(இ-ள்.) கங்கை பூ துறை-கங்காநதியினது பொலிவுள்ள நீர்த்துறையை, புத்திரன் பேரர்-(அக்கங்கையினது) குமாரனாகிய வீடுமனுடைய பௌத்திரராகிய அப்பாண்டவர்கள், அடைந்த போதில் -அடைந்தசமயத்தில்,-குத்திரம் விஞ்சை வேந்தன் - வஞ்சனையையுடைய மாயவித்தையையுடைய தலைவனாகிய (சித்ரரதனென்னும்) கந்தருவன், குறுகி - நெருங்கிவந்து, வெம் கொடு போர் செய்ய- மிகக்கொடியபோரைச் செய்ய,-(அப்போரில்), தேவர் கோன் மதலை - தேவர்கட்கு அரசனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன், இமைப்பின் - ஒருமாத்திரைப் பொழுதிலே, சித்திரம் தேரோன் தன்னை-அழகிய தேரையுடைய அந்தச்சித்திரரதனை,செம் தீ அத்திரத்து-சிவந்த நெருப்பு மயமான ஆக்கி நேயாஸ்திரத்தினால், இருந்தைதேரோன் ஆக்கினன்-கரிபட்ட தேரையுடையவனாகச்செய்தான்[அவனதுதேரைக்கரியாகுமாறு எரித்தான் என்றபடி]; (எ-று.) - அம்மா - வியப்பிடைச்சொல், பாண்டவர் கங்கையைச்சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில், அங்குப் பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்த சித்திரரத னென்னும் மறுபெயர்கொண்ட அங்காரபர்ணனென்னும் கந்தர்வன், இவர்கள்வருகை தன் நீர்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிக் கோபங்கொண்டவனாய், இவர்களை 'இங்கு வரலாகாது' என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர் தொடங்க, அப்போரில்முன்நின்ற அருச்சுனன் ஆக்கிநேயாஸ்திரத்தால் அவன்மாயைகளை ஒழித்ததோடுஅவனதுதேரையும் கரியாக்கின னென்பதாம். "ஸ்த்ரைணக்லுப்த ஜலகேலிம் உத்த தம்-தத்ரசித்ரரத மாஹி தாஹவம் - ஆததாந தநயஸ் ஸசீபதே:- ஆஸு தக்தரதம்அஸ்த்ரவஹ்நிநா" என்றது பாலபாரதம். இவனை மாயவித்தை வல்லவனென்றும்கந்தர்வனென்றும் வியாசபாரதங் கூறுவதற்கு ஏற்ப, விஞ்சைவேந்தனென்பதற்கு -வித்தியாதர ராசனென்று கொள்ளாமல் மாயவித்தையில்வல்ல கந்தர்வ ராஜனென்றுபொருள் கூறப்பட்டது. இருந்தை- கரி.(483) 9.- சித்திரரதன்சொற்படி பாண்டவர் தௌமியனுடன் வழிகடத்தல். தோற்றவன்றிரிந்துமீண்டு தோழனவ்விசயற்காக ஆற்றரும்புனலும்யாறு மவன்றுணையாகநீந்திச் சாற்றுமுற்கசதீரத்துத் தௌமியமுனியைக்கண்டு போற்றிமற்றவன்றனோடும் புன்னெறிப்புறம்விட்டாரே. |
(இ-ள்) தோற்றவன்-(இவ்வாறு அருச்சுனனிடம்) தோல்வியடைந்த சித்திரரதன், மீண்டு திரிந்து-பின்பு பகைமை நீங்கி, அ விசயற்கு தோழன் ஆக - அந்த அருச்சுனனுக்கு நண்பனாக,-(அதன்பின் பாண்டவர்கள்), ஆற்று அரு புனல்உம் யாறுஉம்- கடத்தற்கு அரிய நீர்நிலைகளையும் நதிகளையும், அவன் துணை ஆக நீந்தி - அந்தச்சித்திரரதனைத் துணைவனாகக்கொண்டு அவனுதவியாற்கடந்து,- சாற்றும் உற்கசதீரத்து தௌமியமுனியை கண்டு போற்றி -(அந்தக்கந்தர்வனாற்) கூறப்பட்ட உற்கசதீர்த்தத்தின் கரையிலே தௌமியனென்னும் முனிவனைக்கண்டுவணங்கி, மற்று- |