிருந்த, கயம்உம் -யானையும், வெம் கராம்உம் - கொடிய
முதலையும், ஆன-, மானவர் இருவர்உம்-பெருமையுள்ளோரிருவரும்,
அகுலத்தவர்ஏ - அந்தக் குலத்திற்பிறந்தவரே யாவர்;(எ-று.)

     யானையானவனை இந்திரத்யும்நனென்றும், முதலையானவனை அநுரு
என்றும்கூறுப. இந்தக் குருகுலச்சருக்கத்து இந்த ஓரிடந்தவிரச்
சந்திரன்முதல்விசித்திரவீரியனென்ற அரசன்வரையில் பாலபாரதத்திற் கூறிய
முறையும் இந்நூலிற்கூறியமுறையும் ஒத்திருக்கின்றன: அத்தியென்ற அரசனைக்
கூறியபின் குருஎன்ற அரசனே பாலபாரதத்திற் கூறப்பட்டுள்ளான்: கயமும்
முதலையும் ஆனஅரசரைப்பற்றி, அந்தப் பாலபாரதத்திற் கூறப்பட்டிலது.
ஒருகுலத்தின் சிறப்புத்தோன்றப்பொறுக்கிக் கூறுமிடத்து அந்தக்குலத்தினில்
தவறுசெய்து சாபமடைந்தவரைப்பற்றிச்சொல்லுவது சிறவாதாதலாலும், இங்ஙன்
சாபமடைந்தவராகக் கூறப்படுவார் இந்தக்குலத்தவரேயென்று நிச்சயமாகக்
கூறுதற்கு ஏற்ற மேற்கோள் கிடையாமையாலும்,ஒருகால் இந்தப்பாடல்
இடைச்செருகலாயிருக்குமோ என்றுதோன்றுகின்றது.                (38)