தலைப் பார்த்து, பின் ஆகஎய்தி - வீமன்பின்னே வந்து, இவை - இச்சொற்களை, பேசுவான்-; (எ-று.)- அவற்றை மேலே காண்க. வெண்மையான சோற்றுத்திரளை நெடியபெரிய வாயினுள்ளே விரையச் செல்லுதற்கு, வெண்ணிறமான அன்னப்பறவை நெடிய பெரிய மலைக்குகையினுள்ளே விருப்பத்தோடு செல்லுதல் உவமை. வண்டியில் வீமன் முன்பின்னாக மாறியிருந்து உண்கின்றதனால், எதிர்வந்த அரக்கன் வீமனுக்குப் பின்னாயின னென்க. அன்னம் - பறவையைக் குறிக்கும்போது ஹம்ஸம்என்ற வடசொல்லின் திரிபும், சோற்றைக் குறிக்கும்போது அந்நம் - என்ற வடசொல்லின் திரிபுமாம். (464) 55.- பகன்வீரவாதங்கூறிக்கொண்டு வீமனைக் கைகளாற் புடைத்தல். புலிதனக்கிடுவிடக்கைநின்றதொரு பூஞைதின்னுமதுபோலநீ பலியனைத்தையும்விழுங்கினாலிது பலிக்குமோவெளிமைபாரெனா ஒலிபடக்கிரியிலுருமெறிந்ததென வோடிவந்துபிடரொடியவே வலிபடப்பணைவிறற்றடக்கைகொடு மாறிமாறிமுறைசீறினான். |
(இ-ள்.) 'புலிதனக்கு இடு விடக்கை - புலிக்கென்று இட்டு வைத்த இறைச்சியை, நின்றது ஒரு பூஜை - அருகில் நின்றதொரு பூனை, தின்னுமது போல - தின்பதுபோல, நீ-, பலி அனைத்தைஉம் விழுங்கினால்- (எனக்கென்று செலுத்திய) உணவுமுழுவதையும் உண்டால், இது பலிக்கும்ஓ - இது சித்திக்குமோ? எளிமை பார் - (எனது) எளிமையைப் பார்', எனா - என்றுசொல்லி, ஓடிவந்து-, (பகன்), கிரியில் உரும் எறிந்ததுஎன - மலைமேல் இடி இடித்தாற் போல, ஒலி பட - பேரோசை யுண்டாக, பிடர் ஒடிய - (வீமனுடைய) பிடரி ஒடியும்படி, பணை விறல் தட கை கொடு - பருத்த வலியபெரிய (தன்) கைகளால், வலி பட - பலமாக, முறை மாறிமாறி - முறையே மாறிமாறிப் புடைத்து, சீறினான் - கோபங்காட்டினான்; (எ-று.) நீ என்னிடத்துக் கருதிய எளிமையை எனது தொழிலால் அங்ஙனமன்றெனக் காட்டுவே னென்பான், 'எளிமைபார்' என்றான்; இது - குறிப்புமொழி. கைகொடு முறை மாறி மாறி - ஒரு கைமாற்றி ஒருகையால் விடாதுஅடித்து என்க. (465) 56.-அப்புடையல்களைச் சிறிதும் இலட்சியஞ்செய்யாமல் வீமன்புசித்துக்கொண்டிருத்தல். பக்கமும்பிடருமொக்கமுட்டிகள் படப்படக்கவளபாரமாய் விக்கநின்றனவயிற்றிரண்டருகும் வீழவீழமுன்விழுங்கலும் புக்கபண்டமுடனுன்னுடற்றசை புசிப்பனெங்ஙனிவைபோவதென் றக்கடுங்கையுமிளைத்துவெஞ்சினமு மாறிநின்றனனரக்கனே. |
(இ-ள்.) பிடர்உம் - பிடரியிலும், பக்கம் உம் - விலாப்புறத்திலும், முட்டிகள் - (பகனது) முட்டியாகப்பிடித்த கைக்குத்துகள், (அதனால்) கவளம் பாரம் ஆய் விக்க நின்றன வயிறு இரண்டு அருகும் வீழ வீழ - (முன்பு) பருத்த கவளங்களாய் (உட்புகாது) |