பக்கம் எண் :

250பாரதம்ஆதி பருவம்

53. வெற்ெ்றலும்பினுயராசனந்தனில் விகங்கநீழலிடைமேவரச்
சுற்றுநின்றுபலசம்புகங்கடுதி சொல்லவல்லன்மிகுதுன்முகன்
உற்றுநின்ற நிலைகண்டுகந்திவனையுயிரொழிந்
                              திடவுடற்றினால்
இற்றையுண்டிகெடுமென்றுபண்டியிலெடுத்தவல்சிநுகரிச்சையா[ன்.

     (இ-ள்.) வெறு எலும்பின் உயர் ஆசனந்தனில் - தசைப்பற்றிலாத
எலும்புகளினா லாகிய உயர்ந்த ஓர் ஆசனத்தில், விகங்கம் நீழலிடை - (கழுகு
பருந்து முதலிய) பறவைகளின் நிழலிலே, மேவர - (அப்பறைகள்) விரும்பவும்,
பல சம்புகங்கள் சுற்றுஉம் நின்று துதிசொல்ல - அநேக நரிகள் சுற்றிலும் நின்று
தோத்திரங்களைச்சொல்லவும், அல்லல் மிகு துன்முகன் - (காண்பவர்களுக்குத்)
துன்பம் மிகுதற்குக் காரணமான கெட்டமுகத்தையுடைய பகனென்ற
அவ்வரக்கன், உற்றுநின்ற - பொருந்திநின்ற,- நிலை- நிலைமையை, கண்டு -
பார்த்து,உகந்து - மனம்மகிழ்ந்து,- இற்றை இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
உண்டி கெடும் என்று - இப்பொழுதே இவனை உயிர் நீங்கும்படி கொன்றால்
பின்பு இவ்வுணவு அசுத்தமாய் வீணாய்விடு மென்று எண்ணி, பண்டியில் எடுத்த
வல்சி நுகர் இச்சையான் - பண்டியில் ஏற்றிய உணவை (அவனைக்
கொல்லுமுன்னமேதான்) உண்ணும் ஆசையை யுடையவனாய்,- (எ-று.)-
"அருந்தினான்" என அடுத்த கவியோடு முடியும்.

     வெற்றெலும்பு, இவன் நாள்தோறும் கொன்றுதின்ற பிராணிகளினுடையவை.
இவனைச் சிலகொடிய பறவைகள் விரும்பிவட்டமிடுவதற்கும், பல நரிகள் சூழ்ந்து
துதித்தற்குங் காரணம் - இவன் தசை பெற்று உண்ணுங்கால் தமக்கும் ஏதேனுஞ்
சிறிது மிச்சில்கிடைக்கு மென்ற அவா. நீழல் - நீட்டல். நரிகள்
ஊளையிடுவதையே துதிகூறுதலாகக் குறித்தார். வீமன் போரின்றித் தினவு
கொள்ளுந்தோளை யுடையவனாதலால், கொடிய அவ்வரக்கனைக்
கண்டவளவிலே மகிழ்ச்சியுற்றான். 'சுற்றின்று' என்றும் பாடம்.             (463)

54. வன்பினாலுரகபதியளித்தநெடு வாரியாரமுதமுண்டகோ,
முன்பினாகவுயர்சகடிருந்தெதிர்முகந்துகொண்டுவரைமுழையுளே,
அன்பினாலடையுமன்னமென்னநிறையன்னமுற்றவுமருந்தினான்,
பின்பினாகவிதுகண்டுவெம்பசிகொள்பகனுமெய்தியிவைபேசுவான்.

     (இ-ள்.) வன்பினால் - (தனது) வலிமையைக்கண்டதனால், உரக பதி
அளித்த - சர்ப்பராசனாகிய வாசுகி (தனக்குக்) கொடுத்த, நெடுவாரி ஆர்
அமுதம் - பெரிய பாற்கடலினின்று (முன்பு) தோன்றிய பெறுதற்கரிய
அமிருதத்தை, உண்ட-, கோ அரசனான வீமன், உயர் சக - உயர்ந்த
அவ்வண்டியிலே, முன்பின் ஆக எதிர்  இருந்து - முன்பின்னாகத்
திரும்பியிருந்து,- வரை முழைஉளே அன்பினால் அடையும் அன்னம் என்ன -
மலைக்குகையினுள்ளே அன்போடு புகும் அன்னப்பறவைபோல, நிறை அன்னம்
முற்றஉம் முகந்து கொண்டு அருந்தினான் - (அவ்வண்டியிலே) நிறைந்த
அச்சோறுமுழுவதையும் அள்ளியெடுத்து (த் தனது பெருவாயினுள்ளேபுகும்படி)
புசித்தான்; பின் - பின்பு: வெம்பசிகொள் பகன்உம் - கொடியபசியைக் கொண்ட
பகனென்பவனும், இதுகண்டு - இவன் இவ்வாறு உண்ணு