பின்பு, அவன்தனோடுஉம் புல் நெறி புறம் விட்டார்-அந்தத்தௌமியனுடனே சென்றுசிறிதுமிச்சமாய்நின்ற வழியினெல்லையைக் கடந்தார்கள்; (எ -று.) அருச்சுனன் சித்திரரதனது தேரைக் கரியாக்கியபின் அந்த அஸ்திரத்தினாலேயே அவனது அம்புகளையும் உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து அவனைத் தலைமயிர்பற்றியிழுத்துவந்து தருமபுத்திரனது பாதத்திற்போகட, தருமபுத்திரன் அவன்மனையாளான கும்பீநசியின் வேண்டுகோளின்படி அருள்கொண்டு அவனை விடுவிக்க, அவன் இவர்கள் பாண்டவரென்று அறிந்து தன்பிழையைப் பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்றபின் நண்புபூண்டு சிறந்த ஐந்நூறு குதிரைகளைக்கொடுப்பதாக வாக்களித்துத் தானறிந்த மாயவித்தையை அருச்சுனனுக்குக் கற்றுக்கொடுத்து அதற்கு ஈடாக அவனிடமிருந்து ஆக்கிநேயாஸ்திரத்தை உபதேசம்பெற்று அதன்பின் அவர்களைநோக்கி 'உங்களுக்குப் புரோகிதனொருவன் இருத்தல் வேண்டும்' என்று சிலகதைகளை யெடுத்துக்காட்டிக் கூறி, 'அதற்கு ஏற்றவன் நீங்கள் செல்லும்வழியிலுள்ள உற்கசமென்னுந் தீர்த்தத்தின் கரையி லிருக்கிறவனும் தேவலமுனிவனது தம்பியுமான தௌமியமுனிவனே' என்றும் சொல்லி, இடையிலுள்ள ஆற்று நீர்ப்பெருக்கைக் கடத்தற்குவெண்டியநாவாயையும் உதவி, அப்பாற் செல்லுதற்கு நல்வழியையும் அடையாளத்தோடுசொல்லி அனுப்பியபின், அவ்வாறே, பாண்டவர் இடைவழியில் அம்முனிவனைக் கண்டு வணங்கித் துதித்து வேண்டிப்புரோகிதனாகக்கொண்டு அப்பால் அவன் வழிகாட்டிக்கொண்டு முன்செல்ல அவனைத்தொடர்ந்து நடப்பாராகிஅவன் கூறும் இனியவார்த்தைகளால் வழிநடை வருத்தந் தெரியாமலே அரியவழியை எளிதிற்கடந்து சென்றனரென்ற விவரத்தைப் பிறநூல்களால்அறிக. 'திரிந்து 'என்றவிடத்து 'தெரிந்து' என்றும்படமுண்டு. (484) 10.- சூரியோதய வருணனை. புலர்ந்தனகங்குற்போதும் பொழிதருபனியுஞ்சேர மலர்ந்தனமனமுங்கண்ணும் வயங்கினதிசையும்பாரும் அலர்ந்தனதடமுங்காவு மார்த்தனபுள்ளுமாவும் கலந்தனகுருகும்பேடுங் கலித்தனமுரசுஞ்சங்கும். |
(இ-ள்.) கங்குல் போதுஉம்-இராப்பொழுதும், பொழிதருபனிஉம்-(அவ்விரவிற்) சொரிகிற பனியும், சேர புலர்ந்தன-ஒழுங்கு நீங்கின;(அப்பொழுது), மனம்உம் கண்உம்- (நிலவுலகத்தாரது) மனமும், கண்களும், மலர்ந்தன-மலர்ச்சிபெற்றன; திசைஉம்பார்உம்-எட்டுத்திக்குக்களும் பூமியும், வயங்கின - விளக்கம்பெற்றன; தடம்உம்காஉம்-தடாகங்களும் சோலைகளும், அலர்ந்தன - மலர்ச்சி பெற்றுவிளங்கின; புள்உம்மாஉம் - பறவைகளும் விலங்குகளும், ஆர்த்தன - ஆரவாரஞ்செய்தன; குருகுஉம்பேடுஉம்-சக்கரவாகப் பறவைகளும் அவற்றின் பேடைகளும், கலந்தன-(ஒன்றோடொன்று) கூடின; முரசும் சங்கும்-, கலித்தன- முழங்கின; (எ-று.) |