பக்கம் எண் :

258பாரதம்ஆதி பருவம்

மகிழ்ந்து, புனல் ஓடையின் குழுமி - நீர் ஓடையில் திரளுதல்போல ஒன்றுகூடி,
நனி வியந்து - மிகவும் கொண்டாடி, இசை விளம்பினார்-
(அந்தவீமசேனனுடைய) புகழைக் கூறினார்கள்; (எ -று.)

     துஷ்டநிக்கிரகஞ்செய்து சிஷ்டரைப்பரிபாலிக்குஞ் செயல்இவ்வீமனுக்கும்
இருத்தலால், 'மால்கொல் ' என்றனர். ஓடையில்புனல் திரண்டு தாமரைமலர்
மலர்ந்திருத்தல்போல, இந்நகரில் சனங்கள் திரண்டு மகிழ்ச்சியால் தம் கண்கள்
மலர்ந்திருந்தன ரென்க.                                     (475)

வேத்திரகீயச்சருக்கம் முற்றிற்று.
------

ஐந்தாவது
திரௌபதி மாலையிட்ட சருக்கம.்

     திரௌபதியானவள் விவாகத்துக்குஉரிய பூமாலையை
அருச்சுனனுடையதோள்களிலிட்ட செய்தியைக் கூறுகின்ற சருக்க மென்று
பொருள். அருச்சுனனுக்கு உரிமைபூண்ட திரௌபதியைத் தாயின் சொற்படி
பாண்டவர் ஐவரும் மணஞ்செய்துகொண்ட வரலாறு இச்சருக்கத்திற்
கூறப்படுகின்றது.

     இச்சருக்கத்திற் கடவுள்வாழ்த்துச்செய்யுள் *காணப்படவில்லை. மானசிக
மாத்திரமாகக் கடவுள்வணக்கம் நிகழ்ந்துவிட்ட தென்றாவது, கடவுள்வாழ்த்தாக
நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரால்
எழுதாது விடப்பட்டு எஞ்சிய தென்றாவது கொள்க.

1.- கவிக்கூற்று: சருக்கத்துக்குத் தோற்றுவாய் செய்தல்.

இங்கிவ ரிவ்வா றிந்த விருக்கையி லிருக்கு நாளில்
அங்கண்மா ஞால மெங்கு மரக்குமா ளிகையில் வீந்தார்
பங்கமில் குணத்தான் மிக்க பாண்டவ ரென்று மாழ்கத்
துங்கவேற் றுருப தன்றான் சூழ்ந்தது சொல்ல லுற்றாம்.

     (இ-ள்.) இவர் - இப்பாண்டவர்கள், இ ஆறு - இந்தவிதமாய், இங்கு -
இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்], இந்த இருக்கையில் - கீழ்க்கூறிய அந்தணன்
மாளிகையில,் இருக்கும் நாளில் - தங்கியிருகுங் காலத்தில்,- அம்கண் மா ஞாலம்
எங்கும் - அழகிய இடமகன்ற பெரிய பூமிமுழுவதிலுமுள்ளோரெல்லோரும்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் அரக்குமாளிகையில் வீந்தார்
என்றுமாழ்க - 'குற்றமற்ற நற்குணங்களாற்சிறந்த பாண்டவர்கள் அரக்கு
மாளிகையில் இறந்தார்கள்' என்றுகருதி மனம்வருந்த,- துங்கம் வேல் துருபதன்
சூழ்ந்தது - சிறந்த வேலாயுதத்தையுடையதுருபத



        * "குண்டலமிலங்கச்சங்குமாழியுங்குலவுகாந்தி
         மண்டலந்துதிக்குந்திங்களிரவிமேல்வடிவந்தூண்ட
         விண்டலத்திலங்குபீதவவுணனைவெறுத்துவீழ்த்த
         புண்டரிகங்கள்பூத்தபுயலினைப்போற்றிசெய்வாம்"

என்கிற செய்யுளொன்று, இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தாகச் சிலபிரதிகளிற்
காணப்படுகிறது.