நீரற்றகாட்டுவழியிற் செல்வோர்க்கு நீர்நிறைந்ததொருகுளம் எதிரில் தோன்றினால் மிக்கமகிழ்ச்சியைத்தந்து அவர்களுடைய தாகத்தைத் தணிவித்து ஆற்றுவதுபோல, பாண்டவர்க்கு மகிழ்ச்சியைவிளைவித்து வருத்தத்தை ஆற்றுபவனாய் வியாசன் வந்து நின்றன னென்க. வேதங்களிலுள்ளவைபோன்ற சாரமான பலவிஷயங்கள் பொருந்துதலால் அனைவரும் 'ஐந்தாம் வேதம்' என்று கொண்டாடும்படி இவன் பாண்டவ சரித்திரத்தைப் பாரதம் என்ற இதிகாசமாகச் செய்தது பாண்டவர்காலத்தின் பின் நடந்த செயலாயினும், பிற்பட்டவராகிய கவி, அதனையுஞ் சேர்த்து 'சதுர்வேதங்கள் பாரதந்தன்னோ டைந்தாம்படியினாற் பகர்ந்த மூர்த்தி' என்றார். சாரதந்திரம் - எல்லாச் சாஸ்திரங்களினுஞ் சிறந்ததான வேதாந்தம். பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனாய்த் தேவவிருடியாகியநாரதன் தத்துவஞானத்திலும் தவவொழுக்கத்திலும் லோகோபகாரஞ் செய்தலிலும் மிகச்சிறந்ததலால், வியாசனுக்கு அவனை உவமைகூறினார். நாரதர் என்ற பெயர்- ஆத்தும ஞானத்தை உபதேசிப்பவனென்றும், மனிதர்களுக்கு உள்ள ஒற்றுமையைக்கெடுப்பவ னென்றுங் காரணப்பொருள்படும். நரன்-ஆத்மா, அதற்குஉரிய ஞானம் - நாரம்; த-கொடுத்தல், நீரஸம்-நிர்+ரஸம், ரஸம் -நீர்: அது இல்லாதது, நீரஸம்: வடமொழிப்புணர்ச்சி: அது நீரதம் எனத் திரிந்தது, (480) 6-வியாசன் பாண்டவர்க்கு இனி நடக்குஞ்செய்தியைக் குறிப்பாகக்கூறல். வணங்கலும்வாழ்த்திமுந்த வந்துநீர்வாழ்வுசெய்தீர் இணங்கிநுங்கேண்மைகொள்வானிச்சையால்யாகசேனன் அணங்கினையன்றுவேள்வியழலிடையளித்தானந்தச் சுணங்கணிமுலையாணாளைச்சூட்டுவடொடையன்மாதோ. |
இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர். (இ-ள்.) வணங்கலும்-(அப்பெழுது பாண்டவர்கள்) வணங்கினவுடனே,- (வியாசமுனிவன்), வாழ்த்தி- ஆசீர்வாதஞ்செய்து, (அவர்களைநோக்கி), 'நீர் முந்த வந்து வாழ்வு செய்தீர் - நீங்கள் முன்னேவருதலால் வாழ்வுபெற்றீர்கள்; யாகசேனன் - துருபதராசன், இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் - (உங்களோடு) சம்பந்தஞ்செய்து உங்களுறவைக் கொள்ளக்கருதிய விருப்பத்தால், அன்று- அக்காலத்தில், வேள்வி அழலிடை- யாக அக்கினியிலே, அணங்கினை-சிறந்தமகளை (திரௌபதியை), அளித்தான் - பெற்றான்; அந்த சுணங்கு அணி முலையாள் - தேமல் படர்ந்த தனங்களையுடைய அக்கன்னிகை, நாளை - நாளைக்கே, தொடையல் சூட்டுவள் - மணமாலையைச் சூட்டுவாள்; (எ-று.)-மாது, ஓ - ஈற்றசைகள். 'முந்தவந்து நீர் வாழ்வு செய்தீர்' என்பதற்கு - திரௌபதி மணமாலை சூட்டும் தினம் நாளைக்கே யாதலால் நீங்கள் முந்திவந்ததனால்வாழ்வுபெற்றவராவீர் என்பது கருத்து. வாழ்வுசெய்தீர் என் |