பக்கம் எண் :

254பாரதம்ஆதி பருவம்

நிச்சயித்து நிற்பதுபோல,- வட்டம் வட்டம் வர - மண்டலகுதியால் மாறி மாறி
வர, ஒட்டி ஒட்டி - (ஒருவரோடொருவர்) கலந்து கலந்து, உறு - செய்கிற, மல்
தொழில் செருவில் - மல்லுத்தொழிலாகிய போரிலே, மட்டியா - தொடங்கி,
முட்டி யுத்தம் நிலை - கைக்குத்துச்சண்டை நிலைகளில், கற்ற கற்ற வகை முற்ற
முற்ற - தாம் தாம் அறிந்த வகைகள் எல்லாவற்றாலும், எதிர் முட்டினார் -
(ஒருவரையொருவர்) எதிரே குத்தினார்கள்; (எ-று.)

     பட்டாபிஷேகம் பெற்று அரசாளும் பல சிறந்த அரசர்களைப் போரில்
வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக அவர்கள் தலைமீது தன்கால்களை
வைப்பவ னென்பது, அவ்வரசர்களால் தங்கள் தலை தன்கால்களிற்படும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கப்படுபவ னென்பதும், முதலடியின் கருத்து.
வட்டம் என்றமண்டல கதியில், வலசாரி இடசாரியாகிய கதிவிசேடங்களும்
அடங்கும். முட்டி யுத்தம் - குத்துச்சண்டை. இச்செய்யுளிலும் 57 - இல்போல
வல்லிசைவண்ணமும் சந்தப்பொருத்தமுங் காண்க.                (469)

60. கரங்கரத்தொடுபிணங்கவுந்தமது கால்கள்கால்ளொடு
                                    கட்டவும்
சிரஞ்சிரத்தினொடுதாக்கவுங்கொடியசிங்கவேறனைய
                                   திறலினார்
உரங்களிட்டும்வளர்தோள்களிட்டுமெதிரொத்திமற்
                                சமருடன்றபி
மரங்களிட்டுமுயர்கற்களிட்டுநெடுவாதினோடிகலி
                              மோதினார்.[ன்

     (இ-ள்.) கொடிய சிங்கம் ஏறு அனைய திறலினார் - கொடிய
ஆண்சிங்கத்தை யொத்த வலிமையையுடைய அவ்விருவரும்,- தமது கரம்
கரத்தொடு பிணங்கஉம் - தங்கள் கைகள்கைகளோடு பின்னவும், கால்கள்
கால்களொடு கட்டஉம் - கால்கள் கால்களோடு பிணங்கவும், சிரம் சிரத்தினொடு
தாக்கஉம் - தலை தலையோடுமோதவும், உரங்கள் இட்டுஉம் - மார்புகளைச்
சேர்த்தும், வளர்தோள்கள் இட்டுஉம் - வளர்ந்த புயங்களைச் சேர்த்தும், எதிர்
ஒத்தி - (ஒருவரை யொருவர்) எதிரிலேதாக்கி, மல் சமர் உடன்ற பின் -
மற்போரை உக்கிரமாகச் செய்தபின்பு, மரங்கள் இட்டுஉம் - மரங்களைப்
பெயர்த்து மேலெறிந்தும், உயர் கற்கள் இட்டுஉம் - பெரிய கற்களை யெடுத்து
மேல்வீசியும், நெடு வாதினோடு - மிக்க வீரவாதத்துடனே, இகலி - மாறுபட்டு,
மோதினார் - போர் செய்தார்கள்; (எ-று.)

    உயர்கல்-வினைத்தொகை,வாது-வாதம் என்ற வடசொல்லின்திரிபு.
'உடன்றுபின்' என்றும் பாடம்.                                  (470)

61. வீமன் உதைக்கப்பகன் ஒடுங்கிச் சோர்ந்து திகைத்தல்.

உலாவருந்தனதுதாதையொத்தவலி யுடையகாளை
                                    கழலுதையி
னால்,
விலாவொடிந்துதடமார்பொடிந்துமிடல் வெரினொடிந்துபடுவெம்
                                            பிணப்,
புலாலளைந்தவிருகவுளொடிந்துபொரு புயமொடிந்துகடை
                                     யொத்தவாய்,
நிலாவெழுங்கொடியவெயிறொடிந்துசெயலின்றிவாணிரு
                                       தனிற்கவே.

இதுவும் அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) உலா வரும் - (எங்குந் தடையின்றி) இயங்குந்தன்மையுள்ள, தனது
தாதை - தனது தந்தையாகிய வாயுவை, ஒத்த-, வலிமை உடைய -
வலிமையையுடைய, காளை - இளவீரனான வீமனது,