கைலாசமலை, சங்கம் மலை - சங்குமயமானதொரு மலை, என - என்று (கண்டவர் உவமை) கூறும்படி, நங்கைமார் மொண்டு சொரிதருகின்ற - (சமையல் செய்யும்) மகளிர் (பாத்திரங்களினின்று) முகந் தெடுத்துத் தொகுதியாய்ச்சொரிகின்ற, அடிசில்உம் - அன்னத்தையும், முந்து கறிகள்உம் - சிறந்த கறிகளையும், வெந்த பால் மண்டு நறு நெ(ய்) யொடு - காய்ந்த பாலோடும் மிக்க நறுமணமுள்ள நெய்யோடும், அந்த விடலைஉம் மைந்தர் அனைவர்உம் - கீழ்க்குறித்த வீரனான வீமனும் மற்றைப் புதல்வரெல்லோரும், உண்டு-புசித்து, தம் பண்டி நிறைவு உறுபின்பு - தங்கள் வயிறுநிறைந்தபின்பு, பண்டம் - அவ்வுணவுப்பொருள்கள், பிறிது ஒரு பண்டி கெழுமிய - வேறொரு வண்டி நிறைந்தன; (எ-று.) - கெழுமிய - பலவின்பால்முற்று வெண்மையும் பெருந்தொகுதியும்பற்றி, அன்னத்திரளுக்கு முத்துமலை வெள்ளிமலை சங்குமலைகளை உவமை கூறினார். பண்டி என்பது வயிறென்னும் பொருளதாதலை, "உதரமோ டகடு குக்கியுடன் பண்டி வயிற்றின் பேராம்" என்ற நிகண்டினாலும் அறிக. இதற்குச் சந்தக்குழிப்பு - 41 - ஆங் கவியிற் கூறியதே. (458) 49.-வீமன் சித்தனாய்த் தன்னை அலங்கரித்துக் கொள்ளுதல். வய்யமுழுதுடையையனிளவலும்வைகலுடன்மனைவைகுவோர், உய்யும்வகைபுகலையையுரையினையொய்யென்விரைவொடுகை கொளா, வெய்யபகனுடல்பெய்தகுருதியின் மெய்யையெழிலணிசெய்தனன், செய்யமலர்கொடுசெய்யதுகில்கொடு செய்யகலவையின்மொய் கொடே. |
(இ-ள்.) வய்யம் முழுது உடை - பூமிமுழுவதையும் (தனக்கு உரியதாக) உடைய, ஐயன் - தலைவனான தருமனது, இளவல்உம் - தம்பியான வீமனும்,- மனை வைகுவோர் உய்யும் வகை புகல் ஐயை உரையினை - (தங்கட்குத் தங்க இடங்கொடுத்து) வீட்டிலிருப்பவர் எல்லோரும் பிழைத்திருக்கும்படி உபாயங்கூறிய (தனது) தாயான குந்தியின் வார்த்தையை, ஒய்யென் விரைவொடு கை கொளா - மிக்கவிரைவோடு அங்கீகரித்து,- வைகலுடன்- பொழுதோடே [பலிசெல்லுங்காலம் கடவாமல்],- செய்ய மலர்கொடு-செந்நிறமுள்ள பூக்களைக்கொண்டும்,செய்ய துகில் கொடு- செந்நிறமுள்ள ஆடையைக்கொண்டும், செய்ய கலவையின் மொய் கொடு - செந்நிறமுள்ள கலவைச்சாந்தின் மிகுதியைக்கொண்டும்,- மெய்யை - (தன்) உடம்பை, வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் - கொடியபக னென்னும் அவ்வரக்கனது உடம்பு சொரியும் இரத்தத்தால் (பின்புபூசப்படுவது) போல, எழில் அணி செய்தனன் - அழகிய அலங்காரஞ் செய்துகொண்டான்; (எ-று.) செவ்வணி செய்தல், பலிப்பொருளுக்கு உரியதென அறிக. தாயின் கட்டளையை நிறைவேற்றுதலிற் கொண்ட விரைவோடு, போர்நேர்கிறதென்ற களிப்பினாற் கொண்ட விரைவையுங் காட்டுதற்கு, 'ஒய்யென் விரைவு' எனப் பலசொல் கொடுத்தார். வீமனை 'தருமன் தம்பி' என்றது, தனது சிரமம் பாராமல் நல்லோரைக் காக்கும் உதவியைச் செய்யுங் கருத்தை யுடையவ னென்று காட்டு |