அரக்கன் நின்ற உழி அறிய - பகன்நின்ற இடத்தை அறியும் பொருட்டு, அண்டர் அண்டம் முகடு உற வளர்ந்தனன் - தேவர்கள் வசிக்கிற அண்டகோளத்தின்மேலிடத்தை அளாவ நிமிர்ந்தான்; திரிவிக்கிரமனைப்போலவளர்ந்தானென்றுகொள்ளற்க: அரக்கனிருக்குமிடம் காண ஓங்கியதை உயர்வுநவிற்சியாற் கூறியதென்க. செந்நிறமுள்ள மலர் துகில் கலவைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு விளங்குகிற வீமனுடைய பருத்தவடிவத்துக்கு, சூரிய மண்டலம் உவமை. சூரியனுக்கு அடல் - நெடுந்தூரம் ஒளியைச் செலுத்தி இருளை அறக்கெடுக்கும் வலிமை. கண்களாற்கண்டு மனங்களித்தலையே கண்ணின்மே லேற்றி 'கண்களிக்க' என்றார்: இது, ஒருபொருளின் வினையை மற்றொரு பொருளின்மேலேற்றிக் கூறும் உபசாரவழக்கு. பேயிரதம் - பேய்த்தேர். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்மாச்சீர்களும் ஏழாஞ்சீர் விளச்சீரும்மற்றயவை விளங்காய்ச்சீர்களுமாகிய எழுசீராசரியவிருத்தங்கள். (461) 52.-இதுமுதல் மூன்று கவிகள் - ஒருதொடர்: வீமன் பகனைக் காணுதலும், சோற்றை உண்ணுதலும். களித்தவெற்புதவுநீலமாநதி யடுத்தகுன்றிலொருகழிமுழைத் தெளிந்தபற்களொடுநாவைமென்றுநனிதின்றுவெம்பசி கொடீயினால் முளிந்துமுற்றுமனம்வேவவேவநெடுமூச்செறிந்துபுகைமுகனுடன்[ன். விளிந்ததொத்துவழிகுழியநின்றுசுழல்விழிநிரைத்தயரும்வெகுளியா |
மூன்று கவிகள் - ஒரு தொடர். (இ-ள்.) களிந்தம் வெற்பு உதவு - களிந்தமலையினாற் பெறப்பட்ட, நீலம் மா நதி - நீலநிறமுடைய பெரிய யமுனாநதியை, அடுத்த - அடுத்துள்ள, குன்றில் - ஒருமலையிலே, ஒரு கழி முழை - ஒருபெரிய குகையிலே, கொள் வெம் பசி தீயினால் - (தான்) கொண்ட கொடிய பசியாகிய வயிற்றழிலினால், தெளிந்த பற்களொடு நாவை நனி மென்று தின்று - வெண்மையாய் விளங்குகிற பற்களொடு நாக்கை மிகுதியாக மென்றுதின்றுகொண்டு, மனம் முற்றுஉம் முளிந்து வேவ வேவ - (இன்னும் இரைவாராமையா லாகிய கோபத்தால்) மனம் முழுவதும் காய்ந்து மிகவும் வேவ, நெடு மூச்சுஎறிந்து-பெரு மூச்சு விட்டுக்கொண்டு, புகை முகனுடன் - புகை வெளிக்கிளம்பப்பெற்ற முகத்தோடு, விளிந்தது ஒத்து வழி குழியநின்று - மறிந்தாற்போல (த் தான் செல்லும்) வழியும் குழிபடும்படிநின்று, சுழல் விழி நிரைத்து - சுழலுகிற கண்ணின் நோக்கங்களை எல்லாப்புறமுஞ் செலுத்தி, அயரும் வெகுளியான்-(தன்னையும்) மறந்த கோபத்தை யுடையவனாய்,- (எ-று) "உற்றுநின்றநிலை" (53) என்க. 'முழை' என்றதற்கும் 'உற்றுநின்ற' என்பதே முடிக்குஞ்சொல். அரக்கன் தன்மையை இனிது வருணித்தது, தன்மைநவிற்சியணி. களித்த மலையினின்று உற்பத்தியாதலால், யமுனைக்கு, 'காளிந் தீ' என்றுபெயர்; அந்நதியின்நீர், நீலநிறமுடையது. விளிதல் - பூகம்பம் முதலிய காரணங்களால் தரை இயல்புகெடுதல். கழி - உரிச்சொல். |