பக்கம் எண் :

248பாரதம்ஆதி பருவம்

தற்கு. கைகொளா என்பதில், கை என்பது-தமிழுபசர்க்கம். இனிப்
பெய்யுங்குருதியை 'பெய்த குருதி' என்றது - இயல்புபற்றிவந்த காலவழுவமைதி;
தெளிவுபற்றிய தெனினுமாம். வய்யம் = வையம். கலவை -
(பலவகைவாசனைப்பொருள்களோடுங்) கலந்த சந்தனம். பின்னிரண்டடி -
தற்குறிப்பேற்றம். இக்கவி - பெரும்பாலும் தையச் சந்தத்தால் வந்தது.   (459)

50.- வீமன் சோற்றுவண்டியில் ஏறிச்செல்லுதல்.

துற்ற பலகறி செற்றி யமலைசெய் துப்பொ ரிமகிரி யொப்பெனச்
சற்று மிடனற மொய்த்த சகடிரு சக்ர வுருளைக ளுய்க்கவே
உற்ற நிரைநிரை பத்தி படவலி யொத்த பகடுகள் கட்டினான்
நெற்றி மிசையொரு கொற்ற வடலரி நிற்ப தெனவொளிர்
                                     பொற்பி[னான்.

    (இ-ள்.) துற்ற - மிகுதியாய்ப் பொருந்திய, பல கறி - பலவகைக் கறிகளை,
செற்றி - இடையிடையே இட்டு, அமலை செய் - பெருந்திரளாகச்செய்த, துப்பு -
சோறு, ஓர் இமம் கிரி ஒப்பு என - (வெண்ணிறத்தாலும் பெருவடிவாலும்)
இமயமலைக்குச் சம மென்று சொல்லும்படி,சற்றுஉம் இடன் அற மொய்த்த -
சிறிதும் வெற்றிடமில்லாதபடி நெருங்கப்பெற்ற, சகடு-வண்டியை, இருசக்ரம்
உருளைகள்-வட்டவடிவமான இரண்டுசக்கரங்கள், உய்க்க - இயங்கும்படி, பத்தி
பட - ஒழுங்காக, நிரை நிரை உற்ற - வரிசைவரிசையாய்ப் பொருந்திய, வலி
ஒத்த பகடுகள் - வலிமையில் ஒன்றுக்கொன்று சமமான கடாக்களை, கட்டினான்
- கட்டி,- நெற்றி மிசை- (அவ்வண்டியின்) முற்பக்கத்திலே, ஒரு கொற்றம் அடல்
அரி நிற்பது என - வெற்றியைத் தரும் ஓர் ஆண்சிங்கம் நிற்பது  போல, ஒளிர்
- விளங்கி நிற்கிற, பொற்பினான் - பொலிவையுடையவனானான்; (எ-று.)

     ஹிமகிரி - வடசொல். சகடு - ஸகடம்: பத்தி = பங்க்தி: வட சொல்லின்
விகாரங்கள். இரட்டையிரட்டையாய்ப் பலபகடுகள் கட்டினானென்பார் 'நிரைநிரை
பத்திபடக் கட்டினான்' என்றார், 'சக்கிர வுருளை' என்ற பாடம் சந்தத்திற்கு
முரணாம்.

     தத்த தனதன தத்த தனதன தத்த தனதன தத்தனா என்றது இதற்குச்
சந்தக்குழிப்பு.                                                 (460)

வேறு.

51.- வீமன் வனத்திற்சென்று பகனை நாடுதல்.

மண்ட லங்கொள்வடி வுடன டற்பரிதி மண்ணில் வந்ததென மறுகினிற்,
கண்ட கண்டமுனி குலம டங்கவிரு கண்க ளிக்கவரு காட்சியான்,
வெண்ட ரங்கமென வீசு பேயிரதம் விஞ்சு கானநெறி மீதுபோய்,
அண்ட ரண்டமுக டுறவ ளர்ந்தனன ரக்க னின்றவுழி யறியவே.

     (இ-ள்.) அடல்-வலிமையையுடைய, பரிதி - சூரியன், மண்டலம் கொள்
வடிவுடன் - வட்டவடிவத்தைக்கொண்ட (தனது) உருவத்துடனே, மண்ணில்
வந்தது என - பூமியில் வந்தமைபோல, மறுகினில் கண்ட கண்ட முனிகுலம்
அடங்க இரு கண் களிக்க வரு - வீதியிலே பார்த்தபார்த்த அந்தணர்கள் கூட்ட
மெல்லாம் இரண்டு கண்களுங் களிப்படையும்படி வருகிற, காட்சியான் -
தோற்றத்தை யுடையவனான வீமன்,-வெள் தரங்கம்என வீசு பேய்இரதம்விஞ்சு
கானம் நெறி மீது போய் - வெண்மையான அலைகள் வீசுவது போல்
தோன்றுகிற கானல்மிகுந்த காட்டுவழியிலே சென்று,-